காலம் முழுவதும் உறவைக் கற்றுக்கொள்வதில் இனிமை

திரு­ம­ணத்­துக்­குப் பின்­னர் மனைவி திரு­மதி நித்­தியா சமைத்­த தக்­கா­ளிச்­சோற்றை உண்ட பின்­னரே அவ­ருக்­குச் சமைக்­கத் தெரி­யாது என்­பதை அறிந்­தார் திரு ராம்

பிர­சாத். இருப்­பி­னும், முகம் சுளிக்­கா­மல் மனை­விக்கு ஆத­ர­வாக அவர் இருந்­தார். நித்­தி­யா­வும் மாமி­யா­ரி­ட­மி­ருந்து சமை­யல் கற்­றுக்­கொண்­டார்.

15 ஆண்­டு­கால மண­வாழ்க்­கை­யில் இன்­றும் ஒரு­வ­ர் பற்றி ஒரு­வர் கற்­றுக்­கொண்டு வருவதா­கக் கூறி­னர் ராம்­பி­ர­சாத்-நித்­தியா தம்­ப­தி­யி­னர்.

"அவ­ருக்­குத் தொடக்­கத்­தில் சமைக்­கத் தெரி­யா­விட்­டா­லும் விரை­வில் அத­னைக் கற்­றுக்­கொண்­டார். அது­போல எங்­கும் மன­உ­று­தி­யு­டன் செயல்­படும் அவ­ரது சுபா­வம் என்­னைக் கவர்ந்­தது," என்­றார் தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் பணி­புரி யும் திரு ராம்­பி­ர­சாத் மணி, 40.

கல்­லூ­ரிப் பரு­வத்­தில் அவர்­

க­ளது காதல் மலர்ந்­தது. இரு­வ­ரும் சேர்ந்து எதிர்­கொண்ட முதல் சவால், பெற்­றோ­ரின் சம்­ம­தத்தை நாடு­வதே. திரு­மதி நித்­தி­யா­வின் குடும்­பத்­தார் முத­லில் எதிர்ப்­புத் தெரி­வித்­த­னர். அச்­ச­ம­யம் பணி நிமித்­த­மாக வேறு மாநி­லத்­தி­லி­ருந்த திரு ராம்­பி­ர­சாத்­தைத் தொடர்பு கொள்ள இய­ல­வில்லை. நவீன தக­வல் தொழில்­நுட்­பம் இல்­லாத காலத்­தி­லும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் எப்­போ­தும் மன­தில் வைத்­தி­ருந்­ததே அவர் களின் உறவை வலுப்­ப­டுத்­தி­ய­தாக திரு­மதி நித்­தியா நினை­வு­கூர்ந்­தார்.

"தின­மும் காலை­யில் அவர் இஞ்சி தேநீர் போடு­வார். எந்த மனச்­சங்­க­டம் எங்­க­ளுக்­குள் ஏற்­பட்­டி­ருந்­தா­லும் அடுத்த நாள் காலை எப்­போ­தும் அந்த இஞ்சி தேநீர் எனக்­கா­கக் காத்­தி­ருக்­கும். அது என்னை நெகிழ வைக்­கத் தவ­றி­ய­தில்லை," என்­றார் இல்­லத்­த­ர­சி திரு­மதி நித்­தியா சிவாஜி, 40.

சமூ­கத்­துக்­குப் பணி­யாற்­றும் இடத்­துக்கு தங்­க­ளது மகள் உய­ர­வேண்­டும் என்­பது இந்­தத் தம்­ப­தி­ய­ரின் ஆசை. நரை முடி வரி­னும் தாங்­கள் இரு­வ­ரும் கைகோத்து நடக்­கும் மனக்­காட்சி நன­வா­வ­தையே வாழ்­நாள் விருப்­ப­மா­கக் கொண்­டுள்­ளார் திரு­மதி நித்­தியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!