கள்ளக் குடியேறிகளை மடக்கிய அதிகாரி

கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் 21ஆம் தேதி தெற்கு துவாஸ் பகுதியில் அமைந்­துள்ள கட்­டு­மா­னத் தளம் ஒன்றை இரவு முழு­வ­தும் பாது­காக்க வேண்­டிய பொறுப்பு பாது­காப்பு அதி­கா­ரி­க­ளான திரு லோகேஸ்­ராஜா நட­ரா­ஜா­விற்­கும் திரு ராம­கி­ரு­‌ஷ்­ணா­விற்­கும் இருந்­தது.

இருள் சூழ்ந்த அப்­ப­கு­தி­யில் இரவு ஒன்­பது மணிக்கு மேல் ஊழி­யர்­கள் யாரும் வேலைக்­குச் செல்ல மாட்­டார்­கள் என்­றும் பொது­வாக அனு­ம­தி­யில்­லாத மனி­தர்­களின் நட­மாட்­டம் அந்­நே­ரத்­தில் இருக்­கக் கூடாது என்­றும் குறிப்­பிட்­டார் மூத்த பாது­காப்பு அதி­கா­ரி­யான லோகேஸ்­ராஜா, 32.

நள்­ளி­ரவு 12 மணி அள­வில் அந்­தக் கட்­டு­மா­னத் தளத்­தின் நுழைவு வாயில் அமைந்­தி­ருக்­கும் பாது­காப்­புச் சாவ­டியை அவ்­விரு அதி­கா­ரி­களும் கண்­கா­ணித்­துக் கொண்­டி­ருந்தபோது, மூன்று சந்­தேக நபர்­கள் அந்த கட்­டு­மா­னத் தளத்­தை­விட்டு வெளியே வருவ தைப் பார்த்­தார் லோகேஸ்­ராஜா.

அந்த நபர்­க­ளி­டம் பேச முயன்­ற­போது அவர்­கள் ‘பந்த்து பந்த்து’ என்று மலாய் மொழி­யில் கத்தி, லோகேஸ்­ரா­ஜாவை வில­கச் சொன்­னார்­கள்.

ஆனால் அதற்கு இணங்­கா­மல் தைரி­ய­மாக அவர்­க­ளைத் தொடர்ந்து நெருங்­கி­ய­போது, பதற்­றத்­து­டன் அந்த நபர்­கள் ஓட்­டம் பிடிக்­கத் தொடங்­கி­னர்.

பாது­காப்பு சாவ­டி­யைப் பார்த்­துக் கொள்­ளும் பொறுப்பை ராம­கி­ரு­‌ஷ்­ணா­வி­டம் ஒப்­ப­டைத்து விட்டு அந்த மூன்று நபர்­க­ளை­யும் தமது சொந்த மோட்­டார் வாக­னத்­தில் துரத்­தி­னார் லோகேஸ்­ராஜா.

“அந்­ந­பர்­கள் திடீ­ரென ஓடு­வதை நிறுத்திவிட்டு வேக­மாக நடக்க ஆரம்­பித்­தார்­கள். பின்னர் என்னை வில­கச் சொன்­னார்­கள். நான் ஏன் விலகவேண்­டும் என்று அவர்­க­ளி­டம் திருப்பிக் கேட்­டேன். நீங்­கள் ஏன் அனு­ம­தி­யின்றி கட்­டு­மா­னத் தளத்­தை­விட்டு வந்­தீர்­கள் என்று நான் விசா­ரித்­த­போது மறு­ப­டி­யும் ஓட்­டம் பிடித்தனர். அதுமுதல் நான் என் திறன்­பே­சி­யில் காணொளி பதிவு செய்­யத் தொடங்கி­விட்­டேன்,” என்­றார் லோகேஸ்­ராஜா.

ஏறத்­தாழ 500 மீட்­டர் தூரத்­திற்கு துரத்­தி­ய­தில் ஒரு நபர் இருட்­டில் காணா­மல் போய்­விட்­டார் என்­றும் மற்ற இரு நபர்­கள் ‘செம்­ப்கார்ப் மரீன்’ என்ற நிறு­வ­னத்திற்கு அருகே டாக்சி ஒன்­றில் ஏறினர் என்­றும் சொன்­னார் லோகேஸ்­ராஜா.

“டாக்­சி­யில் இரு­வர் ஏறி­ய­வு­டன் அந்த வாக­னத்தின் மீது கவ­னம் செலுத்தி அதை அணு­கி­னேன். டாக்சி ஓட்­டு­நர் மலாய்க்­கா­ர­ராக இருந்­தார். வாக­னத்­தில் ஏறிய நபர்­கள் மீது சந்­தே­கம் இருந்­ததை அவ­ரி­டம் தெரி­வித்­தேன். அவர் என்னை நம்­ப­வில்லை என்று நினைக்­கி­றேன், வேடிக்­கை­யாக சிரித்­தார். அந்த நேரத்­தில் டாக்­சி­யி­லி­ருந்து ஒரு­வர் வெளி­யேறி ஓடி­விட்­டார். டாக்சி நிற்­கா­மல் கிளம்பி­விட்­டது. மற்­றொ­ரு­வர் ஓடும் திசையில் என் கவ­னத்­தைச் செலுத்­தி­னேன். தொடர்ந்து காவல் அதி­கா­ரி­க­ளைத் தொடர்­பு­கொண்டு நடந்­த­வற்­றைத் தெரி­வித்­தேன்,” என்­றார் லோகேஸ்­ராஜா.

ஏறத்­தாழ எட்டு நிமி­டங்­கள் கழித்து சம்­பவ இடத்­திற்கு வந்த போலி­சா­ரி­டம் முக்­கிய ஆதா­ரங்­க­ளை­யும் விவ­ரங்­க­ளை­யும் வழங்­கி­னார் லோகேஸ்­ராஜா. அவர் எடுத்த காணொ­ளி­கள், டாக்சி வாக­னத்­தின் உரிம எண், நபர்­கள் அணிந்­தி­ருந்த ஆடை­கள், சந்­தேக நபர்­களை இறு­தி­யாக கண்ட இடம் போன்ற முக்­கிய தக­வல்­க­ளைப் போலி­சா­ரி­டம் பகிர்ந்­து­கொண்­டார்.

தப்பி ஓடிய இரண்டு நபர்­களை அதே நாளில் போலி­சார் 20 நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு பிடித்­த­னர் என்­றும் அவ்­வி­ரு­வ­ரில் ஒரு­வர் மரத்­தின் மேல் ஏறி ஒளிந்துகொண்­ட­தா­க­வும் லோகேஸ் ராஜா­வுக்கு தெரி­ய­வந்­தது.

ஏறத்­தாழ இரண்டு வாரங்­க­ளுக்­குப் பின்னர் மூன்­றா­வது நப­ரும் பிடி­பட்­டார். இந்த நட­வ­டிக்கை களில் ஏறக்­கு­றைய 100 காவல் துறை அதி­கா­ரி­கள் ஈடு­பட்­ட­னர்.

இவ்­வாண்டு பிப்­ர­வரி 27ஆம் தேதி ஜூரோங் போலிஸ் தலை­மை­ய­கத்­தில் வழங்­கப்­பட்ட மூன்று பொது­நல உணர்­வு­மிக்க விரு­து­களில் ஒன்றை லோகேஸ்­ராஜா பெற்­றார்.

சிங்­கப்­பூ­ரில் ஏறக்­கு­றைய 10 ஆண்­டு­க­ளாகப் பாது­காப்பு அதி­கா­ரி­யாகப் பணி­பு­ரி­யும் மலேசியரான லோகேஸ்­ராஜா தற்­போது ‘லிங்க்8 செக்­யூ­ரிட்டி’ நிறு­வ­னத்­தில் பணி­யாற்­று­கி­றார்.

“பாது­காப்­புத் துறை என்­பது வேலை என்று சொல்­வ­தை­விடவும் ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய கட­மை­யா­கும். சிங்­கப்­பூ­ரில் தவ­று­கள் நடக்க விடக்­கூ­டாது என்று வலி­யு­றுத்தி தான் பாதுகாப்பு அதி­கா­ரி­களான நம்மை பணி­யில் அமர்த்­துகிறார்கள். சிங்­கப்­பூரை பாது­காப்­ப­தில் அனை­ வ­ருக்­கும் பங்குண்டு. வெளி­நாட்­ட­வர்களுக்­கும் அந்த கட­மை­களும் உரி­மை­களும் இருக்கின்றன,” என்கிறார் லோகேஸ்­ராஜா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!