சமூகப் பிணைப்பை ஊக்கவிக்க புதிய வழிகளை நாடும் குடியிருப்பாளர் அமைப்புகள்

அக்டோபர் 28, 2023 அன்று, பேய்கள் போன்ற உடையணிந்த பதின்மவயதினர் ஜாலான் பாரி டெடாப், தானா மேரா கெச்சிலில் உள்ள தரை வீடுகளுக்கும் கண்டோமீனிய வீடுகளுக்கும் சென்றனர்.

‘ஹேலோவீன்’ வார இறுதியில் நடந்த இந்நிகழ்வு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. ஏனெனில் அந்த சமூக நிகழ்வில் பங்கேற்ற கிட்டத்தட்ட 800 பேரில் கால் பகுதியினர் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிவாசிகள்.

அதே நாளில் மாலையில் மவுண்ட்பேட்டன், ஜாலான் சத்து, புளோக் 90ல் உள்ள வெளியரங்கில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூடின. மேடை நிகழ்ச்சிகளும், பெற்றோர் - பிள்ளைகளுக்கான நிகழ்வுகளும் இடம்பெற்றன. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட டகோட்டா பிரீஸ் அடுக்குமாடி குடியிருப்பாளர்களில் சிலர் தங்கள் அண்டை வீட்டாருடன் அப்போதுதான் அறிமுகம் செய்துகொண்டனர்.

இரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்தவர்கள் பேட்டை குடியிருப்பாளர் கட்டமைப்பு (ஆர்என்). இது, வசிப்போர் குழுவையும்(ஆர்சி) அக்கம்பக்க குழுவையும்(என்சி) ஒன்றாக இணைப்பதற்காக 2018ல் தொடங்கப்பட்ட ஒரு திட்டம்.

பேட்டை குடியிருப்பாளர் கட்டமைப்பு பற்றி அறிவித்த பிரதமர் லீ சியன் லூங், வீவக குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்வது ஆர்சி, தனியார் குடியிருப்புப் பேட்டைகளில் வசிப்போருக்கு சேவை செய்வது என்சி எனும் தனி தனிப்பிரிவுகளை நீக்குவது அதன் நோக்கம் என்றார்.

அடித்தளத் தலைவர் தங்கள் வளங்களைத் திரட்டவும், சிங்கப்பூரர்களை மேலும் திறம்பட சென்றடையவும் உதவுவதோடு, சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும் என்ற நோக்கத்தில் அந்தப் பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டது.

பிறந்தநாள் விழாக்கள் போன்ற தனிப்பட்ட விழாக்கள் உட்பட தங்கள் வசதிகளைப் பயன்படுத்த அதிக குடியிருப்பாளர்களை ஈர்ப்பதற்காக 2013ல் மக்கள் கழகம் வசிப்போர் குழுக்களில் பெரிய அளவிலான புதுப்பித்தலை மேற்கொண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பெயர் மாற்றம் இடம்பெற்றது. தீவு முழுவதும் உள்ள 572 வசிப்போர் குழுக்களில் 460ஐ விரிவுபட்ட கிட்டத்தட்ட $44 மில்லியன் செலவிடப்பட்டது.

ஒவ்வொரு தொகுதியிலும் தலைமை அடித்தள அமைப்பாக குடிமக்கள் ஆலோசனைக் குழு இருக்கிறது. சமூக மன்ற நிர்வாகக் குழுக்கள், அவற்றின் நடவடிக்கைகளை திட்டமிட்டு ஏற்பாடு செய்யும் அதேவேளையில், அந்தப் பகுதியில் வசிக்கும் தொண்டூழிய குடியிருப்பாளர்கள் பேட்டை குடியிருப்பாளர் கட்டமைப்பை நடத்துகிறார்கள். குடியிருப்பாளர்களின் உடனடித் தேவைகளுக்கு சேவையாற்றுகின்றனர்.

பிரதமர் லீ தனது 2018 ஆம் ஆண்டு உரையில், பேட்டை குடியிருப்பாளர் கட்டமைப்பின் இரட்டை இலக்குகளை சுருங்கச் சொன்னார். ஒன்று அக்கம்பக்கத்தாரிடையே நட்பை ஏற்படுத்தி, அதன் மூலம் பிணைப்பை வலுப்படுத்துவது. மற்றது தேசிய கொள்கைகளை மக்களுக்கு விளக்க உதவுவதன் மூலம், மக்கள் கருத்துகளை அரசாங்கத்திடம் சேர்ப்பது மூலமும் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவது.

2018 பெயர் மாற்றம், தனியார் மற்றும் பொதுக் குடியிருப்புகளின் இளம் தொண்டூழியரை ஒன்றிணைப்பதன் மூலம் மனப்போக்கை மாற்றவும், புதிய யோசனைகளைத் தூண்டவும் உதவியுள்ளது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அடித்தளத் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

ஸென்ஹுவா-செகார் மிடோவ்ஸ் குடியிருப்பின் பேட்டை குடியிருப்பாளர் கட்டமைப்பின் துணைத் தலைவரான 40 வயது திரு ஜேசன் ஓங், அண்மைய மாதங்களில் தமது குழு தனித்தன்மையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததாகக் குறிப்பிட்டார்.

ஆர்என் அமைப்பின்கீழ், அவர்கள் நவம்பர் மாதத்தில் அக்கம்பக்கத் திருவிழா போன்ற புதிய நடவடிக்கைகளை ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளனர். அதில் குடியிருப்பாளர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றனர். தற்போது, ‘டுரியான் பார்ட்டி’ நிகழ்ச்சிகளில் அதிகமான தனியார் குடியிருப்புவாசிகள் கலந்துகொள்வதாக திரு ஓங் கூறினார்.

தற்போது தீவு முழுவதும் 944 ஆர்சி, என்சி, ஆர்என் ஆகியவை உள்ளன. இவற்றில் 22,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர் சேவையாற்றுகின்றனர். இவற்றில், 600 அல்லது 65 விழுக்காட்டுக்கும் அதிகமானவை ஆர்என் ஆக மாற்றப்பட்டுள்ளன அல்லது புதிதாக அமைக்கப்பட்டுள்ளன என்று மக்கள் கழகப் பேச்சாளர் கூறினார்.

அதேநேரத்தில் சில ஆர்சிஎஸ், என்சிஎஸ் பெயர் மாற்றப்படாமல் இருப்பதற்கு அந்தப் பெயர்களுடன் உணர்வுபூர்வமான பிடிப்பு காரணம், அவை 40 ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக்கொண்டவை என்றார் அவர்.

700க்கும் மேற்பட்ட ஆர்என், ஆர்சி அமைப்புகள் தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்தப்படக்கூடிய மின்னிலக்க கதவு, விவேக சுவிட்சுகளுடன் அறிவார்ந்த நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் மைய மேலாளர் பணியில் இல்லாதபோதும் மக்கள் முன்பதிவு செய்து வசதிகளை அணுக முடியும்.

இது குடியிருப்பாளர்களுக்கு காலப்போக்கில் அதிகமான தேர்வுகளை வழங்கும். சமூக பங்காளிகளுடன் பணியாற்ற அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்று மக்கள் கழகம் கூறியது. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 200 மையங்கள் மேம்படுத்தப்படும், இந்த திட்டம் ஜூன் 2027க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 2013ன் $44 மில்லியன் புதுப்பிப்புப் பணிகளை மேலும் மேம்படுத்துகிறது.

புதுப்பித்தல் தொடங்கிய காலகட்டதில் வசிப்போர் குழு நடவடிக்கைகளில் பங்கேற்பு விகிகதம் அதிகரித்துள்ளது. எனினும் மக்கள் கழகம் புள்ளிவிவரங்களை வழங்கவில்லை.

குடியிருப்பாளர்களைச் சென்றடைய வழக்கமான அறிவிப்புகளுடன், சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப், டெலிகிராம் செய்திப் பகிர்வுகளையும் இக்குழுக்கள் பயன்படுத்துகின்றன.

அறிவார்ந்த ஆர்என், ஆர்சி ஆகியவை மின்னிலக்க அறிவிப்புகளை மேற்கொள்கின்றன.

புதிய மேம்பாடுகள், இன்றுவரை பங்குகொள்ளதாக குடியிருப்பாளர்களையும் ஈர்க்கக்கூடும்.

வாம்போ குடியிருப்பாளர் ஆண்ட்ரூ இயோ, 45, தனது வசிப்போர் குழு நடவடிக்கைகளில் தனக்கு ஆர்வம் இல்லை என்று கூறினார். எனினும் அவரது ஆர்வம் தூண்டப்பட்டுள்ளது.

“’அறிவார்ந்த வீடு’ ஆர்வலனான நான், அறிவார்ந்த வசதிகள் செய்யப்பட்டால், அவை எப்படி இயங்குகின்றன என்பதை அறிந்துகொள்ள அவற்றைப் பார்க்கச் செல்வேன்.

நீடித்தநிலைத்தன்மை ஆலோசனை நிறுவனத்தில் உத்திபூர்வ இயக்குநராகப் பணியாற்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!