ஆய்வு: 2020ல் ஏறக்குறைய 100 அடித்தள முயற்சிகள் தொடங்கப்பட்டன

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 450 அடித்தளக் குழுக்கள் செயல்பாட்டிலுள்ளதாக தேசிய தொண்டூழியர், கொடையாளர் நிலையத்தின் (என்விபிசி) புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

அவற்றில் பல கொவிட்-19 தொற்றுநோய் பரவலின் உச்சத்தின்போது தொடங்கப்பட்டவை.

பந்தயப்பிடிப்புக் கழகத்தின் நிதியுதவியில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு, சிங்கப்பூரிலுள்ள அடித்தளக் குழுக்களின் பங்கையும் அவை எதிர்நோக்கும் சவால்களையும் புரிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.

அத்தகைய குழுக்களைத் தொடங்கியவர்களில் பெரும்பாலானோர் 35 வயதும் அதற்குக் குறைந்த வயதுமுள்ள தனிநபர்கள் என்று ஆய்வு குறிப்பிட்டது.

சிங்கப்பூரிலுள்ள அடித்தளக் குழுக்களின் செயல்பாடு குறித்த தேசிய அளவிலான முதல் ஆய்வு இதுவாகும்.

ஆய்வின் முதல் பகுதி 2021ல் நடத்தப்பட்டது. அதில் 29 அடித்தளக் குழு நிறுவனர்களுடனான நேர்காணல்களும் அறக்கட்டளைகள், அரசாங்க நிறுவனங்கள் போன்றவற்றுடனும் அடித்தளக் குழுக்களுடனுமான ஒன்பது குழு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

இரண்டு ஆய்வுகளைக் கொண்ட இரண்டாவது பகுதி 2022ல் இடம்பெற்றது. 276 குழுக்களைச் சேர்ந்த 431 உறுப்பினர்கள், தொண்டூழியர்களுடன் 1,000 பொதுமக்களிடமும் ஆய்வு செய்யப்பட்டது.

‘சமூகத்துக்குப் பயனளிக்கும் திட்டம் அல்லது சுயமாக ஏற்பாடு செய்த நிகழ்வை முன்னெடுக்கும் தன்விருப்பதோடு ஒன்றுசேர்ந்த குழு’ என்று அடித்தளக் குழுவை அறிக்கை வரையறுக்கிறது. இக்குழுக்கள் பதிவுசெய்யப்பட்ட அமைப்புகள் அல்ல, லாபநோக்கமற்றவை.

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கலந்துகொண்ட சிங்கப்பூர் தேசிய அரும்பொருளக நிகழ்ச்சியில் ஜனவரி 18ஆம் தேதி இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

என்விபிசியின் தரவுகளின்படி, 2020ல் கொவிட்-19 தொற்றுநோய் பரவலின்போது 109 அடித்தளக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

சமூக மேம்பாடு (73 விழுக்காடு), சமூக, நலவாழ்வு முயற்சிகள் (29 விழுக்காடு), சுற்றுச்சூழல் (25 விழுக்காடு), கல்வி (14 விழுக்காடு) ஆகியவை அடித்தளத் திட்டங்களைத் தொடங்குவதற்கான முதல் நான்கு காரணங்கள் என்று ஆய்வு சுட்டியது.

கிட்டத்தட்ட பாதிக் குழுக்கள் அல்லது 49.6 விழுக்காடு நட்பு சேவையை வழங்கின. 29 விழுக்காடு உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை வழங்கின. 26 விழுக்காடு மனநல ஆதரவை வழங்கின.

இக்குழுக்களைத் தொடங்கியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். 22 விழுக்காட்டினர் 18 முதல் 24 வயதுள்ளவர்கள்.

ஆய்வில் பங்கேற்ற 1,000 பொதுமக்களில் 80 விழுக்காட்டினர் சமூகத் தேவைகளைக் கவனித்துக்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றனர். 25 விழுக்காட்டினர் அடித்தளக் குழுக்களின் பொறுப்பு என்றனர்.

எனினும் இந்த அறிக்கை, அடித்தளக் குழுக்களின் பங்கு, பிரச்சினைகளை அடையாளம் காணவும் தீர்வுகளை வழங்கவும் சமூகங்கள் பொறுப்பெடுத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தியது.

அடித்தளத்திலிருந்து தொடங்கப்படும் திட்டங்கள் சிறியதாகவும் அதிகாரபூர்வமற்றதாகவும் இருக்கலாம். அவை மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் தனது உரையில் கூறினார்.

என்விபிசி, தெமாசெக் அறக்கட்டளை மற்றும் பந்தயப்பிடிப்புக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, ஜனவரி 18 அன்று இணைய வளத் தளத்தைத் தொடங்கியது. இது அடித்தளக் குழுக்களைத் தொடங்க விரும்புவோருக்கு திட்டங்கள், வளங்கள் சார்ந்த ஆதரவை வழங்குவதுடன், கட்டமைப்பை உருவாக்கும் வாய்ப்பையும் அளிக்கிறது.

ஆய்வு அறிக்கை, குழுக்களை நிர்வகிப்பதற்கான நடைமுறை உதவிக்குறிப்புகளுடன் கூடிய ஒரு என்விபிசி வெளியிட்டுள்ள இணைய கையேட்டை https://www.bagustogether.sg/. என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!