ஜனவரி 20 முதல் ஹார்பர்ஃபிரண்ட், தெலுக் பிளாங்கா நிலையங்களில் தலா ஒரு தளமேடை தற்காலிக மூடல்

வட்ட ரயில் பாதையின் ஹார்பர்ஃபிரண்ட், தெலுக் பிளாங்கா நிலையங்களில் தலா ஒரு தளமேடை ஜனவரி 2ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை மூடப்படுகிறது.

வட்ட ரயில் பாதையின் 6வது கட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான தண்டவாளப் பணிகளுக்காக அந்த தளமேடைகள் மூடப்படுவதாக நிலப்போக்குவரத்து ஆணையமும் எம்எஸ்ஆர்டி நிறுவனமும் ஜனவரி 16ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

வட்ட ரயில் பாதையின் 6வது கட்ட நீட்டிப்பில், ஹார்பர்ஃபுரண்டுக்கும் மரினா பேக்கும் இடையே கெப்பல், கண்டோன்மென்ட், பிரின்ஸ் எட்வர்ட் சாலை ஆகிய மூன்று புதிய நிலையங்கள் அமைகின்றன. ஆறாவது கட்டம் 2026இல் செயல்படத் தொடங்கும்.

தளமேடைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில் கென்ட் ரிட்ஜ்- லாப்ரடோர் பார்க் நிலையங்களுக்கு இடையே, மற்ற தளமேடையில் 10 நிமிட இடைவேளையில் இடைவழி ரயில் சேவை இடம்பெறும்.

வட்ட ரயில் பாதை ரயில்கள் ஹார்பர்ஃபிரண்ட்நிலையத்திற்குப் பதிலாக, கென்ட் ரிட்ஜ்- லெப்ரடோர் பார்க் நிலையங்களில் வளைந்து செல்லும்.

உச்சநேரத்தில் கென்ட் ரிட்ஜ் - லெப்ரடோர் பார்க் நிலையங்களுக்கு இடையே பயணம் செய்வோர் ஐந்து நிமிட இடைவேளையில் ரயில் சேவையை எதிர்பார்க்கலாம்.

ரயில் சேவை எந்த நிலையத்தில் நிறைவுபெறும் என்ற தகவலுக்கு ரயில் அறிவிப்புகள், தளமேடையில் வைக்கப்பட்டுள்ள அறிவுப்புகளைக் கவனிக்குமாறு நிலப்போக்குவரத்து ஆணையமும் எம்எஸ்ஆர்டி நிறுவனமும் பயணிகளைக் கேட்டுக்கொண்டன.

தளமேடை மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில் வட்ட ரயில் சேவைக்கு மாற்றாக, பயணிகள் 10, 30, 57, 61, 93, 97, 100, 143, 166, 188, 963 ஆகிய 11 பொதுப் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தலாம்.

கூடுதலாக, ஒரு விரைவு இடைவழிப் பேருந்து சேவை (E31) ஹார்பர்ஃபிரண்ட், தெலுக் பிளாங்கா, லெப்ரடோர் பார்க் , கென்ட் ரிட்ஜ் நிலையங்களுக்கிடையே சேவையாற்றும்.

வார நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் உச்ச நேரத்தில் 10 முதல் 15 நிமிட இடைவெளியில் இந்த பேருந்து சேவை இயங்கும் என்று கூட்டு அறிக்கை தெரிவித்தது.

ஹவ் பர் வில்லா, பாசிர் பஞ்சாங் நிலையங்களுக்குச் செல்வோர் அல்லது அங்கிருந்து பயணிப்பவர்கள் ஏற்கெனவே செயல்படும் 10, 30, 143 அல்லது 188 போன்ற பேருந்து சேவைகளைப் பயன்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு ஆணையத்தின் MyTransport.SG செயலி, ஆணையம், எஸ்எம்ஆர்டி ஆகியவற்றின் சமூக ஊடத் தளங்களைப் பார்க்கவும். பாதிக்கப்பட்ட நிலையங்களில் பயணிகளுக்கு வழிகாட்ட நிலைய ஊழியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!