மகனால் உருவான ‘ஹே பப்லூ’ கடை

மகன் பிறந்­த­போது ஆண் குழந்தை களுக்­கான தமிழ்ப் பாரம்­ப­ரிய ஆடை­க­ளைத் தேடிய ச.சந்­த­னா­வுக்கு திருப்­தி­க­ர­மாக எது­வும் அமை­ய­வில்லை.

எங்கு தேடி­னா­லும் பெரும்­பா­லும் வளர்ந்த குழந்­தை­க­ளுக்­கான ஆடை­க­ளாக இருக்­கின்­றன.

ஓரிரு கடை­களில் மட்­டுமே சிறு குழந்­தை­க­ளுக்­கான ஆடை­கள் விற்­கப்­பட்­டன.

அதி­லும் பெண் குழந்­தை­க­ளுக்கே அதிக ஆடை­கள் காணப்­பட்­டன. துணி­யின் தர­மும் அவ­ருக்­குத் திருப்தி அளிக்­க­வில்லை.

இதுவே, ‌'ஹே பப்லூ' எனும் துணிக்­கடை உரு­வா­ன­தற்கு மூல கார­ண­மா­கும்.

ஆஸ்­தி­ரே­லியா வரை சென்று கல்­வித்­து­றை­யில் மேற்­ப­டிப்­புப் படித்து வந்த 33 வயது சந்­தனா, முழு நேர துணை வகுப்பு ஆசிரிய ராகப் பணி­யாற்­றிக்­கொண்­டி­ருந்­தார்.

2020ஆம் ஆண்­டில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக கர்ப்­ப­மாக இருந்த அவர் தன் வீட்­டில் தொடர்ந்து பாடம் நடத்­து­வ­தற்­கும் தயங்­கி­னார்.

வேறு­வ­ழி­யில்­லா­மல் தனது பணியை விட்­டு­விட்டு சில மாதங்­களில் குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்­தார். அதன் பிறகே ஆண் குழந்­தை­க­ளுக்­கான பாரம்­ப­ரிய ஆடை­க­ளுக்­கான தேடலை அவர் தொடங்­கி­னார்.

"நீ ஆன் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் நான் வர்த்­த­கம் தொடர்பான துறையில் கல்வி பயின்றேன். குழந்­தை­யின் 11வது நாள், 30வது நாள் போன்ற சடங்­கு­க­ளுக்­காக எனக்­குப் பிடித்­தாற்­போல் என் மக­னுக்கு இந்­திய பாரம்­ப­ரிய உடை­கள் அமை­யா­த­தால் நாமே சிறு­வர்­க­ளுக்­கான பாரம்­ப­ரிய உடை­கள் விற்­கும் நிறு­வ­னம் ஒன்­றைத் தொடங்­கி­னால் என்ன என்ற எண்­ணம் எனக்­குள் தோன்­றி­யது.

"அவ்­வாறு தொடங்­கி­ய­து­தான் 'ஹே பப்லூ'. என் மகன் மூலம் கிடைத்த உத்­வே­கத்­தால் முழு முயற்­சி­யு­டன் வியா­பா­ரத்­தில் இறங்­கி­னேன்," என்று சந்­தனா புன் முறு­வ­லு­டன் கூறி­னார்.

கைக்­கு­ழந்­தையை வைத்­துக்­கொண்டு வியா­பா­ரம் தொடங்­கு­வது சந்­த­னா­வுக்­குச் சவால்­மிக்­க­தா­கவே அமைந்­தது.

தொடக்­கத்­தில் இந்­தி­யா­வில் இருந்து சில ஆடை­களை இறக்கு மதி செய்­த­போது தன் நண்­பர்­களும் குடும்­பத்­தி­ன­ரும் ஆத­ரவு அளித்­த­னர்.

ஆனால், பெரிய அள­வில் வியா­பா­ரம் செய்­வ­தற்கு இந்­தி­யா­வில் தெரிந்­த­வர்­கள் இல்­லா­த­தால் சில உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­டம் ஏமாற்­ற­மும் அடைந்­த­தாக சந்­தனா தெரி­வித்­தார்.

இருந்­தா­லும், விடா­மு­யற்­சி­யு­டன் பகல் முழு­வ­தும் மக­னைப் பார்த்­துக்­கொண்டு இரவு முழு­வ­தும் இணை­யத்­தின் மூலம் நல்ல உற்­பத்­தி­யா­ளர்­க­ளைக் கண்­ட­றிந்து தனது வியா­பா­ரத்­துக்கு அடித் தளத்தை இவர் அமைத்­துக்­கொண்­டார்.

"என் கண­வர் எனக்­குப் பக்க பல­மாக இருந்­தார். கொள்­ளை­நோய் பர­வல் காலத்­தில் வீட்­டி­லி­ருந்து பணி­யாற்­றிய வேளை­களில் குழந்­தை­யைப் பார்த்­துக்­கொள்ள உத­வி­ய­தோடு வியா­பா­ரத்­திற்­காக இணை­யத்­த­ளம் உரு­வாக்­கு­தல் தொழில்­நுட்­பச் சவால்­க­ளைச் சமா­ளித்­தல் போன்­ற­வற்­றில் உதவி செய்­தார்.

"அத­னால் குழந்­தைக்­குச் செய்ய வேண்­டிய கட­மை­க­ளைச் செய்­ய­வும் வியா­பா­ரத்தை பெருக்­க­வும் முடிந்­தது. வியா­பா­ரம் சூடு பிடித்­த­போது என் அம்­மா­வும் மக­னைப் பார்த்­துக்­கொள்ள உறு துணை­யாக இருந்­தார்," என்­றார் சந்­தனா.

ஏற்­கெ­னவே வடி­வ­மைக்­கப் பட்ட ஆடை­களை விற்­பனை செய்­வ­தோடு வாடிக்­கை­யா­ளர் களின் விருப்­பத்­திற்­கேற்ப ஆடை­களை வடி­வ­மைத்து விற்­பனை செய்­த­தால் வியா­பா­ரம் அதி­க­ரித்­த­தாக அவர் கூறி­னார்.

"தொடக்­கத்­தில் அடிக்­கடி வாடிக்­கை­யா­ளர்­க­ளின் குறுந்­த­க­வல்­க­ளுக்கு விடை­ய­ளிப்­ப­தி­லேயே பெரு­ம­ளவு நேரத்­தைச் செல­வ­ழித்­தேன்.

இத­னால், என் மக­னு­டன் செல­வ­ழிக்­கும் நேரம் குறைந்­தது. அதைக் கொஞ்­சம் கொஞ்­ச­மாக மாற்­றத் தொடங்­கி­னேன்.

"இப்­போ­தெல்­லாம், வார நாள்­களில் வியா­பா­ரத்­தைப் பார்த்­துக்­கொண்டு வார இறுதி நாள்­களில் பிள்­ளை­க­ளு­டன் நேரத்தை முழு­மை­யாக செல­வ­ழிக்­கி­றேன்," என்று கூறிய சந்­தனா அண்­மை­யில் தனக்கு 2வது குழந்தை பிறந்த விவ­ரத்­தை­யும் பகிர்ந்­து­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!