விற்க இயலாத நான்கு வீடுகளை வீவக வாங்கிக்கொண்டது

இன அடிப்­ப­டை­யி­லான ஒதுக்­கீட்டு வரம்­பி­னால் தங்­கள் வீடு­களை விற்க இய­லாத நான்கு பேரி­ட­மி­ருந்து வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் (வீவக) சென்ற ஆண்டு வீடு­க­ளைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்­டது.

இன ஒருங்­கி­ணைப்­புக் கொள்கை தொடர்­பில் சென்ற ஆண்டு 411 மேல்­மு­றை­யீட்டு விண்­ணப்­பங்­க­ளைக் கழ­கம் பெற்­ற­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­தார். இவற்­றில் 131 விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

இதர 127 விண்­ணப்­பங்­க­ளுக்கு மாற்­றுத் தீர்­வு­கள் வழங்­கப்­பட்­டன. இன அடிப்­ப­டை­யி­லான ஒதுக்­கீட்டு வரம்பை அகற்­று­வ­தன் மூலம் வீட்டு உரி­மை­யா­ளர்­கள் தங்­கள் வீடு­களை விற்­ப­தற்­குக் கூடு­தல் அவ­கா­சம் வழங்­கு­வது அந்­தத் தீர்­வு­களில் அடங்­கும்.

மேல்­மு­றை­யீட்டு விண்­ணப்­பங்­களில் 280 நிரா­க­ரிக்­கப்­பட்­டன. இவற்­றில் பெரும்­பா­லான விண்­ணப்­பங்­கள், வீட்டு உரி­மை­யா­ளர்­கள் அடிப்­ப­டைத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யா­த­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

அவர்­கள் வீடு வாங்­கிக் குறைந்­தது 10 ஆண்­டு­கள் ஆகி­யி­ருக்க வேண்­டும். வெளிச் சந்­தை­யில் ஆறுமாத காலம் தொடர்ச்­சி­யாக வீட்டை விற்­ப­தற்கு உரிய முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்­க­ வேண்­டும்.

பாட்­டா­ளிக் கட்­சி­யின் செங்­காங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹி டிங் ரு எழுப்­பிய கேள்­விக்கு எழுத்­து­பூர்­வ­மாக அளித்த பதி­லில் அமைச்­சர் லீ இந்த விவ­ரங்­களை வெளி­யிட்­டார்.

மேல்­மு­றை­யீட்டு விண்­ணப்­பம் செய்­தோ­ரில் 14 விழுக்­காட்­டி­னர் சீனர்­கள்; 25 விழுக்­காட்­டி­னர் மலாய்க்­கா­ரர்­கள்; எஞ்­சிய 61 விழுக்­காட்­டி­னர் இந்­தி­யர்­கள் அல்­லது இதர இனத்­த­வர் என்­றார் அவர்.

1989ஆம் ஆண்டு இன ஒதுக்­கீட்டு வரம்பு அம­லுக்கு வந்­தது. ஒவ்­வொரு வீவக புளோக்­கி­லும் அந்­தந்த இனத்­திற்கு ஒதுக்­கப்­பட்ட அள­வி­லேயே வீடு­களை வாங்­கவோ மறு­விற்­பனை செய்­யவோ இய­லும்.

அண்மை ஆண்­டு­களில் மூன்­றில் ஒரு வீவக புளோக்­கில் இந்த வரம்பு எட்­டப்­பட்­டு­விட்­ட­தால் வீட்டு உரி­மை­யா­ளர்­கள் வீடு­களை விற்­ப­தில் சிர­மத்தை எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

இவர்­க­ளுக்கு உத­வும் நோக்­கில் கழ­கம் இத்­த­கைய வீடு­களைத் திரும்ப வாங்­கிக்­கொள்­ளும் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

உரிய அடிப்­ப­டைத் தேவை­களைப் பூர்த்தி செய்­யும் வீட்டு உரி­மை­யா­ளர்­கள் இதற்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

அவர்­கள் வெளிச் சந்­தை­யில் ஆறு மாத காலம் தங்­கள் வீட்டை விற்­ப­தற்கு மேற்­கொண்ட முயற்சி தொடர்­பான ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பித்­தல் அவ­சி­யம். அதன் அடிப்­ப­டை­யில், கழ­கம் அவர்­களுக்­குக் கூடு­தல் அவ­கா­சம் தரக்­கூ­டும்.

அல்­லது குறிப்­பிட்ட இனத்­த­வ­ரி­டம் மட்­டுமே விற்­க­லாம் என்ற விதி­மு­றை­யில் இருந்து விலக்கு அளிக்­கக்­கூ­டும் என்று அமைச்­சர் லீ தெரி­வித்­தார். இவ்­வாறு செய்­வ­தால் அந்த புளோக்­கில் இன அடிப்­ப­டை­யி­லான சம நிலை பாதிக்­கப்­படுமேயானால், கழ­கம் அந்த வீட்­டை வாங்­கிக்­கொள்­ளும் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!