தொழில்நுட்ப மாணவருக்கு உபகாரச் சம்பளம், பயிற்சி

தரவு நிலை­யங்­களில் வேலை செய்ய ஆர்­வம் காட்­டும் தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மாண­வர்­கள் அடுத்த ஆண்டு முதல் மைக்­ரோ­சா­ஃப்ட் நிறு­வ­னத்­தி­டம் இருந்து பயிற்­சி­யை­யும் உப­கா­ரச் சம்­ப­ளத்­தை­யும் பெற­லாம்.

பயிற்­சிக்­குப் பின்­னர் அந்த நிறு­வ­னத்­தில் முழு­நேர வேலை­வாய்ப்­புப் பெறு­வ­தற்­கான சாத்­தி­ய­மும் உள்­ளது.

தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழ­கத்­தின் வேலை ஆய்வு பட்­ட­யம் பெற தரவு நிலை­யத்­தில் ஆர்­வத்­து­டன் பயிற்சி பெறும் கிட்­டத்­தட்ட 20 மாண­வர்­க­ளுக்கு மைக்­ரோ­சா­ஃப்ட் கல்வி உப­கா­ரச் சம்­ப­ளத்தை வழங்­கும்.

படிப்பு முடிந்த பின்­னர் மைக்­ரோ­சா­ஃப்­டில் வேலை­யில் சேர இவர்­களில் சில மாண­வர்­கள் நேர்­கா­ண­லுக்­குத் தேர்ந்து எடுக்­கப்­

ப­டு­வார்­கள் என்று மைக்­ரோ­சா­ஃப்ட் தெரி­வித்­துள்­ளது.

மைக்­ரோ­சா­ஃப்ட்­டும் அதன் பங்­கா­ளி­கள் மற்­றும் வாடிக்­கை­யா­ளர்­களும் சேர்ந்து சிங்­கப்­பூ­ரில் 2026ஆம் ஆண்­டுக்­குள் 86,000 புதிய வேலை­களை உரு­வாக்­கு­வார்­கள்.

இவற்­றில் 50,000 வேலை­கள் கணி­னித் தொழில்­நுட்­பத் திறன் வேலை­கள் என்­றும் அது தெரி­வித்­தது.

மைக்­ரோ­சா­ஃப்ட் நிறு­வ­னம் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­

து­டன் இணைந்து சிங்­கப்­பூ­ரில் கடந்த வியா­ழக்­கி­ழமை ஆசி­யா­வின் முதல் தர­வு­நி­லை­யக் கல்வி நிலை­யத்­தைத் தொடங்­கி­யது.

அடுத்த ஐந்­தாண்­டு­க­ளுக்கு கிட்­டத்­தட்ட 300 மாண­வர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­பது இந்­தக் கல்வி நிலை­யத்­தின் திட்­டம்.

கணி­னிக் கட்­ட­மைப்­பு­க­ளுக்­கான கட்­ட­டங்­க­ளா­க­வும் வெளிப்­பு­றங்­க­ளா­க­வும் தரவு நிலை­யங்­கள் அமை­யும்.

மைக்­ரோ­சா­ஃப்ட்­டில் வேலை­யைத் தொடங்­கும் முன்­னர் தனித்­து­வத் திறன்­க­ளுக்­கான பயிற்­சியை அவர்­கள் பெறு­வார்­கள்.

தரவு நிலை­யம் என்­ப­து விரை­வாக வளர்ந்­து­வ­ரும் தொழில் என்று தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத் தலைமை நிர்­வாக அதி­காரி லோ கா கெக் தெரி­வித்­துள்­ளார்.

மைக்­ரோ­சாப்­ஃட்­டு­னான கூட்டு, இங்கு பயிற்சி பெறு­வோரை இந்­தத் தொழில்­து­றை­யின் முன்­னோ­டி­களாக்க கைகொ­டுக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் 70க்கும் மேற்­பட்ட தரவு நிலை­ய­ங­கள் செயல்­ப­டு­வ­தாக அமெ­ரிக்க அர­சாங்க முக­வை­யான இண்­டர்­நே­ஷ­னல் டிரேட் என்­னும் அமைப்பு தெரி­வித்துள்­ளது.

கூகல், அமே­சான், மைக்­ரோ­சா­ஃப்ட் மற்­றும் ஐபி­எம் போன்­றவை நடத்­தும் தரவு நிலை­யங்­கள் அவை என்­றும் அது குறிப்­பிட்­டது.

புதிய தரவு நிலைய கல்­விக்­க­ழ­கம் தரவு நிலை­யத் திறன்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­ப­தோடு நேர­டிப் பயிற்­சிக்­கான கற்­றல் மையத்­தை­யும் அமைக்­கும்.

வழி­காட்­டு­தல்­க­ளை­யும் நிபு­ணத்­துவ மேம்­பாட்டு வளங்­க­ளை­யும் இக்­கல்­விக் கழ­கம் வழங்­கும்.

மீள்­தி­ற­னை­யும் வருங்­கால சிங்­கப்­பூ­ருக்­கான மின்­னி­லக்­கத்தை உள்­ள­டக்­கிய முறை­யை­யும்

உரு­வாக்­கு­வ­தன் மூலம் பயிற்­சிக்­கும் வேலைத்­தி­ற­னுக்­கும் இடை­யில் உள்ள வெற்­றி­டத்தை நிரப்ப முடி­ யும் என்று மைக்­ரோ­சா­ஃப்ட் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் லீ ஹுயி லி தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!