சிங்கப்பூரிலுள்ள இந்திய நாட்டு ஊழியரின் நலன் பேண சிறப்புத் திட்டம்

சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் இந்­திய நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உதவு வதற்கான திட்டங்களையும் சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் ஆராய்ந்து வருகிறது.

வேலை­யிடத்­திற்கு அப்­பாற்­பட்ட சூழ­லில் ஏற்­படும் விபத்­து­கள், அசம்­பா­விதங்­க­ளால் பாதிப்­ப­டை­வோ­ரின் குடும்­பங்­க­ளுக்கு வழங்­கீட்­டுத் தொகை கிடைக்­கும் வகை­யில் காப்­பு­று­தித் திட்­டத்தை அறி­மு­கம் செய்ய ஏற்­பா­டு­கள் நடந்து ­வ­ரு­வ­தா­கக் கூறி­னார் சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தி­யத் தூதர் திரு பெரி­ய­சாமி கும­ரன்.

சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் பல்லாயிரக்கணக்கான இந்திய நாட்டு ஊழியர்கள், எந்த ஒரு சூழ­லி­லும்; அதா­வது போக்­கு­வரத்­தின் போதோ அல்­லது வார­யி­று­தி நாட்களிலோ, விபத்­து­களில் சிக்க நேரிட்டால், அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு உதவிகிடைக்க இது வழிவகுக்கும் என்றார் அவர்.

சமூக அமைப்­பு­க­ளு­ட­னும் காப்­பு­றுதி வழங்­கும் நிறு­வ­னங்­க­ளு­ட­னும் இணைந்து இந்­தத் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த இந்­தி­யத் தூத­ர­கம் முயற்சி எடுத்­து­வ­ரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இன்­னும் சில மாதங்­களில் அந்­தத் திட்­டம் முழு­மை­யாக வரை­யப்­பட்டு அறி­மு­கம் காணும் என்று அவர் நம்­பிக்­கை தெரி­வித்­தார். சமூ­கத்­தில் பலர் இந்­தத் திட்­டத்திற்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருப்­ப­தா­க­வும் இந்­தத் திட்­டம் வெற்றி காண்­ப­தில் தமக்கு தனிப்­பட்ட மன­நி­றைவு கிட்­டும் என்றும் கூறினார் அவர்.

ஊழி­யர்­க­ளுக்கு ஏற்ற வகை­யில் குறைந்த கட்­ட­ணத்­தில் கிடைக்­கும் வகையில் அவை அமை­யும் என்­றும் கூறி­னார்.

தற்­போது, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான மருத்­துவ காப்­பு­றுதி மட்­டுமே அவ­சி­ய­மா­னது.

ஆண்டுக்கு குறைந்­த­பட்­சம் $15,000 மருத்­துவ செல­வு­களை ஏற்­கும் வண்­ணம் உள்ள அந்­தக் காப்­பீடு ஒவ்­வோர் ஊழி­ய­ருக்­கும் இருக்­க­வேண்­டும். அதற்­கான கட்­ட­ணங்­களை முத­லா­ளி­கள் ஏற்­கும் வண்­ண­மும் சில நிபந்­த­னை­க­ளு­டன் ஊழி­யர்­க­ளு­டன் இணைந்து ஏற்­கும் ஏற்­பா­டும் உள்­ளது.

அடுத்­த­தாக, இந்த நோய்ப் பர­வல் சூழ­லில் ஊழி­யர்­க­ளின் மனநலம் மிக­வும் முக்­கி­யம் என்றும் அதை உறு­தி­செய்து மேம்­ப­டுத்­தும் முயற்­சி­யில் சமூக இயக்­கங்­கள் செயல்­ப­டு­வ­தைச் சுட்­டிக்­காட்­டிப் பாராட்­டி­னார் திரு கும­ரன்.

இந்­தி­யத் தூத­ர­கம், மனி­த­வள அமைச்சு, இந்­திய நிர்­வா­கக் கல்விக் கழ­கம் (ஐஐ­எம்) முன்­னாள் மாண­வர் சங்­கம், 'இட்ஸ்­ரெய்­னிங்­ரெ­யின்­கோட்ஸ்' எனும் லாப­நோக்­கற்ற சமூக அமைப்பு இணைந்து வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான உள்­ளூர் சுற்­றுப் பய­ணத்தை ஏற்­பாடு செய்­தது.அதுபற்­றி விவரித்த திரு குமரன், கடந்த ஆண்டு இறு­தி­யில் அவ்­வா­றான ஒரு சுற்­றுப்­ப­ய­ணத்­தின்­போது தாமும் இணைந்து பேருந்­தில் பய­ணித்து ஊழி­யர்­க­ளு­டன் உரை­யா­டி­யதை நினை­வு­கூர்ந்­தார்.

சிங்­கப்­பூ­ரில் மனி­த­வள அமைச்சு ஊழி­யர்­க­ளின் நல­னில் மிகுந்த கவ­ன­மும் அக்­க­றை­யும் எடுத்து வரு­வ­தா­கக் கூறிய அவர், இந்­தி­யத் தூத­ர­கம் அவர்­க­ளு­டன் இயன்றவரை இணைந்து செய­லாற்றி வந்­த­தைச் சுட்­டி­னார்.

இந்­தி­யச் சமூக அமைப்­பு­க­ளு­டன் இணைந்து 'வைஃபை' கருவி வழங்­கி­யது, வாய்ப்பு கிடைக்­கும் போதெல்­லாம் ஊழி­யர் மன நலத்­திற்­கா­க­வும் உற்­சா­க­மூட்­ட­வும் அவர்­க­ளைச் சந்­திப்­பது என பல வழி­களில் ஊழி­யர்­க­ளுக்­கா­க­ இந்­தி­யத் தூத­ர­கம் செய­லாற்றி வரு­வதை அவர் பகிர்ந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!