அயலக ஊழியர்களின் நல்வாழ்வில் அக்கறை

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் பல மாத காலம் விடுதிகளிலேயே அடைபட்டுக் கிடக்க நேர்ந்த பல்லாயிரம் வெளிநாட்டு ஊழியர்களின் மனங்களில் எண்ண அலைகள் கட்டுக்கடங்காது ஆர்ப்பரித்து இருந்திருக்கலாம். அந்த அலையோசை, அவர்களை உளரீதியாகப் பாதித்துவிடாமல் தடுத்து, அவர்களின் மனநலம் பேண அரசாங்கமும் சமூக அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ப. பாலசுப்பிரமணியம்

கடந்­தாண்டு ஏப்­ரல் மாதத்­தில் கொவிட்-19 தொற்று தீவி­ரம் அடைந்­ததையடுத்து, தங்­கு­விடுதி­களில் 300,000க்கு மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

கொவிட்-19 பர­வ­லைத் தடுப்­ப­தற்­காக அர­சாங்­கம் அக்­கட்­டுப்­பாட்டை விதித்­தது. அது நடப்­புக்கு வந்து ஓராண்­டுக்கு மேலா­கி­விட்ட நிலை­யில், ஊழி­யர்­க­ளின் மன­ந­லம் குறித்து அலசி ஆரா­ய்ந்து வந்­தது தமிழ் முரசு செய்­திக் குழு.

தங்­க­ளைச் சுற்றி என்ன நடக்­கிறது, எதற்­காக வேறு இடங்­களுக்கு மாற்­றப்­ப­டு­கி­றோம் என்ற புரி­யாமை.

எழுத்து வடி­வில் கொடுக்­கப்­பட்ட கொவிட்-19 சார்ந்த தக­வல்­களை முழு­மை­யா­கப் புரிந்­து­கொள்ள முடி­யா­த­தால் குழப்­பம்.

மாற்­றப்­பட்ட இடத்­தில் அடிப்­ப­டைத் தேவை­யான பொருள்­கள் இல்­லாமை, வேலை மற்­றும் சம்­பள விவ­கா­ரங்­கள் குறித்த பதற்­றம்.

இவற்­றுக்­கெல்­லாம் மேலாக, தாய்­நாட்­டில் மோச­ம­டை­யும் கிருமிப் பரவல் தங்­க­ளின் குடும்­பத்­தைப் பாதித்துவிடுமோ என்ற அச்­சம்.

தங்­கு­வி­டு­தி­களில் சென்ற ஆண்டு முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­ட­தும் அரசு சாரா சமூக நல அமைப்­பு­கள், மனி­த­வள அமைச்­சு­டன் அணுக்­க­மா­கச் செயல்­பட்டு தொடக்­கச் சவால்­க­ளைச் சமா­ளிக்க உத­வின.

அவற்­றுள் ஒன்­றான ஹெல்த்­செர்வ் அமைப்பு, கடந்­தாண்டு ஜூலை மாதம் வரை, வாரத்­தில் மூன்று முறை மெய்­நி­கர் முறை­யில் ஆலோ­சனை வழங்கி வந்­தது.

குறிப்­பாக, இந்­திய ஊழி­யர் ஒரு­வர் கடந்­தாண்டு ஏப்­ரல் மாதம் கூ தெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யில் தமது உயிரை மாய்த்­துக்­கொண்­டது பர­வ­லா­கப் பேசப்­பட்­டது.

அச்­ச­ம­யம் ஹெல்த்­செர்வ் அமைப்­பின் தொண்­டூ­ழிய ஆலோ­ச­கர்­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­க­ளைத் தாங்­களே காயப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான கார­ணங்­களைக் கண்­ட­றி­யும் பணி­யில் இறங்­கி­னர்.

உயிரை மாய்த்­துக்­கொண்­ட­வர்க்கு நெருக்­க­மா­ன­வர்­களும் சக ஊழி­யர்­களும் மனத்­த­ள­வில் பாதிக்­கப்­பட்டு இருக்­க­லாம் என்­பதை உணர்ந்து, அவர்­க­ளுக்­கும் ஆலோ­சனை வழங்க முனைந்தனர்.

கடந்த ஆண்டு ஏப்­ரல் முதல் ஆண்டு இ­று­தி­வரை, ஏறக்­கு­றைய 1,000 ஆலோ­சனை அமர்­வு­களில் தொண்­டூ­ழி­யர்­கள் ஈடு­பட்­ட­னர்.

“வெவ்­வேறு இடங்­க­ளுக்கு மாற்­றப்­ப­டு­வது அல்­லது ஒரே அறை­யில் தனி­மை­யில் இருப்­பது வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குச் சவா­லாக விளங்­கி­யது. தாய­கத்­தில் நடந்த குடும்ப வி‌‌ஷ­யங்­களும் திரு­ம­ணம் அல்­லது குடும்ப உறுப்­பி­ன­ரின் மறை­வுக்­கா­கத் தாய­கம் திரும்ப முடி­யா­மல் போன­தும் மன­உ­ளைச்­சலுக்கு வித்­திட்­டது,” என்­றார் ஹெல்த்­செர்வ் தொண்­டூ­ழிய ஆலோ­ச­க­ர் திரு­மதி துர்கா அறிவன், 40.

இப்­படி திரு­ம­ணத்­திற்­கா­கக் காத்­தி­ருந்த வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வர், தமக்கு வந்த ஒரு நோய் கார­ண­மாக தம் உயி­ரையே மாய்த்­துக்­கொள்ள எண்­ணம் கொண்டு இ­ருந்­தார்.

அந்­நோ­யைக் குணப்­ப­டுத்த முடி­யும் என்று திரு­மதி துர்கா அந்த ஊழி­ய­ருக்கு ஒரு மாத கால­மாக நம்­பிக்கை கொடுத்­தார். இன்று அந்த ஊழி­யர் தாய­கம் திரும்பி, குணப்­ப­டுத்­தக்­கூ­டிய நோய்க்கு சிகிச்சை பெற்­ற­வாறு, திரு­ம­ண­மும் புரி­ய­வுள்­ளார்.

ஹெல்த்செர்வ் அமைப்­பின் உதவியை நாடும் ஊழி­யர்­களில் ஏறக்­கு­றைய 45% அபாய நிலை­யில் உள்­ள­வர்­கள் என வகைப்­படுத்­தப்­பட்டனர்.

அவர்­கள் தம்மைத் தாமே காயப்­படுத்­திக்­கொள்ள அல்­லது உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் சாத்­தி­யம் உடை­ய­வர்­களா என்று கணிக்­கப்­பட்­டது. அதில் அதி­க­மான இந்­திய ஊழி­யர்­கள் இடம்­பெ­று­கின்­ற­னர் என்று ஹெல்த்­செர்வ் அமைப்பு தெரி­வித்­தது.

“கொரோனா தொற்று ஒரு­வ­ரி­டம் நிரந்­த­ர­மாக இருந்­து­வி­டாது. சக ஊழி­ய­ரு­டன் அதிக பழக்­கம் இல்­லா­விட்­டா­லும், அவ­ரி­டம் நலம் விசா­ரிக்­கும்­போது தமது பிரச்­சினை­களை அவர் பகிர்ந்­து­கொள்­ள­லாம், இத­னால் அவ­ரது மனஅழுத்­தம் குறைய வாய்ப்புள்ளது,” என்றார் ஹெல்த்­செர்வ் அமைப்­பின் மன­நல ஆலோ­சனை சேவை­கள் பிரி­வின் தலைவர் திரு ஜஸ்­டின் பால்.

“சவால்­மிக்க சூழலில் இருந்­து விடு­ப­டக்­கூ­டிய மீள்­தி­றனை வெளிநாட்டு ஊழியர்கள் கொண்­டி­ருப்­பது பாராட்­டுக்­கு­ரி­யது. அதி­லி­ருந்து நாம் கற்­றுக்­கொள்ள வேண்­டி­யவை நிறைய உள்­ளன,” என்று அவர்களுடன் இணைந்து செயல்பட்ட அனுபவத்தை திரு ஜஸ்டின் பகிர்ந்துகொண்டார்.

குடும்பத்தைக் காண ஏக்கம்

கட்­டு­மான ஊழி­ய­ர் ம.அ. ரஞ்­சித்­கு­மார், 27, கொவிட்-19 தொற்­றி­னால் பாதிக்­கப்­பட்டு குண­ம­டைந்­தவர்.

துவாஸ் பகு­தி­யில் இவர் தங்­கி இருக்கும் வெளி­நாட்டு ஊழி­யர் வி­டு­தி­யில் ஏறக்­கு­றைய 80 பேர் உள்­ள­னர்.

கடந்த ஆண்டு ஏப்­ரல் முதல் தங்­கு­வி­டு­தி­களில் தனி­மைப்­ப­டுத்­தும் கட்­டுப்­பா­டு­கள் நடப்­பிற்கு வர, ‘AGWO’ அமைப்­பின் தொண்­டூ­ழி­யர்­கள் மாதமிரு­முறை தங்­களைத் தொடர்­பு­கொண்டு, தேவை­யான பொருள்­களை வாங்­கித் தர உத­வி­ய­தாக திரு ரஞ்­சித் சொன்­னார்.

முன்பு தமது பிரச்­சி­னை­கள் குறித்து எவ­ரி­ட­மும் பகிர்ந்­து­கொள்­ளா­மல் தானே சமா­ளித்­துக்­கொள்­வதைப் பழக்­க­மா­கக் கொண்­டி­ருந்த அவர், இப்­போது தொண்­டூ­ழி­யர்­களி­டம் மனம்­விட்டு பேசப் பழ­கிக்­கொண்­டார்.

“தஞ்­சா­வூ­ரி­லி­ருந்து சிங்­கப்­பூருக்கு வேலைக்கு வந்து கிட்­டத்­தட்ட இரண்­டரை ஆண்­டுகாலம் ஆகி­விட்­டது. தற்­போ­தைய நிலை­யில் குடும்­பத்­தி­ன­ரின் நலன் குறித்தே மன­உ­ளைச்­சல் ஏற்­ப­டு­கிறது. அவர்­க­ளைப் பார்க்க வேண்­டும் என்ற ஏக்­க­மும் உள்­ளது,” என்­றார் திரு ரஞ்­சித்.

விடுதிகளில் உடற்பயிற்சிக்கூடம் போன்ற வசதிகளை உருவாக்கினால் அது சக ஊழியர்களுக்கு உதவும் என்று அவர் நம்புகிறார்.

அவ­ரைப் போன்றே கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு, உடல் நலம் தேறிய இன்னோர் இந்திய ஊழி­யர் கு.தினே‌ஷ், 28.

முன்பு ஜூரோங் பகு­தி­யில் பெரிய தங்­கு­வி­டு­தி­யில் இருந்த திரு தினேஷ், கடந்த பிப்­ர­வ­ரி­யில் பாசிர் ரிஸ்­ஸில் அமைந்­துள்ள தமது நிறு­வ­னத்­தின் தங்­கு­வி­டு­திக்கு இடம் மாறி­னார்.

அங்­கி­ருக்­கும் அடிப்­படை வசதி­கள் போது­மா­ன­தாக இல்லை என்று கூறும் அவர், எதிர்­கா­லத்­தில் சுற்று வட்­டா­ரத்­தில் உள்ள கடைத்­தொகுதி, வழி­பாட்­டுத்­த­லம் ஆகி­ய­வற்­றுக்­குச் சென்று வர அனு­மதி கொடுத்­தால் சற்று ஆறு­தலாக இருக்­கும் என்று சொன்­னார்.

மனநலம் பேண...

சென்ற ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் ஹெல்த்­செர்வ் அமைப்­பின் மெய்­நிகர் சந்­திப்­புத்­த­ளம் வாயி­லாக வாரம் மும்­முறை வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கும் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட்­டார் பிரா­மி­சஸ் (வின்ஸ்லோ) மருந்­த­கத்­தின் மூத்த மன­நல மருத்­து­வர் டாக்­டர் ஜேக்­கப் ராஜே‌ஷ் (படம்).

தனிமை உணர்வு, நம்­பிக்­கை இழத்­தல், வேலையும் வரு­மா­னமும் பறி­போய்­வி­டுமோ என்ற பதற்­றம், வெளி­நாட்­டில் இருக்­கும் குடும்­பத்­தி­னர் மற்­றும் தங்­க­ளின் நலம் பற்றிக் கவலை போன்ற உணர்­வு­களை ஊழி­யர்­கள் அனு­ப­வித்­த­தாக டாக்­டர் ராஜேஷ் குறிப்­பிட்­டார்.

“சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பிவிடுவரோ என்ற ஐயமும் அவர்களுக்கு இருந்தது. வி­டு­தி­களில் பொழு­து­போக்கு வச­தி­கள் இருப்­பது மனநலம் பேண வழி­வகை செய்யும். ஆங்­கி­லம் கற்­றல் போன்ற இணை­யம்வழி தாமா­கவே கற்­றுக்­கொள்­ளும் வச­தி­களை ஏற்­ப­டுத்­தித் தர­லாம். விடுதி­ நடத்துநர்கள் வெளி­நாட்டு ஊழி­யர்­களின் உள­வி­யல் தேவை­க­ளைப் புரிந்­து­கொள்­வ­தும் அவர்­க­ளின் பிரச்­சினை­க­ளைச் செவி­ம­டுப்­ப­தும் முக்­கி­யம். கலை, கைவினை, இசை சார்ந்த நட­வ­டிக்­கை­களும் உத­வும். எடுத்­துக்­காட்­டாக, வண்­ணம் தீட்­டும் பொருள்­களை அவர்களுக்கு வழங்கி, படம் வரையச் சொல்லலாம். https://www.facebook.com/Art4SGMW/ என்ற சமூக ஊட­கப் பக்­கம் வழி­யாக ஓவி­யப் போட்­டி­யும் நடத்­தப்­படு­கிறது,” என்றார் டாக்டர் ராஜேஷ்.

உணர்வுகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளாப் போக்கு

பெரும்­பா­லான இந்­திய, பங்­ளா­தே‌ஷ் ஊழி­யர்­கள் தங்­க­ளது உணர்ச்­சி­க­ளைப் பிற­ரோடு பகிர்ந்­து­கொள்­வ­தில்லை என்­றார் AGWO என்ற வெளி­நாட்டு ஊழி­யர் நல்­வாழ்வு இயக்­கத்­தின் தோற்­று­விப்பு உறுப்­பி­னர் திரு சாமு­வேல் கிஃப்ட் ஸ்டீபன் (கீழ்ப்­ப­டத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வ­ரு­டன்).

பெரும்­பா­லும் தமது இயக்­கத்­தின் உதவி எண்ணை அழைக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள், உடல்­ந­லம், உண­வுப்­பொ­ருள்­கள் தொடர்­பில் உதவி கோரு­வர் என்­றும் ஆனால் மன­ந­லம் குறித்­துப் பேசு­வ­தில்லை என்­றும் திரு சாமு­வேல் சொன்­னார்.

மன­ந­லப் பிரச்­சினை இருப்­போர்க்கு உதவ, ஒவ்­வொரு தங்­கு­வி­டு­தி­யி­லும் ஓரிரு வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு சக ஊழி­யர்­க­ளி­டம் உயிரை மாய்த்­துக்­கொள்­வ­தற்­கான அறி­கு­றி­க­ளைக் கண்­ட­றி­யும் உத்­தி­க­ளைக் கற்­றுக்­கொ­டுத்து, ஐயம் தரும் வித­மாக நடந்­து­கொண்­டால் உட­ன­டி­யாக தங்­க­ளைத் தொடர்­பு­கொள்­ளும் முறையை AGWO கையாள்­கிறது.

தற்­போது வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஏறத்­தாழ 150 பேர், தங்­க­ளது தங்­கு­விடு­தி­களில் மன­ந­லத் தூதர்­க­ளா­கச் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

“எங்­க­ளது அனு­ப­வத்­தி­லி­ருந்து, அபாய மன­நி­லை­யில் இருக்­கும் பத்­துப் பேரில் ஒரு­வர்­தான் உதவி எண்­ணுக்கு அழைப்­பார். எஞ்­சி­யோர் தாமா­கவே காயப்­ப­டுத்­திக்­கொள்ள வாய்ப்­புண்டு,” என்­றார் அவர்.

தக்க நேரத்­தில் செயல்­பட்­ட­தில், துவாஸ், உட்­லண்ட்ஸ் பகு­தி­களில் வசிக்­கும் இரு வெளி­நாட்டு ஊழி­யர்­களை உயிரை மாய்த்­துக்­கொள்­வ­தில் இருந்து தடுத்­து­விட்­டோம் என்­றார் திரு சாமு­வேல்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் மன­ந­லம் பேண, கிரிக்­கெட் போட்டி போன்ற வெளிப்­புற நட­வ­டிக்­கை­க­ளை­யும் ‘கேரம்’ விளை­யாட்டு போன்ற உள்­ளக நட­வ­டிக்­கை­களை­யும் AGWO நடத்­தி­யது.

இணை­யம் வழி­யாக உடற்­ப­யிற்சி உத்­தி­களை வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் பகிர்ந்­து­கொண்டு, அவர்­களின் உடற்­பயிற்­சிக் காணொ­ளி­களை ‘வாட்ஸ்­அப்’ செயலி வழி­யாக அனுப்­பச் செய்து, ரொக்கப் பரி­சு­களை வெல்­லும் போட்­டி­களும் இடம்­பெற்­றன.

இது­போன்ற நட­வ­டிக்­கை­கள், ஊழி­யர்­க­ளைத் தங்­க­ளது பிரச்­சி­னை­களில் இருந்து மடை­மாற்றி, நேர்­ம­றை­யான சிந்­த­னைக்­குத் திசை­தி­ருப்ப உத­வு­வதாகக் கூறப்படுகிறது.

தங்­க­ளது வேலை அனு­மதி அட்டை முடி­யும் தறு­வா­யில், மற்ற நிறு­வ­னத்­தில் வேலைக்­குச் சேர ஊழி­யர்­கள் அனுப்­பும் விண்­ணப்­பம் மனி­த­வள அமைச்­சால் நிரா­க­ரிக்­கப்­ப­டும்­போது, அது அவர்­க­ளி­டம் பெரும் மனஅழுத்­தத்தை உண்­டாக்கு­கிறது. ஏனெ­னில், இன்­னொரு வேலை கிடைக்­கா­மல் போனால் அவர்­கள் தாய­கம் திரும்ப வேண்­டும் என்­றார் ‘TWC2 (Transient Workers Count Too)’ என்ற வெளி­நாட்டு ஊழி­யர் நல அமைப்­பின் நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர் திரு­வாட்டி கிறிஸ்­டின் பெலி.

நீரி­ழிவு போன்ற நாட்­பட்ட உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் குறித்து ஊழி­யர்­கள், முத­லா­ளி­க­ளி­டம் தெரி­விப்­ப­தில்லை. ஏனெ­னில், சொன்­னால் தாய­கத்­திற்கு அனுப்பி விடு­வார்­களோ என்று அவர்­கள் அஞ்­சு­வ­தா­கக் கூறிய திரு­வாட்டி கிறிஸ்­டின், அதற்­கான மருந்­தைத் தாய­கத்­தி­லி­ருந்து அவர்­கள் வர­வ­ழைத்­துக்­கொள்­வது வழக்­கம் என்­றும் சொன்­னார்.

தங்­கு­வி­டு­தி­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தால் ஊழியர்கள் மருந்­தைப் பெறு­வது சிர­ம­மாகிறது என்­றும் அத­னால் தங்­க­ளது அமைப்பு கூடு­த­லான ஊழி­யர்­க­ளுக்கு நாட்பட்ட நோய்களுக்கான மருத்­து­வத் தேவை­க­ளுக்கு உதவி வரு­கிறது என்­றும் அவர் கூறினார்.

ஊழியர்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய அமைச்சு

மனி­த­வள அமைச்­சின் ‘ஏஸ் (Assurance, Care & Engagement Group)’ பிரிவு, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் நல்­வாழ்­வுக்­கான திட்­டங்­களை அமல்­ப­டுத்­தி­யுள்­ளது.

இரண்­டாம் கட்ட தளர்வு (அதி­க­ரிக்­கப்­பட்ட விழிப்­பு­நிலை) அறி­விக்­கப்­ப­டு­முன், தங்­கு­வி­டு­தி­களில் சமைக்­க­வும் விளை­யாட்டு வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்­த­வும் அனு­மதி வழங்­கப்­பட்­டது. இதர பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைச் சுற்­று­லா­வுக்கு அழைத்­துச் செல்­வ­தும் நடப்­பில் இருந்­தது.

மேலும், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான பொழு­து­போக்கு நிலை­யத்­திற்கு வாரத்­தில் மூன்று முறை­யா­வது ஊழி­யர்­கள் செல்ல முடிந்­தது.

ஆனால் அதி­க­ரிக்­கப்­பட்ட விழிப்­பு­நிலை கட்­டுப்­பா­டு­க­ளைத் தொடர்ந்து, ஊழி­யர்­க­ளின் பாது­காப்­பைக் கருதி, பொழு­து­போக்கு நிலை­யத்­திற்­கான அனு­மதி ரத்து செய்­யப்­பட்­டது. ஆனால், பாது­காப்பு விதி­மு­றை­க­ளின் அடிப்­ப­டை­யில், தங்­கு­வி­டு­தி­யில் உள்ள பேரங்­கா­டிக்­குச் செல்­வது போன்­ற­வற்­றுக்­கான அனு­மதி தொடர்­கிறது.

சமூகப் பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து இணை­ய­வ­ழிப் போட்­டி­கள், கற்­றல் வாய்ப்பு­களை ஊழி­யர்­க­ளுக்கு ‘ஏஸ்’ பிரிவு வழங்கி வரு­கிறது. மன­நல உதவி தொடர்­பான தக­வல்­கள், ‘FWMOMCare’ செயலி மூலம் ஊழி­யர்­க­ளி­டம் பகி­ரப்­ப­டு­கிறது.

கொவிட்-19 சூழல் மேம்­பட்­ட­தும், பொழு­து­போக்கு நிலை­யத்­திற்­குச் செல்ல அனு­மதிக்கவும் படிப்­ப­டி­யாக இன்­னும் அதிக பொழு­து­போக்கு நட­வ­டிக்­கை­களில் அவர்­கள் ஈடு­ப­ட­வும் திட்­ட­முள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­காக அர­சாங்­கம் புதி­ய­தொரு சுகா­தா­ரக் கட்­ட­மைப்பை இன்­னும் சில மாதங்­களில் ஏற்­ப­டுத்­த­வுள்­ளது.

வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யம்

வெளி­நாட்டு ஊழி­யர் நிலை­யம் (MWC) 24 மணி நேர தொலை­பேசி உதவி எண்­ணுக்கு அழைக்­கும் சேவையை ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கு­கிறது. இதில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் தாய்­மொ­ழி­யில் பேசக்­கூ­டி­ய­வர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர்.

கடந்த ஆண்டு ஏப்­ரல் முதல் நாள்­தோ­றும் 1,000 காணொ­ளித் தொடர்­பு­கள் மூல­மாக உதவி தேவைப்­படும் ஊழி­யர்­களைச் சென்­ற­டை­யும் முயற்­சி­யில் நிலை­யம் இறங்­கி­யது.

ஊதி­யம் தரப்படாமை, முறை­யற்ற வேலை அனு­மதி அட்டை ரத்து உள்ளிட்ட பிரச்­சி­னை­களை மனி­த­வள அமைச்சு அதி­கா­ரி­கள் தீர்க்­க­வும் அவை வழி ஏற்படுத்திக் கொடுத்தன.

இவ்­வாறு பாதிப்­ப­டைந்த ஊழி­யர்­களுக்கு நிதி ஆத­ரவு வழங்­க­வும் நிலை­யம் நிதி திரட்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்­டது.

தனது ஃபேஸ்புக் பக்­கம் மூல­மாக கற்­றல் மற்­றும் கலை நிகழ்ச்­சி­களில் ஊழி­யர்­கள் பங்­கு­பெ­ற­வும் நிலை­யம் வழி­வ­குத்­துள்­ளது.

கடந்த மே தின வெளி­நாட்டு ஊழி­யர் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­யில் தமி­ழக நடிகை பவித்ரா லட்­சு­மி­யும் பாட­கர் அறி­வும் அத்­த­ளத்­தில் இணைந்­த­னர். நேர­லை­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்ட அந்­நி­கழ்ச்­சியை ஏறத்தாழ 58,000 பேர் பார்­வை­யிட்­ட­னர்.

தொண்டூழியர்கள் தேவை

ஹெல்த்செர்வ் (Healthserve) அமைப்பு 2006ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவ பராமரிப்பு, மனநல ஆலோசனை, சமூக ஆதரவு எனப் பல்வேறு சேவைகளை வழங்கும் தொண்டூழிய அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான அவசர உதவி எண்ணை நாள்தோறும் 24 மணி நேரமும் செயல்படுத்த தொண்டூழியர்கள் தேவை. அவர்கள் மாதம் நான்கு மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரத்திற்கு தொண்டூழியத்தில் ஈடுபடலாம்.

குறைந்தது ஓராண்டு காலம் இதில் ஈடுபட கடப்பாடு கொண்டு இருப்பது உகந்தது. தொண்டூழியம் புரிய விரும்புவோர் குறைந்தது 23 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தொண்டூழியப் பணியை ஆற்ற பயிற்சிக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

தமிழில் பேசக்கூடியவர்கள் அமைப்புக்குத் தேவை.

அவசரகாலத்தில் உதவும் தொண்டூழியராக, அவசர உதவி எண்ணுக்கு அழைப்போரின் பிரச்சினைகளைப் பொறுமையுடன் செவிமடுத்து, நிபுணத்துவ முறையில் அவர்களுக்கு உதவ வேண்டும்.

ஆங்கிலம் அல்லது உதவி கோரும் வெளிநாட்டு ஊழியர் இயல்பாகப் பேசக்கூடிய மொழியில் உரையாட வேண்டியிருக்கும்.

தொண்டூழியர்களாகச் சேர விரும்புவோர் volunteer@healthserve.org.sg என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகத் தொடர்புகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!