திருக்குர்-ஆனை முழுவதுமாக ஒப்புவிக்கும் இளையர்கள்

திருக்­கு­ர்-ஆனின் வசனங்களை அரபி மொழியில் மனப்பாடமாக ஒப்புவிக்கின்றனர் நண்பர்களான அஃபீஃபும் அமரும்.

புனித ரம­லான் மாதத்­தை­ ஒட்டி டன்­லப் ஸ்தி­ரீட்­டில் உள்ள அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­ச­லில் நோன்பு மாதம் முழு­வ­தும் நடை­பெற்ற தரா­வீஹ் சிறப்­புத் தொழு­கை­யின் ஒரு பகு­தியை இவர்கள் வழி­ந­டத்­தி­யுள்­ள­னர்.

தினந்தோறும் நடத்தப்பட்ட 20 'ரக்காஅத்' தொழுகையின் கடைசி நான்கு 'ரக்காஅத்' தொழுகைகளை வாரநாட்களில் ஒருவரும் வாரயிறுதிகளில் ஒருவரும் என இவர்கள் வழிநடத்தினர்.

இதர 16 'ரக்காஅத்' தொழுகைகளை அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் இமாம் அஸீஸுல்லாஹ் ஹசனி, துணை இமாம் சம்சுதீன் ஆகியோர் வழிநடத்தினர். ரமலான் மாதம் முழுவதிலும் மொத்த திருக்­கு­ர்-ஆன் வசனங்களும் இத்தொழுகையின் மூலம் ஓதப்பட்டன.

அ­ஃபீஃப் முக­மது ரயான், 19, தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் செயற்கை நுண்­ண­றிவுத் துறை­யில் இறு­தி­யாண்டு பயி­ல்கிறார்.

தொடக்­க­நிலை நான்­கின் ஜூன் மாத விடு­முறையின்­போது பென்­கூ­லன் பள்ளிவாசலில் உள்ள திருக்­கு­ர்-ஆன் ஓதும் பயிற்சி வகுப்­பில் தன்னை முதன்­மு­த­லில் தன் தந்தை சேர்த்­து­விட்­டதை அ­ஃபீஃப் நினை­வு­கூர்ந்­தார்.

திருக்குர்-ஆனை கற்பதைத் தொடக்கத்தில் மிகவும் கடினமாக உணர்ந்தார் அஃபீஃப். நாளடைவில் பயிற்சி ஆசிரியரின் சுவாரசிய வகுப்புகளாலும் குடும்பத்தின் உந்துதலாலும் இப்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதை எதிர்நோக்க ஆரம்பித்தார். 

“பள்ளி முடிந்ததும் தினந்தோறும் சில மணி நேரம் இவ்வகுப்பிற்கும் செல்வேன். ஆரம்பத்தில் பொருள் புரியாமல் மனனம் செய்வது கடினமாக இருந்தது. பிற்பாடு பொருள் புரிந்து கற்க ஆரம்பித்தபோது அதிக ஆர்வம் ஏற்பட்டது,” என்றார் அஃபீஃப்.

அதையடுத்து நான்கு ஆண்­டு­களில் முழுவது­மாக திருக்­கு­ர்-ஆனை மனப்­பா­டம் செய்து முடித்­து­விட்­டார் அஃபீஃப்.  இவருடைய மூத்த சகோதரியான 23 வயது நஹீதா ரேசாவும் திருக்குர்-ஆனை மனப்பாடம் செய்து வருகிறார். நஹீதா அரபி இலக்கியத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். 

அ­ஃபீஃப்பின் நண்­ப­ரான அமர் இபின் முக­மது, 18, குடும்­பத்­து­டன் இந்­தி­யா­வி­லிருந்து கடந்த 2016ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ருக்கு வந்தவர். தனது 9 வய­தில் திருக்குர்-ஆன் படிக்க தொடங்­கிய அமர், இங்கு குடி­பெ­யர்ந்த பின்­னர் அஃபீஃப் சென்ற அதே திருக்குர்-ஆன் பயிற்சி வகுப்­பில் தன் தம்பி­யு­டன் இணைந்து சேர்ந்­தார்.

ஏறத்­தாழ நான்கு முதல் ஐந்­தாண்­டு­களில் தான் திருக்குர்- ஆனை மனப்­பா­டம் செய்து முடித்­ததை இறை­வன் அளித்த வர­மாக கரு­து­வ­தா­க­வும் தான் கற்ற பாடங்­கள் எதிர்­காலத்­தில் நற்­பா­தை­யில் தன்னை வழி­ந­டத்தி செல்­லும் என்­றும் அமர் கூறினார்.

“ஒரு­முறை முழு­வ­து­மாக படித்து முடித்து சான்­றி­தழ் பெற்­ற­தோடு விட்­டு­விட்­டால் கடந்த 10 ஆண்­டு­க­ளாக நாங்­கள் எடுத்த முயற்­சிக்குப் பலன் இல்­லா­மல் போய்­வி­டும். சம­யக் கூறு­க­ளைத் தொடர்ந்து படிக்க படிக்­கவே அதன் ஆழம் விளங்­கும்,” என்று அமர் மேலும் தெரிவித்தார்.

தற்போது தனியார் கல்விநிலைய வழியாக இணைய பாதுகாப்பு துறையில் இறுதியாண்டு பட்டயக்கல்வி படித்து வரும் அமர், திருக்குர்-ஆன் பயிற்சி வகுப்புகளில் நண்பர்களுடன் சேர்ந்து ஆரோக்கியமான போட்டி சூழலில் கற்பது நன்றாக இருக்கும் என்று பகிர்ந்தார். 

இது போன்று பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதில்லை என்ற தவறான கருத்தும் நிலவுகிறது என்று குறிப்பிட்டார் அமர். 

திருக்குர்-ஆனை தினந்தோறும் படிப்பதால் நினைவாற்றல் மேம்படுவதால் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு அமரும் அவரின் நண்பர்களும் பள்ளிக் கல்வியிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்று மேலும் கூறினார் அமர். 

திருக்குர்-ஆனின் அனைத்து வசனங்களையும் அதன் கருத்துக்களோடு 'ஹஃப்ஸ்' முறைப்படி கற்றுக்கொண்டு ஒப்புவிக்கும் இவர்கள் வருங்காலத்தில் இஸ்லாமிய சமயத்தின் பல்வேறு கூறுகளையும் கற்றுத்தேர்ந்து இம்மார்க்கத்தில் பாண்டித்தியம் பெற விரும்புவதாக உற்சாகத்துடன் தமிழ் முரசிடம் தெரிவித்தனர் இவ்விரு இளையர்கள். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!