‘ஆன்டிபயோட்டிக்’ எதிர்ப்புக்குத் தீர்வுகாண்பதில் நம்பிக்கை

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுகளின் மூலம் ஆன்டிபயோட்டிக் மருந்துக்கு இருந்துவரும் எதிர்ப்புக்குத் தீர்வுகாணப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பிரச்சினை கவனிக்கப்படாவிட்டால் 2050ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 10 மில்லியன் பேர் இறக்கக்கூடும். ஐக்கிய நாட்டுச் சபையின் மருந்து தொடர்பில் அமைப்புகளுக்கு இடையிலான குழு ஒன்று 2019ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.

முதல் ஆய்வில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) ஐ-எஃப்ஐஎம் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், காசநோய் சம்பந்தப்படாத ‘மைக்கோபேக்டீரியல்’ ரக நுண்ணிய ரக கிருமிகளுக்கு எதிராக சிகிச்சை வழங்கப் பயன்படக்கூடிய சிஓஇ-பிஎன்எச்2 எனும் ஆன்டிபயோட்டிக்  மருந்தை உருவாக்கியுள்ளனர். அதுபோன்ற நுண்ணிய கிருமி வகைகளை சாதாரண மருந்தைக் கொண்டு கையாள முடியாது.

இந்த ஆய்வின் முடிவுகள் சைன்ஸ் டிரான்ஸ்லே‌ஷனல் மெடிசின் எனும் அறிவியல் சஞ்சிகையில் சென்ற மாதம் 21ஆம் தேதியன்று வெளியிடப்பட்டன.

மற்றோர் ஆய்வில், பாக்டீரியா கிருமியும் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்சின் துளிகளும் மனிதர்களின் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் முறையை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழம், பிரான்சின் டுலூஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவ்வாறு எழும் எதிர்ப்பு சக்தி வீக்கத்துக்கு வழிவிடும். கிருமித் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் வீக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேவேளை, இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு வீக்கம் பிரச்சினையாக அமையக்கூடும்.

இந்த ஆய்வின் முடிவுகள் தேசிய அறிவியல் கழகத்தின் ‘புரோசீடிங்ஸ்’ எனும் சஞ்சிகையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!