புதுப்பொலிவுடன் காந்தி நினைவு மண்டபம்

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை

கார­ண­மாக உல­கெங்­கும் சவால்­மிக்க சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க பல கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைப்

படுத்­தப்­பட்­டுள்­ளன.

இத்­த­கைய கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இடையே லிட்­டில் இந்­தி­யா­வில் அமைந்­துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்­ட­பம் புதுப்­பிக்­கப்­பட்டு புதுப்­பொ­லி­வு­டன், முழு­வீச்­சில் இயங்கி வரு­கிறது.

இதற்கு சிங்­கப்­பூர் இந்­திய நுண்­க­லைக் கழ­கத்­தின் (சிஃபாஸ்) நிர்­வா­கக் குழு, ஊழி­யர்­கள், உறுப்­பி­னர்­கள் ஆகி­யோர் மேற்­கொண்ட மறு­சீ­ர­மைப்பு முயற்­சி­களே கார­ண­மா­கும்.

"மகாத்மா காந்தி நினைவு மண்­ட­பத்தை சிங்கப்பூர் இந்தி மொழிச் சங்கம் 11 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்­தி­ருந்­தது. 2019ஆம் ஆண்­டில் அது அவ்­வி­டத்தை

விட்­டுச் சென்­ற­தும் நினைவு மண்­ட­பம் ஆள் அர­வ­மற்­ற­நி­லை­யில் இருந்­தது," என்று நினைவு மண்­ட­பத்­தின் அறங்­கா­வ­லர் சபை உறுப்­

பி­ன­ரான 88 வயது திரு ஹைதர் சித்­த­வாலா கூறி­னார்.

நினைவு மண்­ட­பம் 2019ஆம் ஆண்டு செப்­டம்­பர் 12ஆம் தேதி­யி­லி­ருந்து மூடப்­பட்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

எண் 3 ரேஸ் கோர்ஸ் லேனில் இருக்­கும் இந்த இரண்டு மாடிக் கட்­ட­டத்­திற்கு 1950ஆம் ஆண்டு ஜூன் மாதம், இந்­தி­யா­வின் முதல் பிர­த­மர் ஜவ­ஹர்­லால் நேரு அடிக்­கல் நாட்­டி­னார். சிங்­கப்­பூர்

இந்­தி­யச் சமூ­கம் தாரா­ள­மாக வழங்­கிய நிதி­யைப் பயன்­ப­டுத்தி இந்த நினைவு மண்­ட­பம் கட்­டப்­பட்­டது.

நினைவு மண்­ட­பத்தை 1953ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் 25ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூ­ருக்­கான அன்­றைய பிரிட்­டிஷ் தூதர் மால்­கம் மெக்­

டோ­னல்ட் அதி­கா­ர­பூர்­வ­மா­கத்

திறந்­து­வைத்­தார்.

"நினைவு மண்­ட­பத்தை இந்­தி­யர் மர­பு­டைமை நிலை­ய­மாக மாற்றி அமைக்க நாங்­கள் முத­லில் திட்­ட­மிட்­டி­ருந்­தோம். ஆனால் சில கார­ணங்­க­ளால் அவ்­வாறு செய்ய முடி­யா­மல் ­போ­னது. அனைத்து இனத்

தவர்­க­ளை­யும் ஈர்க்­கும் இந்­திய அமைப்பு ஒன்று நினைவு மண்­ட­பத்தை ஏற்று நடத்­தி­னால் நன்­றாக இருக்­கும் எனக் கரு­தி­னோம்.

"அவ்­வாறு செய்­வ­தன் மூலம் இந்­தி­யா­வின் சுதந்­தி­ரப் போராட்­டத்­துக்­குத் தலைமை தாங்­கிய மகாத்மா காந்­தி­யின் பெயர் நிலைத்­தி­ருக்­கும். மகாத்மா காந்­திக்கு சிங்­கப்­பூ­ரி­லும் தென்கிழக்­கா­சிய நாடு­க­ளி­லும் தனி மரி­யாதை

உள்­ளது. சிஃபாஸின் கலை­கள், இசை, நட­னம் ஆகி­யவை இந்­தி­மொ­ழி­யில் மட்­டு­மல்ல, அனைத்

துலக நிலை­யிலும் போற்றப் படுகின்றன.

"தனது கலைச் சேவையை விரிவுப­டுத்­தும் எண்­ணத்­தில் இருந்த சிஃபாஸ் நிர்­வா­கத்­

தி­ன­ரி­டம் இந்­தப் பரி­ந்துரையை முன்­வைத்­த­போது அதற்கு அவர்­கள் உட­ன­டி­யாக இணக்­கம் தெரி­வித்­தார்­கள்.

"கலை­கள், இசை, நடன வகுப்பு களு­டன் நினைவு மண்­ட­பம் தற்­போது உயிர்த்­தெ­ழுந்­துள்­ளது," என்­றார் திரு சித்­த­வாலா.

"நினைவு மண்­ட­பத்­தின் உட்

புறங்­களை முழு­மை­யா­கப் புதுப்­பிக்­கும் பொறுப்பை சிஃபாஸ் ஏற்­றுக்­கொண்­டது.

"நினைவு மண்­ட­பம் மிக­வும் பழ­மை­யான கட்­ட­டம். எனவே

கட்­டட முகப்­பின் பாரம்­ப­ரி­யத் தோற்­றத்­தைப் பாது­காப்­ப­து­டன், நவீன அம்­சங்­கள், இந்­திய பாரம்­ப­ரிய கலை­கள், மகாத்மா காந்தி தொடர்­பான நினை­வுப்­பொ­ருள்­கள், உயர் ரக வச­தி­கள் ஆகி­ய­வற்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தில் நாங்­கள் கவ­ன­மா­கச் செயல்­பட்­டோம்.

"நினைவு மண்­ட­பத்­தில் மகாத்மா காந்­தி­யின் கொள்­கை­களை எடுத்­து­ரைக்­கும் அம்­சங்­கள் இருக்க வேண்­டும் என்­ப­தில் அறங்

காவ­லர்­கள் தெளி­வாக இருந்­த­னர். கலைப்­பொ­ருள்­கள், நூல்­கள் ஆகி­ய­வற்­றைக் கொண்ட நூல­கம் நினைவு மண்­ட­பத்­தில் இருக்க வேண்­டும் என்று அவர்­கள் தெரி­வித்­த­னர். அதே சம­யம் சமூக மேம்­பாட்­டுக்கு நினைவு மண்­ட­பம் பயன்­பட வேண்­டும் என்­ப­தில் அவர்­கள் உறு­தி­யாக இருந்­த­னர். இசை, நட­னம், கலை­கள் ஆகி­ய­வற்றை சமூ­கத்­தி­ன­ரி­டம் கொண்­டு­போய் சேர்ப்­பதே சிஃபாஸின் இலக்கு. அறங்­கா­வ­லர்­க­ளின் குறிக்­

கோ­ளைப் போன்றே எங்­க­ளது குறிக்­கோ­ளும் உள்­ளது," என்று சிஃபாஸின் தலை­வர் திரு கே.வி. ராவ் தெரி­வித்­தார்.

நினைவு மண்­ட­பத்­தில் 100 பேர் அமர்ந்து கலை­நி­கழ்ச்­சி­க­ளைப் பார்த்து ரசிக்க ஏது­வாக நவீன அரங்­கம் ஒன்று அமைக்­கப்

பட்­டுள்­ளது.

நீர் புக முடி­யாத தரை, புதுப்­பிக்­கப்­பட்ட மேற்­கூரை, உயர்­தர ஒளி­யூட்டு வச­தி­கள், நவீன ஒலி­பெ­ருக்­கிச் சாத­னங்­கள் ஆகி­யவை நினைவு மண்­ட­பத்தை மேல் நிலைக்­குக் கொண்டு சென்­றுள்­ளன. நினைவு மண்­ட­பத்­தின் நூல­கம் உள்­ளூர் ஓவி­ய­ரான திரு­வாட்டி அஞ்­சலி வெங்­கட்­டின் கைவண்­ணத்­தில் எழி­லுற காட்­சி­ய­ளிக்­கிறது.

மறு­சு­ழற்சி செய்­யப்­பட்ட பருத்தி களைக் கொண்டு பார்ப்­ப­வர்

மன­தைக் கவ­ரும் மகாத்மா

காந்­தி­யின் உரு­வப்­ப­டத்தை அவர் உரு­வாக்­கி­யுள்­ளார்.

மகாத்மா காந்தி தொடர்­பான விலை­ம­திப்­பற்ற, பழைய

நினை­வுப்­பொ­ருள்­கள் நூல­கத்தை அலங்­க­ரிக்­கின்­றன. இந்­தி­யத் தூத­ர­கம் நன்­கொடை வழங்­கிய அரிய நூல்­களும் புகைப்­ப­டங்­களும் நூல­கத்­தில் இடம்­பெ­று­கின்­றன.

இணை­யம் வழி கற்­றலை எளி­தாக்­கும் நோக்­கில் 12 சதுர

மீட்­ட­ரி­லி­ருந்து 42 சதுர மீட்­டர் வரை பரப்­ப­ளவு கொண்ட ஆறு அறை­களில் கணினி­கள் வசதி

களுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட, தேவைக்கு ஏற்ப வடி­வ­மைக்­கப்­பட்ட கலைப்­பொ­ருள்­கள், புகைப்

படங்­கள், செய்­தித்­தாள் அறிக்­கை­கள் ஆகி­யவை கட்­ட­டத்­தின் உட்­பு­ற­மெங்­கும் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன. இவை பொது­மக்­கள், சிஃபாஸ் ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து பெறப்­பட்­டவை.

1949ஆம் ஆண்­டி­லி­ருந்து 2021ஆம் ஆண்டு வரை சிஃபாஸின் வர­லாற்­றைக் குறிக்­கும் சுவர் ஓவி­ய­மும் புதுப்­பிக்­கப்­பட்ட நினைவு மண்­ட­பத்­தின் சிறப்பு அம்­சங்­களில் ஒன்­றா­கத் திகழ்­கிறது.

பாலர் பள்ளி மாண­வர்­க­ளுக்­கான விகாசா அறை, படிக்­கட்­டு­களில் வைக்­கப்­பட்­டுள்ள பரத

நாட்­டிய, கதக் நடன முத்­திரை

களைக் காட்­டும் மிதக்­கும் சிற்­பங்­கள், தமி­ழ­கத்­தைச் சேர்ந்த புகழ்­பெற்ற கர்­நா­டக இசை, ஓவி­யக்­க­லை­ஞர் எஸ். ராஜம்மின் கலைப் படைப்­பு­கள் ஆகி­யவை நினைவு மண்­ட­பத்­துக்கு அழகு சேர்க்­கின்­றன. திட்­ட­மி­டு­தல், வடி­வ­மைப்பு ஆகி­யவை அனைத்­தும் சிஃபாஸின் ஊழி­யர்­கள், நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர்­கள் ஆகி­யோ­ரால் செய்­யப்­பட்­ட­தாக சிஃபாஸின் துணைத் தலை­வர் திரு ஹரி

சுப்பி­ர­ம­ணி­யம் கூறி­னார்.

"எங்­கள் மாண­வர்­க­ளுக்­கும் உறுப்­பி­னர்­க­ளுக்­கும் தேவை­யான வச­தி­க­ளை­யும் அழ­கிய சூழ­லை­யும் ஏற்­ப­டுத்­திக் கொடுப்­பது முக்­கி­யம். நினைவு மண்­ட­பத்­தைப் புதுப்­பிக்க சிஃபாஸ் அதன் வளங்­களை மட்­டுமே பயன்­ப­டுத்­தி­யது," என்­றார் அவர்.

புதுப்­பிக்­கப்­பட்ட நினைவு மண்­ட­பத்­துக்கு Sifas Annexe@MGM எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

அதன் அதி­கா­ர­பூர்­வத் திறப்பு விழாவை இவ்­வாண்டு நடத்த சிஃபாஸ் திட்­ட­மிட்­டுள்­ளது.

அதற்கு முன்­ன­தா­கவே கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தி­லி­ருந்து புதிய இடத்தை சிஃபாஸ் பயன்

படுத்தி வரு­கிறது.

சிஃபாஸ் உறுப்­பி­னர்­க­ளி­டையே நடத்­தப்­படும் கலை­நி­கழ்ச்­சி­கள், நடன அரங்­கேற்­றங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குப் புதுப்­பிக்­கப்­பட்ட நினைவு மண்­ட­பத்­தைப் பயன்­ப­டுத்தி வரு­வ­தாக அந்த அமைப்­பின் செய­லா­ளர் திரு பி. சோம­சே­க­ரன் தெரி­வித்­தார். சுவா­க­தம் எனும் கலை

நிகழ்ச்­சி­க­ளை­யும் அங்கு நடத்தி இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

பர­த­நாட்­டி­யம், இந்­துஸ்­தானி வாய்ப்­பாட்டு, ஹார்­மோ­னி­யம், பஜ­னை­கள், கஸல், கர்­நா­டக வாய்ப்­பாட்டு, விகாசா எனப்­படும் புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பாலர்

பரு­வத்­தி­ன­ருக்­கான திட்­டம் ஆகிய வகுப்­பு­க­ளைப் புதுப்­பிக்­கப்­பட்ட நினைவு மண்­ட­பத்­தில் சிஃபாஸ் தற்­போது நடத்தி வரு­கிறது.

மூத்த குடி­மக்­கள், வசதி குறைந்த இந்­தி­யர்­கள் ஆகி­யோ­ரின் மன­ந­லம், உணர்­வு­களை மேம்

படுத்த உத­வும் வகை­யில் அவர்

களுக்­கென சிறப்­பு நட­வ­டிக்­கை­களை நடத்த சிஃபாஸ் திட்ட

மிட்­டி­ருப்­ப­தாக திரு சோம­சே­க­ரன் தெரி­வித்­தார். நான்கு வய­துக்­கும் ஆறு வய­துக்­கும் இடைப்­பட்ட சிறா­ருக்­காக விகாசா திட்­டம் ஒவ்­வொரு சனிக்­கி­ழ­மை­யும் பிற்­பகல் 2 மணி­யி­லி­ருந்து 3.30 மணி வரை நடத்­தப்­ப­டு­கிறது.

அதில் கலந்­து­கொள்­ளும் சிறா­ருக்கு இசை, நட­னம், கதை சொல்­லு­தல், ஓவி­யக்­கலை ஆகி­யவை மூலம் இந்­தி­யக் கலை­கள் பற்றி கற்­றுக்­கொ­டுக்­கப்­ப­டு­கிறது.

இத்­திட்­டத்­துக்கு அமோக வர­வேற்பு கிடைத்­தி­ருப்­ப­தாக சிஃபாஸ் பெரு­மி­தத்­து­டன் பகிர்ந்­து­கொண்­டது.

"என் இரு சிறு பிள்­ளை­க­ளுக்கு அடிப்­படை நட­னம் கற்­பிக்­கப்­ப­டு­கிறது. அவர்­க­ளுக்கு அது மிக­வும் பிடித்­தி­ருக்­கிறது. சனிக்­கி­ழமை பிற்­ப­கல் நேரத்­தில் நமது பாரம்

பரி­யத்­தைக் கற்­றுக்­கொள்­வது மட்டு மல்­லாது, நேரத்தை மகிழ்ச்­சி­யா­கச் செல­வ­ழிக்­க­வும் இது மிகச் சிறந்த வழி," என்று திரு­வாட்டி ஸ்டெ­ஃபனி ராய் விக்­னேஷ் தெரி­வித்­தார்.

"நூல­க­மும் நினை­வுப்­பொ­ருள்­கள் காட்­சி­ய­க­மும் மகாத்மா

காந்­திக்கு அஞ்­சலி செலுத்­தும் வகை­யி­லும் அவரை கௌர­விக்­க­வும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. மகாத்மா காந்­தி­யின் பிறந்­த­நா­ளின்­போது சிறப்பு நிகழ்­வு­க­ளுக்கு சிஃபாஸ் ஏற்­பாடு செய்­யும். தகுதி பெறும் சிஃபாஸ் மாண­வர்­க­ளுக்கு மகாத்மா காந்­தி­யின் பெய­ரில்

உப­கா­ரச்­சம்­ப­ளம் வழங்­கப்­படும்.

"புதுப்­பிக்­கப்­பட்ட கட்­ட­ட­மும் அதில் உள்ள வச­தி­கள் அனைத்­தும் கலை­க­ளின் வளர்ச்­சிக்­காக அர்ப்­ப­ணிப்­ப­டு­கிறது. சிஃபாஸின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­ய­வும் அது பயன்­ப­டுத்­தப்­படும்.

அதே சம­யத்­தில் கட்­ட­டத்­தில் உள்ள வச­தி­களை பொது­மக்­கள் வாட­கைக்கு எடுத்­துப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்," என்று சிஃபாஸின் நிர்­வாக இயக்­கு­நர் திரு­வாட்டி மேனகா கோபா­லன் கூறி­னார். செவ்­வாய்க்­கி­ழமை முதல் ஞாயிற்­றுக்­கி­ழமை வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிஃபாஸ் நடத்­தும் வகுப்­பு­க­ளி­லும் நிகழ்ச்­சி­க­ளி­லும் பொது­மக்­கள் கலந்­து­கொள்­ள­லாம்.

செவ்­வாய் முதல் ஞாயிறு வரை காலை 10 மணி­யி­லி­ருந்து மாலை 6 மணி வரை நினைவு மண்­ட­பத்­தில் உள்ள நூல­கம் பொது­மக்­க­ளுக்­குத் திறந்திருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!