‘அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள்’ அங்­கத்­தில் இரண்டு தமி­ழர்­கள்

சமூ­கத்­திற்­குப் பங்­காற்றி வரும் அல்­லது குறிப்­பி­டத்­தக்க சாதனை படைத்த ஒன்­பது சிங்­கப்­பூ­ரர்­களை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் அணி­வ­குப்­பின் இறுதி அங்­கம் அமைந்­தது. அதில் இரண்டு தமி­ழர்­கள் இடம்­பெற்­றி­ருந்­த­னர்.

‘கிருஷ்ணா’ஸ் ஃப்ரீ மீல்ஸ்’ (Krsna’s Free Meals) என்ற சமூ­க­நல உண­வ­கத்­தைச் சேர்ந்த 52 வயது குமாரி லதா கோவிந்­த­சாமி, முதுமை வய­தி­லும் நெடுந்­தொ­லைவு ஓட்­டக்­கா­ர­ரா­கத் திக­ழும் 74 வயது திரு க. சந்­தி­ர­சே­க­ரன் ஆகி­யோரே அவர்­கள். தங்­கள் பெற்­றோ­ரின் கரு­ணையை உணர்ந்த திரு­மதி காந்­தினி தேவி தாஸி, திரு­மதி சந்­தி­ர­லத்­திகா தேவி தாஸி, லதா ஆகிய சகோ­த­ரி­கள் தொடங்­கிய முயற்­சி­தான் லிட்­டில் இந்­தி­யா­வின் வீரா­சாமி ரோட்­டில் அமைந்­துள்ள கிருஷ்ணா’ஸ் உண­வ­கம்.

பொது­மக்­கள் வழங்­கும் நன்­கொ­டையை நம்­பிச் செயல்­படும் இந்த உண­வ­கம், தின­மும் கிட்­டத்­தட்ட ஆயி­ரம் பேருக்கு உணவு வழங்கி வரு­கிறது.

“இவ்­வாண்டு தேசிய தினக் கருப்­பொ­ரு­ளான ‘ஒன்­றி­ணைந்த நமது சிங்­கப்­பூர் உணர்வு’ என்­ப­தற்கு ஏற்ப கிருஷ்ணா’ஸ் உண­வ­கம் காலை மற்­றும் மதிய உண­வு­களை, சிர­ம­மான சூழ­லில் இருப்­போ­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் வழங்கி வரு­கிறது. மற்­ற­வர்­கள் செய்­யும்­வரை காத்­தி­ருக்­கா­மல் நாமே முன்­னெ­டுத்து சமூ­கத்­திற்கு உத­வ­லாம் என்­ப­தற்­குச் சான்­றாக கிருஷ்ணா’ஸ் உண­வ­கம் விளங்­கு­கிறது. சிறி­த­ளவு கரு­ணை­யும் நன்­றி­யு­ணர்­வும் இருந்­தாலே போதும்,” என்­றார் கிருஷ்ணா’ஸ் உண­வ­கத்­தின் மக்­கள் தொடர்பு நிர்­வாகி லதா.

வசதி குறைந்­த­வர்­க­ளுக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் பெரு­ம­ள­வில் கைகொ­டுத்­துள்ள இந்த உண­வ­கம், 2018ஆம் ஆண்டு முதல் இயங்கி வரு­கிறது. கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடங்­கிய காலத்­தில் தங்­கு­வி­டு­தி­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்­குக் கிட்­டத்­தட்ட மூன்று வாரங்­க­ளாக தின­மும் 1,000 உண­வுப் பொட்­ட­லங்­கள் வழங்­கி­யதை நினை­வு­கூர்ந்­தார் லதா. அத்­து­டன் இம்­மா­தம் 9ஆம் தேதி தேசிய தின உணர்­வில் 1246 பரி­சுப் பைக­ளை­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கி­யது கிருஷ்ணா’ஸ் உண­வ­கம்.

அங்கீகரிக்கப்பட்ட மற்­றொ­ரு­வர் சந்­தி­ர­சே­க­ரன். இவர் 56 வயது வரை உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டா­த­வர். இல­வச மருத்­து­வப் பரி­சோ­தனை ஒன்­றில் தமக்கு இருக்­கும் ரத்த அழுத்­தத்­தைக் கட்­டுப்­ப­டுத்த, உடற்­ப­யிற்சி செய்­வது அவ­சி­யம் என்று மருத்­து­வர் சொன்ன பிறகு அன்­றி­லி­ருந்து இன்­று­வரை விடா­மல் ஓட்­டங்­களில் ஈடு­ப­டு­கி­றார் அவர். கடந்த 18 ஆண்­டு­க­ளாக பல­த­ரப்­பட்ட நெடுந்­தொ­லைவு ஓட்­டங்­களில் ஆர்­வத்­து­டன் கலந்­து­கொண்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார் சந்­தி­ர­சே­க­ரன்.

கொவிட் கட்­டுப்­பா­டு­க­ளால் கடந்த ஈராண்­டு­க­ளாக நேரடி ஓட்ட நிகழ்ச்­சி­கள் ரத்து செய்­யப்­பட்­டா­லும் மெய்­நி­கர் ஓட்­டங்­க­ளி­லும் தனிப்­பட்ட அள­வி­லும் சுறு­சு­றுப்­பான வாழ்க்­கை­மு­றையை அவர் பின்­பற்றி வரு­கி­றார்.

வார­நாட்­களில் ஆறு கிலோ மீட்­டர் (கி.மீ) தூரம் ஓடு­வது, அடுக்­கு­மா­டிக் கட்­ட­டங்­க­ளின் படிக்­கட்­டு­களில் ஏறி இறங்­கு­வது, வீட்­டி­லி­ருந்­த­வாறு உடற்­ப­யிற்சி சாத­னத்­தைப் பயன்­ப­டுத்­து­வது என்று துடிப்­பாக உடற்­ப­யிற்சி செய்­வார் சந்­தி­ர­சே­க­ரன். 2016ஆம் ஆண்டு முதல் ஒவ்­வோர் ஆண்­டும் ‘சன்­டெளன்’ நெடுந்­தொ­லைவு ஓட்­டத்­தில் கலந்­து­கொள்­ளும் இவர், கடந்த ஆண்டு ‘தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ மெய்­நி­கர் ஓட்­டத்­தில் 175 கி.மீ, 17.5 கி.மீ ஆகிய இரண்டு பிரி­வு­களில் ஓடி, இலக்கை வெற்­றி­க­ர­மாக அடைந்­தார். 175 கி.மீ ஓட்டத்தில் முதியோரிடையே முதலாவதாக வந்தார்.

“வய­தா­கி­விட்­டதே என்று ஒரு­போ­தும் நினைக்­கா­தீர்­கள். இந்த எண்­ணம்­தான் உங்­கள் ஆரோக்­கி­யத்­திற்கு முதல் எதிரி. சோர்வு, சோம்­பல், ஊக்­க­மின்­மைக்கு இரை­யா­கி­வி­டு­வீர்­கள். அனைத்து வியா­தி­களும் தானாக வந்து ஒட்­டிக்­கொள்­ளும். இள­மை­யு­டன் இருப்­ப­தாக எண்­ணிக்­கொள்­ளுங்­கள். அந்த இள­மையை உண­ருங்­கள். இது­தான் ஆரோக்­கி­யத்­தின் ரக­சி­யம். இந்த எண்­ணம் உங்­களை உற்­சா­க­மாக, சுறு­சு­றுப்­பாக வைத்­துக்­கொள்­ளும்,” என்­றார் திரு சந்­தி­ர­சே­க­ரன்.

செய்தி:

எஸ்.வெங்­க­டேஷ்­வ­ரன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!