உடலில் ஏற்படக்கூடிய சிறுசிறு மாற்றங்களையும் கவனிப்பது அவசியம்

மருத்­து­வத்­து­றைப் பணி­யா­ளர் திரு­வாட்டி தனா, மார்­ப­கப் புற்­று­நோய் தமக்கு இருப்­பதை 2019ஆம் ஆண்டு தொடக்­கத்­தில் அறிந்­து­கொண்­டார். மார்­ப­கத்­தில் வலி இருந்­ததை 2018ஆம் ஆண்­டி­று­தி­யில் உணர்ந்த பிறகு, தாம் வேலை பார்த்த செங்­காங் மருத்­து­வ­ம­னை­யி­லேயே இதற்­கான பரி­சோ­த­னைக்­குச் சென்­றார் அவர். அவ­ருக்­குப் புற்­று­நோய் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து 'கீமோ­தெ­ரபி' சிகிச்சை தொடங்­கி­யது.

மூன்று வார சிகிச்­சையை அடுத்து இவ­ரது உடல்­நிலை மெல்­லத் தேறத் தொடங்­கி­யது. அடுத்த மூன்று, நான்கு ஆண்­டு­க­ளுக்கு மருத்­து­வக் கண்­கா­ணிப்­பில் இருந்­த­தா­க­வும் பின்­னர் ஆண்­டிற்கு ஓரிரு முறை மருத்­து­வ­ரைத் தாம் காண­வேண்டி இருந்­த­தா­க­வும் திரு­வாட்டி தனா கூறி­னார். நோயின் ஆரம்­பக் கட்­டத்­தி­லேயே திரு­வாட்டி தனா பரி­சோ­தனை செய்­து­கொண்­ட­தால் அந்­நோய் மேலும் கடு­மை­யான பாதிப்­பு­க­ளைத் தரு­வ­தைத் தடுக்க முடிந்­தது.

ஆயி­னும், மார்­ப­கப் புற்­று­நோயாளி­களில் 10 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே திரு­வாட்டி தனா­வைப் போல ஆரம்­பக் கட்­டத்­தி­லேயே நோயைக் கண்­ட­றிந்­துள்­ள­னர்.

தங்­க­ளுக்கு நோய் இருப்­பதே பெரும்­பா­லா­னோ­ருக்­குத் தெரி­வ­தில்லை என்ற கவ­லை­ய­ளிக்­கும் தக­வலை செங்­காங் மருத்­து­வ­மனை­யின் மார்­ப­கப் பரா­ம­ரிப்­புப் பிரி­வைச் சேர்ந்த தாதி சுமதி மேரி பகிர்ந்து­கொண்­டார்.

"சிங்­கப்­பூ­ரில் பெண்­க­ளுக்கு ஆக அபா­ய­க­ர­மான உயிர்­கொல்லி நோயாக மார்­ப­கப் புற்­று­நோய் உள்­ளது. கடந்த சில ஆண்­டு­களில் பெண்­க­ளி­டையே ஏற்­பட்ட மர­ணங்­களில், மார்­ப­கப் புற்­று­நோ­யால் இறந்­த­வர்­கள் கிட்­டத்­தட்ட 30 விழுக்­காட்­டி­னர் என்று தேசிய நோய்­கள் பதி­வ­கம் குறிப்­பி­டு­கிறது," என்று ஐந்து ஆண்­டு­களாக இப்­பி­ரி­வில் பணி­பு­ரி­யும் திரு­மதி மேரி தெரி­வித்­தார்.

மார்­ப­கப் புற்­று­நோ­யைத் தடுப்­ப­தற்­கான வழி இல்லை என்­றா­லும் உடல் ஆரோக்­கி­ய­மும் மன ஆரோக்­கி­ய­மும் பொது­வா­கவே நோய் ஏற்­படா­மல் இருக்க வகை­செய்­யும் என்­கி­றார் இந்த மூத்த தாதி.

கடந்த 11 ஆண்­டு­க­ளாக திரு­வாட்டி தனா 'மெமோ­கி­ராம்' பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்­வ­து­டன் தம்­மு­டைய சகோ­த­ரி­க­ளை­யும் நண்­பர்­க­ளை­யும் அப்­ப­ரி­சோ­த­னை­யைச் செய்ய ஊக்­கு­வித்து வரு­கி­றார்.

"மருத்­து­வ­ம­னை­யில் வேலை செய்­வ­தால் நோய் தொடர்­பான விழிப்­பு­ணர்வை என்­னால் மேலும் நன்கு அறிய முடி­கிறது," என்று அவர் கூறி­னார்.

'பிசி­ஆர்ஏ1' என்ற மார்­ப­கப் புற்று­நோய் மர­ப­ணு­வைக் கொண்ட பெண்­கள், தங்­க­ளது வாழ்­நா­ளில் இரு மார்­ப­கங்­க­ளி­லுமே புற்­று­நோய் உரு­வா­கும் அபா­யத்தை எதிர்­நோக்கு­கின்­ற­னர். இந்த மர­ப­ணு­வைக் கொண்­டுள்ள ஆண்­களும் அதே அபா­யத்தை எதிர்­நோக்­கு­வ­தாக மருத்­துவ இணைப் பேரா­சி­ரி­யர் பெனிதா டான் தெரி­வித்­தார்.

ஆயி­னும், எல்லா பெண்­களும் இந்த அபா­யத்தை எதிர்­நோக்­க­லாம் என்று தெரி­வித்த பேரா­சி­ரி­யர் டான், மார்­ப­கப் புற்­று­நோ­யாளி­களில் 70 விழுக்­காட்­டி­ன­ரின் ரத்த உற­வு­க­ளுக்கு இந்­நோய் இல்லை என்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

"75 வயது வரை உயிர் வாழும் பெண்­களில் 13 பேரில் ஒரு­வ­ருக்­குப் புற்­று­நோய் ஏற்­படும் அபா­யம் உள்­ளது. அந்த அபா­யம் நாளாக ஆக அதி­க­ரிக்­கிறது," என்­றார் அவர். சுறு­சு­றுப்­பற்ற வாழ்க்­கை­முறை, மதுப்­ப­ழக்­கம், உடல் பரு­மன், கருத்­த­ரித்­த­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் மாத்­தி­ரை­கள், 'ஹார்­மோன்' சிகிச்சை போன்­றவை புற்­று­நோய்க்­கான அபா­யத்தை அதி­கப்­ப­டுத்­தும் என்று கூறி­னார்.

மார்­ப­கப் புற்­று­நோய் அதி­கம் ஏற்­ப­டு­வ­தால் பெண்­கள் தங்­க­ளது உடல்­ந­ல­னைப் பேணிக்­காத்து அபா­யத்­தைக் குறைக்க முய­ல­வேண்­டும் என்­றார் தனா­விற்கு மருத்­துவ சிகிச்சை அளித்த பேரா­சி­ரி­யர் டான். தனா­வைப் போலவே உட­லில் ஏற்­படும் சிறு மாற்­றங்­களை­யும் பெண்­கள் கவ­னிக்க வேண்­டும் என்­றார் அவர்.

"ஆரம்­பக் கட்­டத்­தில் கண்­டு­பி­டிக்­கப்­படும் மார்­ப­கப் புற்­று­நோய்க்கு, சிகிச்­சைக் கட்­ட­ணங்­கள் குறைவு. குண­ம­டை­யும் வாய்ப்­பும் அதி­கம். எனவே வரு­முன் காப்­பதே சாலச் சிறந்­தது," என்று அவர் கூறி­னார்.

மெமோ­கி­ராம் பரி­சோ­தனை தொடர்­பில் நிதி உத­வித் திட்­டம்

அக்­டோ­பர், நவம்­பர் மாதங்­களில் பெண்­கள் மெமோ­கி­ராம் பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள சிங்­கப்­பூர் புற்­று­நோய் சங்­கத்­தி­ட­மி­ருந்து $25 நிதி உதவி பெற­லாம்.

இவ்­வாண்டு நவம்­பர் 20ஆம் தேதிக்­குள், இத்­திட்­டத்­தின்­கீழ் பங்­கேற்­கும் மார்­ப­கப் பரி­சோ­தனை மையங்­களில் விண்­ணப்­பங்­கள் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டும். நவம்­பர் 30ஆம் தேதிக்­குள் மெமோ­கி­ராம் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட வேண்­டும்.

நிதித் திட்­டத்­திற்­குத் தகு­தி­பெ­று­வது குறித்த மேல்­வி­வ­ரம் அறிய http://bit.ly/scsbcam2021 இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!