தொடக்கநிலை மாணவர்களுக்கான கவிதை சொல்லும் போட்டி

தொடக்கநிலை மாணவர்களிடையே தமிழ் மற்றும் கவிதை மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கவிமாலை சிங்கப்பூர் அமைப்பு ஆண்டுதோறும் கவிதை சொல்லும் போட்டியை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. தொடக்கநிலை 1 முதல் 3 வரையிலான மாணவர்களுக்குக் கவிதை சொல்லும் போட்டியில் சிங்கப்பூர்த் தமிழ் கவிஞர்களின் கவிதைகளை மாணவர்கள் படைக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதிகபட்ச கால அளவு 2 நிமிடம்.

தொடக்கநிலை 4 முதல் 6 வரையிலான மாணவர்களுக்குக் கவிதை சொல்லுதல், பாடுதல், நடனம் ஆடுதல், நாடகமாக நடித்தல் எனத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம். ஒவ்வொருவருக்கும் அதிகபட்ச கால அளவு 3 நிமிடம்.

மாணவர்களின் ஆக்கபூர்வமான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. ஏப்ரல் 28ஆம் தேதி கவிமாலை சார்பாக நடைபெறவிருக்கும் தமிழ்மொழி மாதவிழாவில் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

போட்டி நடைபெறும் நாள் : 17.03.2024 (ஞாயிற்றுக்கிழமை)

இடம் : தேசிய நூலகம், 100 விக்டோரியா சாலை, சிங்கப்பூர் 188064

தொடக்கநிலை 1 முதல் 3 வரையிலான மாணவர்களுக்கான போட்டி, தளம் 5ல் உள்ள இமேஜினேஷன் அறையிலும், தொடக்கநிலை 4 முதல் 6 வரையிலான மாணவர்களுக்கான போட்டி தளம் 1ல் உள்ள VBR அறையிலும் நடைபெறும்.

முன்பதிவிற்கு : http://tinyurl.com/2p85jnk8

பதிவு இறுதிநாள் : 14.03.2024. மேலும் தகவல்களுக்கு +65 9144 5461 / +65 83327357 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!