ஆசிரியர், மாணவர் அனுபவத்தை மேம்படுத்தும் ‘கலவைமுறைக் கற்றல்’

மோன­லிசா

 

கற்­றல் கற்­பித்­தல் அனு­ப­வங்­களை சிங்­கப்­பூர் மாண­வர்­க­ளுக்­கும் ஆசிரி­யர்­க­ளுக்­கும் மேம்­ப­டுத்­தும் நோக்­கில் 'மாண­வர் கற்­றல் மின்­தளம்' எனும் இணை­ய­வ­ழிக் கற்­றல் தளத்தை கல்வி அமைச்சு 2018ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. கொவிட்-19 கால­கட்­டத்­தில் வீட்­டிலி­ருந்து மாண­வர்­கள் பாடம் படிக்க வேண்­டிய சூழ­லில் இக்­கற்­றல் கற்­பித்­தல் முறை அதி­க­ளவு பயன்­பாட்­டைக் கண்­டது.

இன்­றைய தொழில்­நுட்ப யுகத்­தில் மின்­னி­லக்­க­ம­ய­மா­தலை ஆதரிக்­கும் வகை­யில் கல்வி அமைச்சு இது­வரை 10,000க்கும் மேற்­பட்ட கற்­றல் வளங்­களை தொடக்­க­நிலை முதல் புகு­மு­க­நிலை வரை உரு­வாக்­கி­யுள்­ளது.

இதன் ஓர் அங்­க­மாக 2021ஆம் கல்வி ஆண்­டின் மூன்­றாம் தவ­ணை­யி­லி­ருந்து 'கல­வை­முறைக் கற்­றல்' (Blended Learning), பள்ளி­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது. இக்­கற்­றல் முறை­யில் மாண­வர்­க­ளுக்கு வகுப்­ப­றைக் கற்­றல் சூழ­லும் இணை­ய­வ­ழிக் கற்­றல் அனு­ப­வ­மும் ஒரு­சேர வழங்­கப்­ப­டு­கிறது.

இக்­கற்­றல் முறை மூலம் ஒவ்­வொரு மாண­வ­ரா­லும் தத்­தம் சொந்தக் கல்வி நிலை, வேகம், புரி­தல் மற்­றும் மன­தில் வாங்­கும் திற­னுக்­கேற்­பப் பாடங்­க­ளைக் கற்க முடி­கிறது. இத்­த­ளத்­தில் ஆசி­ரி­யர்­கள் பதி­வேற்­றும் கற்­றல் வளங்­களை மாண­வர்­கள் எந்­நே­ர­மும் எங்­கே­யும் இருந்­த­வாறு பயன்­பெற முடி­கிறது.

கூடு­த­லாக இத்­த­ளத்­தில் 'கேமி­ஃபி­கே­ஷன்', 'டெக்ஸ்ட்-டு-ஸ்பீச்', செயற்கை நுண்­ண­றிவு மூலம் வாசிப்பு மதிப்­பீடு போன்ற மாண­வர்­க­ளின் ஆர்­வத்­தைத் தூண்­டும் சிறப்­புக் கற்­றல் அம்­சங்­களும் உள்­ளன. மேலும், ஒவ்­வொரு மாண­வர் பதி­வேற்­றம் செய்­யும் வீட்­டுப்­பாடங்­களை­யும் பயிற்­சி­க­ளை­யும் ஆசி­ரி­யர்­கள் தனிப்­பட்ட முறை­யில் கூடு­தல் கவ­னத்­து­டன் திருத்­த­வும் கருத்து தெரி­விக்­க­வும் இத்­த­ளம் உத­வு­கிறது.

இக்­கற்­றல் தளம் குறித்த தம் அனு­ப­வத்தை தெமா­செக் உயர்­நிலைப் பள்ளி தமி­ழா­சி­ரியை முனை­வர் ஜாஸ்­லின் பிரி­சில்டா, 47, பகிர்­கை­யில், "இத்­த­ளம் மூலம் எங்­களால் மாண­வர்­க­ளின் தனிப்­பட்ட கற்­றல் தேவை­களை நிறைவு செய்ய முடி­கிறது. கேட்­டல், பேசு­தல், வாசித்­தல், எழு­து­தல், பேச்­சு­வழி கருத்­துப் பறி­மாற்­றம், எழுத்­து­வழி கருத்­துப் பறி­மாற்­றம் ஆகிய ஆறு திறன்­க­ளி­லும் மாண­வர்­கள் தேர்ச்சி­பெற பாடங்­க­ளைத் திட்­ட­மிட முடி­கிறது," என்­றார்.

ஆசி­ரி­யர்­கள் ஒவ்­வொரு பாடத்­திற்­கும் புத்­தாக்க முறை­யி­லும் மாண­வர்­க­ளுக்­குச் சுவா­ர­சிய வகை­யி­லும் கற்­றல் வளங்­களை உரு­வாக்க இத்­த­ளம் உத­வு­கிறது என்­றும் ஜாஸ்­லின் குறிப்­பிட்­டார். இப்­பா­டங்­களை ஆசி­ரி­யர்­கள் கற்­றல் சமூ­கத் தொடர்பு வட்­டம் மூலம் பிற ஆசி­ரி­யர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­வது மிக­வும் பய­னுள்­ள­தாக உள்­ள­தென்­றும் அவர் கூறி­னார்.

மேலும், இக்­கற்­றல்­முறை மாண­வர்­க­ளின் முழு பங்­கேற்­பைத் தூண்டு­வ­தோடு சுய­கற்­றலை ஊக்­கு­வித்து, கற்­றலை மகிழ்ச்­சி­யு­டை­ய­தா­க­வும் சுவா­ர­சி­ய­மா­ன­தா­க­வும் மாற்­று­கிறது என்­றும் தெரி­வித்­தார். தெளி­வாக வரை­ய­றுக்­கப்­பட்ட பாடங்­கள், ஊட­க­வழி விளக்­கப்­படு­வ­தால் கற்­றல் எளி­மை­யா­கிறது என்­றும் கூறி­னார் முனை­வர் ஜாஸ்­லின்.

monolisa@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!