தொடர்ந்து நிலைத்தன்மையுடன் விளங்க மூன்று வழிகளை முன்வைத்த மருத்துவர்

மக்கள் செயல் கட்சி தொடர்ந்து நிலைத்தன்மையுடனும் முற்போக்குடனும் நீடிக்க பன்முகத்தன்மையை வரவேற்பது, அனைவரையும் உள்ளடக்கியவாறு செயல்படுவது, ஒன்றிணைந்து முடிவெடுப்பது ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்று அக்கட்சியின் ஜூரோங் ஸ்பிரிங் பிரிவு உதவி கிளைச் செயலாளர் டாக்டர் ஹமீத் ரஸாக், 38, கூறினார். 

கடந்த 69 ஆண்டுகளாக மக்கள் செயல் கட்சி நிலையான, முற்போக்குச் சிந்தனையுடைய கட்சியாக இருந்துவந்தாலும் தொடர்ந்து அதனைப் புதுப்பித்துக்கொண்டு இருக்கவேண்டும் என்றும் எதிர்காலத்தில் முதலீடு செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஆயிரத்துக்கும் மேலான கட்சி உறுப்பினர்கள் கூடிய மக்கள் செயல் கட்சியின் இவ்வாண்டுக்கான விருது நிகழ்ச்சி, மாநாட்டில், மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான இவர், தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றினார். கட்சியின் தலைவர் ஹெங் சுவீ கியட், தலைமைச் செயலாளர் லீ சியன் லூங், துணைத் தலைமைச் செயலாளர் லாரன்ஸ் வோங் ஆகியோரைத் தவிர்த்து பேசிய மூவரில் டாக்டர் ஹமீத் ஒருவர்.

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், தேசிய இளையர் மன்றம், சிங்கப்பூர் சிறைச் சேவை, இம்ப்ரோஃப் எனப்படும் இந்திய முஸ்லிம் நிபுணர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் மூலம் சமூக சேவையில் பல ஆண்டுகளாகச் சேவையாற்றிவரும் டாக்டர் ஹமீத், ‘ஹெல்த்சர்வ்’ எனும் சமூக சேவை அமைப்பில் தொண்டூழிய மருத்துவராக ஒன்பது ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார்.

பல கலாசாரங்களையும் இனங்களையும் சமயங்களையும் கொண்டுள்ள சிங்கப்பூரில் ஒவ்வொரு பிரிவினருக்கும் விழாக்காலங்கள் இருந்தாலும் அனைவரும் சேர்ந்தே கொண்டாடுவதைச் சுட்டிய டாக்டர் ஹமீத், பன்முகத்தன்மையை நாம் வரவேற்பதுடன் பெருமைப்பட வேண்டும் என்றார்.

ஜூரோங் பகுதியில் தொண்டூழியம் புரிந்து வருவதுடன் இளையர்களுக்கான மதியுரை வழங்குதல், வெளிநாட்டு ஊழியர் சுகாதாரம் போன்ற அம்சங்களிலும் இவர் சேவை புரிந்து வருவதை மேற்கோள் காட்டி, ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் அவரவருக்கான தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கை அனுபவம் இருக்கும் என்றும் அதைப் பொதுமக்களின் தேவைகளை நன்கறியப் பயன்படுத்தி வேண்டியவற்றை நிறைவேற்றிக் கொடுக்க முடியும் என்றும் கூறினார்.

சிறுபான்மைச் சமூகத்திலிருந்து வருபவரால் குறிப்பிட்ட சவால்களைச் சமாளிப்பது குறித்த கண்ணோட்டங்களைப் பெறமுடியும் என்பதையும் செங்காங் பொது மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகவும் டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் இணைப் பேராசிரியராகவும் பணிபுரியும் டாக்டர் ஹமீத் சுட்டினார்.

உலகில் நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்சினைகள் நம் நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் நமது ஒற்றுமையை நிலைநாட்டுவதே பிரிவினைவாதத்தைத் தவிர்க்க வழி என்றும் இவர் குறிப்பிட்டார்.

கலந்துரையாடி கருத்துகளைப் பகிர பாதுகாப்பான சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்புதான் கட்சியின் எதிர்காலத்தில் அனைவருக்கும் சம பங்கு இருப்பதை உறுதிசெய்யும் அடிப்படைக் கொள்கையாக இருக்கும் என்றும் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!