நாணய வணிகத்தை நசுக்கிய கொரோனா

விழிவழியே வெந்நீர் வடிக்காத குறையாய் வேதனையில் நிற்கின்றனர் நம் நாட்டு நாணய மாற்று வணிகர்கள். கொரோனா கிருமிப் பரவல் கொண்டு வந்த சோதனை ஓராண்டு கடந்தும் தனது கொடுங்கரங்களை விரித்தபடி நிற்கிறது. வியாபாரம் படுத்துவிட்டது. வருமானம் நின்றுவிட்டது. அன்றாட குடும்பச்செலவு பெரும்சுமையாகி பயமுறுத்துகிறது. மனம் நிறைய மௌன பூகம்பத்தைச் சுமந்தவாறு நாளையாவது விடியுமா, நல்லபொழுதாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு களுடன் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்லும் அந்த வணிகர்களின் ஏக்கம் நிறைந்த, தூக்கம் சிதைந்த பதிவு இது.

பெருங்­க­ன­வு­க­ளோ­டு­தான் நாணய மாற்று வர்த்­த­கத்­தில் இறங்­கி­னார் போக்­கு­வ­ரத்­துத் தள­வா­டத்­துறை பட்­ட­தா­ரி­யான 36 வயது முஹம்­மது ரெஜாக். அந்­தத் துறை­யில் பார்த்த வேலையை உதறிவிட்டு 2015ல் ‘கோல்­டன் சிட்டி ஃபாரின் எக்­ஸ் சேஞ்ச்’ என்ற குடும்­பத்­தொ­ழி­லில் கால்­வைத்த நாளி­லி­ருந்து வர்த்­த­கத்தை மேலும் விரி­வாக்கி, பெரிய அள­வில் நடத்­து­வ­தற்­கான வழி­மு­றை­க­ளையே அவர் சிந்­திப்­பார். அவ்­வப்­போது ஏற்ற இறங்­கங்­கள் இருந்­தா­லும், 1976ல் தாத்தா தொடங்­கிய இத்­தொ­ழில் சவாலை எதிர்நோக்கும் நிலைக்கு வரும் என அவர் ஒரு நொடி­கூட சிந்­தித்­ததே இல்லை.

உல­கையே புரட்­டிப்­போட்­டு­விட்ட கொரோனா கிருமிப் பரவலால் மிக மோச­மாக பாதிக்கப்பட்ட தொழில்­களில் நாண­ய­மாற்­று வணிகமும் ஒன்று. பய­ணத்­து­றையை முக்­கிய தொழி­லா­கக் கொண்ட சிங்­கப்­பூ­ரில் சுற்­றுப்­ப­ய­ணி­கள், வெளி­நாடு செல்­லும் உள்­ளூர்­வா­சி­கள், வர்த்­த­கர்­கள், நிறு­வ­னங்­கள் என பல­ பிரி­வி­ன­ருக்­கும் சேவை வழங்­கி­வ­ரும் இந்த நாண­ய­மாற்­று­நர்­க­ளில் பெரும்­பா­லா­னோர் தமிழ் முஸ்­லிம்­கள்.

நிதித் துறை­யின் கட்­டணச் சேவை­களில் அங்­கம் வகிக்­கும் இந்­தத் தொழில் 19ஆம் நூற்­றாண்டு முதலே இவர்­க­ளின் கையில்­தான் இருந்து வரு­கிறது.

“மூன்று தலை­முறை வர்த்­த­கம். சென்ற ஆண்­டில் அப்­ப­டியே முடங்­கி­விட்­டது. மாதக்­க­ணக்­காக எந்த வரு­மா­ன­மும் இல்லை. அர­சாங்­கத்­தின் சம்­பள ஆத­ர­வுத் திட்­டத்­தால் ஊழி­ய­ரின் ஊதி­யத்தை சமா­ளித்­தோம். ஆனால், வரவே இல்­லா­மல் வாடகை போன்ற பெரிய செல­வு­க­ளைத் தாக்­குப்­பி­டிக்­கவே முடி­ய­வில்லை,” என்­றார் திரு ரெஜாக். மாற்றுவழி தேடி 2020 ஆகஸ்ட் மாதம் தமது நாணய மாற்று வர்த்­த­கத்­தைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­விட்டு அக்­டோ­பர் மாதம் உண­வுத் துறையில் அடி­ எடுத்­து­வைத்­தார் ரெஜாக்.

சிங்­கப்­பூ­ரில் செயல்­பட்­டு­வ­ரும் நாண­ய­மாற்­று­நர்­கள் கிட்­டத்­தட்ட அத்­தனை பேருமே திரு ரெஜாக்­கைப்போல கடந்த ஆண்டு பிழைப்­புக்காக தற்­கா­லி­க­ மாற்றுவழி­களை ஆரா­யத் தொடங்­கி­னர்.

கொவிட்-19 சூழ­லில் வர்த்­த­கர்­கள் அதி­க­பட்­ச­மாக ஆறு மாதங்­கள் வரை தங்­க­ளின் வணி­கத்தை நிறுத்த சிங்கப்பூர் நாணய ஆணை­யம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. சென்ற ஏப்­ரல் மாதம் முதல் 37 நாணய மாற்று வர்த்­த­கர்­கள் தங்­க­ளின் வணி­கத்­தைத் தற்­கா­லி­க­மா­க­வும் 12 நிறு­வ­னங்­கள் நிரந்­த­ர­மா­க­வும் நிறுத்­தி­விட்­டன என்­பது ஆணை­யம் தரும் புள்­ளி­வி­வ­ரம். இவர்களில் ஐவரே தங்­கள் வணி­கத்தை மீண்­டும் தொடங்கியுள்­ள­னர்.

“உலக நாடு­க­ளெல்­லாம் எல்­லை­களை மூடி­ய­ நி­லை­யில் வர­லாற்­றில் வேறு எந்­த­வொரு சூழ­லி­லும் இல்­லாத பாதிப்பை இந்­தத் துறை­யி­னர் எதிர்­நோக்­கு­கின்­ற­னர். மீண்­டும் முந்­தைய நிலைமை வருமா அல்­லது மின்­னி­யல் முறை­யி­லேயே மக்­கள் ரொக்­கப் பணப் பயன் பாட்டைக் குறைத்­து­வி­டு­வார்­களா என்ற கேள்­வி­களும் உண்டு,” என்­றார் நாணய மாற்றுக் கடை­ ஒன்றின் இயக்­கு­ந­ரான திரு பரக்கத் அலி.

சிங்­கப்­பூ­ரின் 270 நாணய மாற்­று­நர்­களும் இதே இக்­கட்­டாண நிலை­யையே சந்­தித்து வரு­கின்­ற­னர். “நாங்­கள் சம்­பாதித்து ஓராண்டு ஆகிவிட்­டது. எங்­களில் பலர் வெளியே வேறு வேலை­க­ளைச் செய்தே கடை வாடகை உள்­ளிட்ட செல­வு­களை ஈடு­கட்டி வரு­கிறோம்,” என்­றார் 25 ஆண்­டுக­ளாக இந்­தத் தொழி­லை நடத்தி வரும்ஆர். பிர­பா­க­ரன், 60.

தெம்­ப­னிஸ், ஆர்ச்­சர்ட் பகு­தி­களில் வர்த்­த­கம் செய்த அவ­ரி­டம் எட்டு பேர் பணி­பு­ரிந்­த­னர். தற்­போது தெம்­ப­னிசில் மட்­டும் இயங்­கும் கடை­யை அவர் ஒருவரே நடத்தி வரு­கி­றார். குத்­த­கையை நிறுத்த முடி­யாத கார­ணத்­தால் நடத்திவரு­ வ­தா­க­வும் இல்­லா­விட்­டால் அந்­தக் கிளையையும் மூடத் தயா­ராக இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

“அர­சாங்­கத்­தின் வெவ்­வேறு உத­வித் திட்­டங்­கள் இல்­லா­விட்­டால் எப்­போதோ காணா­மல் போயி­ருப்­போம்,” என்­றார் சிங்­கப்­பூர் நாணய மாற்று சங்­கத்­தின் முத­லாம் துணைத் தலை­வ­ரான திரு பிர­பா­க­ரன்.

நோய்ப் பர­வல் காலத்­தில் சங்­கம் அதன் உறுப்­பி­னர்­க­ளுக்­குப் பல முக்­கிய வழி­களில் துணை நின்­றுள்­ளது. அர­சாங்­கத் திட்­டங்­களை எப்­படி பயன்­ப­டுத்­தலாம், வாடகை ஒப்­பந்­தங்­களை நில உரி­மை­யா­ளர்­க­ளி­டம் எவ்­வாறு பேரம்­பே­சு­வது போன்­றவை குறித்து அத்­துறை சார்ந்­த­வர்­கள் மூலம் விளக்­கம் அளிக்கப்படுகிறது.

வாடகை ஒப்­பந்­தங்­களை ரத்து செய்ய கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள தற்­கா­லிக சட்­டம் சற்று ஆறு­த­லாக இருந்­தா­லும், நிலைமை எத்­தனை காலத்­துக்கு இப்­ப­டியே இருக்­கும் என்ற கவலை வர்த்­த­கர்­களை இர­வும் பக­லும் ஆட்டிப் படைக்கிறது.

“2020ஆம் ஆண்டை ஆத­ர­வுத் திட்­டங்­கள் மூலம் கடத்­தி­விட்­டோம். இந்த ஆண்டை எப்­படி கடக்­கப் போகி­றோம் என்­பது பெரிய கேள்வி. வரு­மா­னம் அறவே இல்­லாத நிலை­யில் செல­வு­களை நினைத்­தால்­தான் பய­மாக உள்­ளது,” என்­றார் பத்து ஆண்­டு­க­ளாக புக்­கிட் பாத்­தோக் பகு­தி­யில் நாணய மாற்று சேவை வழங்­கும் திரு ஒலி முஹம்­மது, 47.

“சென்ற ஆண்­டில் ஒரு பரி­வர்த்­த­னைகூட இல்­லாத நாட்­கள் பல. $2 அல்­லது $3 மட்­டுமே ஒரு நாளைக்­குக் கிடைத்­த­தும் உண்டு,” என்­றார் திரு ஒலி.

சீரு­டைச் சேவை­யில் பணி­யாற்­றிய அவர், தமது சேமிப்­பு­க­ளைக் கொண்டு சொந்­தத் தொழில் செய்­ய­வேண்­டும் என்ற வேட்­கை­யில் நாணய வணிகத்தில் இறங்­கி­னார்.

“சிங்­கப்­பூ­ரில் கிட்­டத்­தட்ட 70% நாணய மாற்­று­நர்­கள் சிறு வணி­கர்­களே. வியா­பா­ரம் இல்­லாத இந்­தக் கால­கட்­டத்­தில் எங்­கள் சமூ­கத்­துக்கு பணப்­பு­ழக்­கம் நெருக்­க­டி­யா­கி­விட்­டது,” என்­றார் நாணய மாற்று சங்­கத்­தின் செய­லா­ள­ரான அவர்.

“தற்­கா­லிக வர்த்­தக நிறுத்­தத்­திற்கு தற்­போது வழங்­கப்­படும் ஆறு மாத அதி­க­பட்­சக் கால­கட்­டத்தை சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் இன்­னும் நீட்­டித்­தால் பல­ருக்கு உத­வி­யாக இருக்­கும்,” என்­றார் அவர்.

ராஃபிள்ஸ் பிளே­ஸில் ‘சேஞ்ச் ஆலி’ எனும் பகு­திக்கு இந்­தப் பெயர் வரக்­கா­ர­ணமே, பல்­லாண்டு கால­மாக நாணய மாற்­று­நர்­கள் அங்கு வணி­கம் செய்து வரு­வ­து­தான். எப்­போ­தும் மக்கள் நடமாட்டம் மிகுந்திருக்கும் ‘சேஞ்ச் ஆலி’ இப்­போது வெறிச்சோடிக் காணப்படு கிறது.

கடந்த 42 ஆண்­டு­க­ளாக ராஃ பிள்ஸ் பிளே­ஸின் ‘தி ஆர்­கேட்’ கட்­ட­டத்­தின் முகப்­பில் கடை நடத்­தி­வ­ரும் 76 வயது முஹம்­மது ஃபாரூக், இது­போன்ற நிலை­யைக் கேள்விப்பட்டதோ எதிர்­பார்த்­ததோ இல்லை என்­றார்.

இரண்­டாம் தலை­முறை நாணய மாற்­று­ந­ரான முஹம்­மது ஃபாரூக்­கின் மகன் முஹம்­மது சாதிக் கடந்த 20 ஆண்­டு­க­ளாக தந்தைக்கு உறு­து­ணை­யாக இருந்­து­வ­ரு­கி­றார்.பத்து ஊழி­யர்­க­ளைக் கொண்­டுள்ள அவ­ரது நிறு­வ­னத்­திற்கு 90% வியா­பா­ரம் குறைந்­து­விட்­டது.

“மற்ற நாணய மாற்­று­நர்­க­ளுக்கு வியா­பா­ரம் நடந்­தால்­தான் எங்­க­ளுக்­கும் நடக்­கும்,” என்­ற அவர், இத்­தொ­ழில்­முறை குறித்து விளக்­கி­னார்.

ஒவ்­வொரு நாணய மாற்­று­ந­ருக்­கும் வெவ்­வேறு நாண­யங்­க­ளின் தேவை மாறிக்­கொண்டே இருக்­கும். அவர்­க­ளி­டம் அதி­கம் இருக்­கும் ஒரு குறிப்­பிட்ட நாட்டு நாண­யத்தை மற்ற நாணய மாற்­று­நர்­க­ளி­டம் விற்­பது, தேவைப்­படும் நாட்டின் பணத்தை மற்­ற­வர்­க­ளி­டம் வாங்­கு­வது என பரி­வர்த்­த­னை­கள் நடந்­து­வ­ரு­வது வழக்­கம்.

மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள அவ­ரது கடை­யின் வாடிக்­கை­யா­ளர்­கள் பெரும்­பா­லும் வெளி­நாட்­டிற்­குச் செல்­லும் சிங்­கப்­பூ­ரர்­களும் வெளி­நாட்டு வியா­பா­ரி­க­ளும்­தான்.

“வெளி­நாடு செல்­வ­தற்­காக வாங்கி வைத்த பிற நாடுகளின் நாண­யங்­களை சிலர் சிங்­கப்­பூர் டால­ருக்கு மாற்­றி­வ­ரு­கின்­ற­னர். தங்­கள் தாய்­நாட்­டுக்­குத் திரும்­பு­

ப­வர்­களும் நாண­யம் வாங்க வரு­கின்­ற­னர். அதையும் தாண்டி விமா­னப் போக்­கு­வ­ரத்து தொடங்­கி­னால்­தான் இனி வியா­பா­ரம் நடக்­கும்,” என்­றார் 25 ஆண்­டு­க­ளாக நாணய மாற்று வணி­கத்­தில் ஈடு­பட்­டு­வ­ரும் திரு முஹம்­மது ரஃபீக்.

“ஓராண்டு கடந்­தும் பாதிப்­பு­கள் நீடிக்கும் என்று யாரும் எதிர்­பார்க்­க­வில்லை,” என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!