‘வரலாற்றைப் பதிவு செய்வதில் கலைகளுக்கு முக்கியப் பங்கு’

மோன­லிசா

ஒரு சமூ­கத்­தின் வர­லாற்­றைப் பதிவு செய்­வ­தில் கலை­கள் முக்­கிய பங்கை வகிக்­கின்­றன என்று குறிப்­பிட்ட தமிழ் நாட்­டைச் சேர்ந்த புகழ்­பெற்ற ஓவி­யர் ட்ரொட்ஸ்கி மருது, அதில் கலை­கள் எவ்­வ­ளவு கவ­னத்­து­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் செயல்­பட வேண்­டும் என்­ப­தை­யும் விளக்­கி­னார்.

ஒவ்­வொரு கால­கட்­டத்­தி­லும் கலை­ஞர்­க­ளு­டைய படைப்­பு­கள் மனி­த­னின் வாழ்­வி­யல் முறை­கள் தொடங்கி பல்­வேறு தக­வல்­க­ளை­யும் குறிப்­பு­க­ளை­யும் மறை­மு­க­மாக உள்­ள­டக்­கும் வர­லாற்­றுச் சான்­று­க­ளா­கவே அமை­கின்­றன என்­ப­தை­யும் நினை­வூட்­டி­னார்.

இத்­த­கைய சமூ­கப் பொறுப்­பு­ணர்­வு­டன் கலைஞர்­கள் செயல்­பட வேண்­டும் என்றும் கேட்­டுக்­கொண்­டார்.

சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழாவை ஒட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த வரை­கலை வர­லாற்­றில் தமிழ் அடை­யா­ளத்­தின் பரி­ணாம வளர்ச்­சியை மையப்­ப­டுத்­திய விரி­வுரை, கலந்­து­ரை­யா­டல் நிகழ்வு சென்ற வாரம் நடை­பெற்­றது.

இந்­நி­கழ்­வில் தமி­ழில் வரை­கலை­யின் தோற்­றம் பற்­றி­யும் தன்னை அதி­கம் ஈர்த்த தமிழ் இலக்­கி­யக் கூறு­களை வரை­கலை ஓவி­யங்­க­ளாக உரு­வாக்­கிய விதங்­கள் குறித்­தும் விரி­வாக ஓவி­யர் மருது பேசி­னார்.

சங்­க­கா­லத் தமி­ழர்­க­ளின் கற்­பனையை திரைப்­ப­டங்­க­ள் எவ்­வாறு வடி­வ­மைத்­துள்­ளன என்­பன பற்­றி­யும் திரைப்­ப­டங்­க­ளுக்­காக புரா­ணக் கதா­பாத்­தி­ரங்­களை மறு­வ­டி­வ­மைக்கும் தேவை­குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

மின்­னி­லக்க ஓவி­யங்­க­ளின் முன்­னோ­டி­களில் ஒருவரான ஓவி­யர் மருது பல திரைப்­ப­டங்­க­ளுக்கு கலை இயக்­கு­ந­ரா­க­வும், 'விஎ­ஃப்­எக்ஸ்' இயக்­கு­ந­ரா­க­வும் (VFX Creative Director) பணி­யாற்­றி­யுள்­ளார்.

இவ­ரது ஓவி­யங்­கள் இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, அமெ­ரிக்கா, பிரான்ஸ், ஃபின்­லாந்து ஆகிய நாடு­களில் கண்­காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் நவம்­பர் 5ஆம் தேதி நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் இருபதுக்­கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­ட­னர். மேலும் இந்­நி­கழ்­வின் ஒரு பகு­தி­யாக இவ­ரின் மறக்­க­மு­டி­யாத பணி, அனு­ப­வங்­கள் பற்­றிய சுவா­ர­சிய கேள்வி-பதில் அங்­க­மும் நடை­பெற்­றது.

கலை­ஞ­னின் கற்­ப­னையை பார்­வை­யா­ளர்­க­ளுக்கு எளி­மை­யாக விளக்­கும் விதத்­தில் ஓவி­யங்­களை உரு­வாக்­கும் பல நுணுக்­கங்­களை இந்த கலந்­து­ரை­யா­டல் வழி அறிந்­து­கொண்­ட­தாக இந்­நி­கழ்­வில் கலந்­து­கொண்ட உயி­ரோ­வி­யக் கலை­ஞர் ஜெகன்­னாத் ராமா­னு­ஜம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!