சான்: பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியம்

பெருந்­தொற்­றுச் சூழல் ஏற்­ப­டுத்­தி­யுள்ள மாற்­றங்­க­ளைச் சமா­ளிப்­ப­தில் பிள்­ளை­க­ளுக்கு உதவ, வலு­வான குடும்ப பந்­தங்­களை வளர்ப்­பது அவ­சி­யம் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் கூறி­யுள்­ளார்.

பிள்­ளை­கள் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி பெற்­றொ­ரு­டன் வெளிப்­ப­டை­யா­கப் பகிர்ந்­து­கொள்ள முடி­கிற சூழலை உரு­வாக்க வேண்­டும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

சிறு­வர்­கள் மன­ந­லம் குறித்த இணைய வழிக் கலந்­து­ரை­யா­ட­லில் அமைச்­சர் நேற்று பேசி­னார். மாக்­கான் ஆல்­ரெடி எனும் அமைப்பு நடத்­திய அந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் பெருந்­தொற்­றுச் சூழ­லில் பிள்ளை வளர்ப்பு குறித்த பிரச்­சி­னை­கள் பேசப்­பட்­டன.

பிள்­ளை­களை ஓயா­மல் மற்­ற­வர்­க­ளு­டன் ஒப்­பி­டு­வ­தும் மற்ற உற­வி­னர்­க­ளின் ஆத­ரவு அவர் களுக்கு இல்­லா­த­தும் பிள்ளை களைப் பாதிக்­கும் என்று அவர் விளக்­கி­னார்.

பிள்­ளை­கள் மின்­னி­யல் சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தைக் குறைத்து, அவர்­கள் இணை­யப் புழக்கத்­தின்போது தங்களது நல­னைப் பாது­காக்க ஊக்­கப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் திரு சான் குறிப் பிட்­டார்.

செயலி வழி நண்­பர்­க­ளுக்கு இடை­யி­லான உரை­யா­டல்­கள், தக­வல்­கள், படங்­கள் ஆகி­ய­வற்­றின் பரி­மாற்­றங்­க­ளால் பதற்றமடைந்து, தாங்கள் பின்தங்கிவிடுவோமோ என்று பிள்­ளை­கள் அச்­சப்­ப­டாது இருக்க, அவர்­க­ளி­டம் சாத­னங்­களை அளவுடன் பயன்­ப­டுத்­து­வது பற்றி எடுத்­து­ரைக்க வேண்­டும் என்­றார் அவர்.

தக­வல்­கள் இணை­யத்­தில் எளி­தில் கிடைக்­கக்கூடி­யவை என்­றும் அவற்றை அலசி ஆராய்ந்து சரி­வர கையா­ளத் தேவை­யான திறன்­ களைப் பிள்­ளை­கள் வளர்த்­துக்­கொள்வது அவ­சி­யம் என்றும் கலந்­து­ரை­யா­ட­லில் அமைச்­சர் கூறி­னார்.

கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொண்ட 'மாக்­கான் ஆல்­ரெடி' அமைப்­பின் இணை நிறு­வ­னர் லேரி லோ, எவ்வாறு வேலை, குடும்பம் இரண்டுக்கும் இடையே சமநிலை காண்பது என்­று கேட்­டார்.

அதற்கு பதி­ல­ளித்த அமைச்­சர், பள்­ளி­களில் உள்ள பெற்­றோர் ஆத­ர­வுக் குழுக்­களை மேலும் பலப்படுத்த விரும்­பு­வ­தாக பதி­ல­ளித்­தார். பெற்­றோர் மற்­ற­வர்­க­ளின் அனு­ப­வங்­ க­ளி­லி­ருந்து பாடம் கற்க அது உத­வும் என்­றார் அவர்.

புதிய பெற்­றோ­ருக்கு ஏற்­படும் மன­உ­ளைச்­ச­லை­யும் பதற்­றத்­தைச் சமா­ளிக்க உற்­றார், உற­வி­னர்­க­ளின் உத­வியை நாடு­வ­தன் அவ­சி­யத்தை யும் அவர் வலி­ய­றுத்­தி­னார்.

"உதவி கேட்­ப­தால் மற்­ற­வர்­கள் நம்மை தவ­றாக மதிப்­பிட்­டு­வி­டு­வார்­களோ என்ற பயத்­தைக் கைவிட்டு நம் எல்­லோ­ருக்­கும் கண்­டிப்­பாக உதவி தேவைப்­படும் என்ற மன­போக்­குள்ள சூழலை உரு­வாக்க வேண்­டும்," என்­றார் திரு சான்.

இணைய அச்­சு­றுத்­தல் போன்ற பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளிக்க, நண்­பர்­க­ளி­டம் கனி­வன்­பு­டன் நடந்­து­கொள்ள பிள்­ளை­க­ளுக்­குக் கற்றுத் தர வேண்­டும் என்­றார் திரு சான்.

பெற்­றோர் தங்­க­ளது எதிர்­பார்ப்­பு­க­ளை சரி­செய்து, தேர்வு முடி­வு­களில் குறி­யாக இருக்­கா­மல் பிள்­ளை­க­ளின் வளர்ச்­சி­யி­லும் மேம்­பாட்­டி­லும் கவ­னம் செலுத்­து­வது அவ­சி­யம் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!