கருவுற்ற காலத்தில் திறன்களை மேம்படுத்தி, தொழில் முனைவரானார்

'கென்­வின் கணக்­கி­யல் மற்­றும் தொழில்­நுட்ப சேவை­கள்' எனும் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னத்தை 2015ஆம் ஆண்­டில் தொடங்­கிய கென்­வின் சிவ­காமி, திரு­ம­ணம், குழந்­தைப்­பேறு என குடும்­பத்­தோடு தனது தொழி­லி­லும் முன்­னே­றி­னார்.

"குழந்தை பெற்­ற­தால் எனது வியா­பா­ரம் பாதிப்­ப­டை­ய­வில்லை. குறிப்­பா­கச் சொல்ல வேண்­டு­மா­னால், என் குழந்­தை­க­ளுக்­கா­கவே நான் இன்­னும் சிறந்து விளங்க வேண்­டும் என்ற ஆர்­வம் மேலோங்­கி­யது. என் குழந்­தை­க­ளுக்கு நான் ஒரு முன்­னு­தா­ர­ண­மா­கத் திக­ழ­வேண்­டும் என்று விரும்­பி­னேன்.

"அத­னால் கரு­வுற்­றி­ருக்­கும் காலத்­தி­லேயே புதிய திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்­வதை உறு­திப்­ப­டுத்தி னேன். என் மூன்­றா­வது மகன் கரு­வுற்­றி­ருந்­த­போது 'லுவிஸ் ஃப்ளோரல்ஸ்' எனும் நவீன மெழு­கு­வர்த்­தி­களை விற்­கும் நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­னேன்," என்று 34 வயது கென்­வின் தெரி­வித்­தார்.

பிள்­ளை­க­ளி­ட­மும் தொழி­லி­லும் ஒரே நேரத்­தில் கவ­னம் செலுத்த தனது குடும்­பத்­தி­னர் பல வகை­களில் உத­வி­ய­தா­க­வும் கென்­வின் கூறி­னார். 'லுவிஸ் ஃப்ளோரல்ஸ்' நிறு­வ­னத்தை குடும்ப உறுப்­பி­னர்­கள் நடத்­து­கின்­ற­னர் என்­றும் பெற்­றோ­ரும் சகோ­த­ரர்­களும் புத்­தாக்­கச் சிந்­த­னை­யு­டன் தொழி­லுக்கு மெரு­கூட்­டு­கின்­ற­னர் என்­றும் இவர் கூறு­கி­றார். அதோடு தனது கண­வர் தொழில்­நுட்­பம் சார்ந்த சவால் களைச் சமா­ளிப்­ப­தற்கு உத­வி­னார் என்­றார் இவர். அதா­வது குடும்­பத்­தி­னர் அனை­வ­ரும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தாங்­கும் தூண்­கள் என்று கென்­வின் வர்­ணிக்­கி­றார்.

"தொழி­லைக் கவ­னித்­துக்­கொண்டே என் பிள்­ளை­க­ளு­டன் என்­னால் போது­மான நேரத்­தைச் செல­விட முடி­கிறது. தொழில்நுட்பத் ­தின் உத­வி­யு­டன் பல பணிகளை எளி­மை­யாக்­கு­வதே எனது 'கென்­வின் கணக்­கி­யல் மற்­றும் தொழில்­நுட்ப சேவை­கள்' நிறுவனத்­தின் சேவையாகும். இத­னால் மற்­ற­வர்­களும் அதிக நேரத்தை குடும்­பத்­து­டன் செல­வ­ழிக்க முடி­யும்," என்று கென்­வின் சொன்­னார்.

பெண்­ணு­ரி­மையை நம்­பும் கென்­வின் பெண்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உத­விக்­க­ரம் நீட்டி ஆத­ர­வ­ளிக்க வேண்­டும் என்று கூறு­கி­றார்.

தாயா­கிய பின்­னர் ஏற்­படும் சவால்­க­ளைக் கண்டு துவண்­டு­வி­டா­மல் வியா­பா­ரங்­க­ளை­யும் விட்­டு­வி­டா­மல் மற்­ற­வர்­க­ளின் உத­வியை நாடி­னால் எல்­லாமே சாத்­திய மாகும் என்­கி­றார்.

வீட்­டைப் பார்த்­துக்­கொள்­வ­தும் பிள்­ளை­களை வளர்ப்­ப­தும் ஒரு தாயின் பொறுப்பு மட்­டு­மல்ல. குடும்­பத்­தி­லுள்ள அனை­வ­ரும் இதற்­குப் பங்­காற்ற வேண்­டும் என்று கென்­வின் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!