ஸ்டாலின்: நெஞ்சுக்கு நெருக்கமான சிங்கப்பூர்

வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்ற தமது இலக்கை எட்டும் வகையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த வாரம் சிங்கப்பூர் வந்திருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் முரசு நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்

‘நீண்ட தூரம் ஓடி­னால்­தான் அதிக உய­ரம் தாண்ட முடி­யும்’ என்று தமி­ழக முன்­னாள் முதல்­வரும் காலஞ்­சென்ற தம் தந்­தை­யா­ரு­மான கலை­ஞர் கரு­ணா­நிதி சொல்­வார். அந்த வகை­யில், வரும் 2030ஆம் ஆண்­டிற்­குள் தமிழ்­நாட்­டின் பொரு­ளி­யலை ஒரு டிரில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக (S$1.35 டிரில்­லி­யன்) உயர்த்த வேண்­டும் என்று இலக்கு வகுத்துச் செயல்­பட்டு வரு­வதாகக் கூறுகிறார் தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

அந்த இலக்கை எட்டிச் சாதிப்பது என்பது அவ்­வ­ளவு எளி­தன்று எனத் தெரிந்தாலும் அது தாங்­க­ளா­கவே வகுத்­துக்­கொண்ட இலக்கு என்­று திரு ஸ்டா­லின் குறிப்­பிட்­டார்.

அந்த இலக்கை அடை­யத் திட்­ட­மிட்­டுச் செயல்­பட்டு வரு­வதா­கத் தெரி­வித்த அவர், அதற்­கான வரை­வுத்­திட்­டத்­தைத் தயா­ரிக்க ‘போஸ்­டன் கன்­சல்ட்­டிங் குரூப்’ எனும் ஆலோ­சனை நிறு­வ­னத்­தைப் பணி­யி­ல­மர்த்தி இருப்­ப­தா­கக் குறிப்பிட்டார்.

ஒரு டிரில்­லி­யன் டாலர் பொரு­ளி­யல் என்ற இலக்கை எட்ட தமிழ்­நாட்­டிற்கு மேலும் 2,300,000 கோடி ரூபாய் முத­லீடு தேவை. அதன்­மூ­லம் 4,600,000 பேருக்கு வேலை­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தர­வேண்­டும்.

இதற்­கான எல்லா முயற்­சி­களை­யும் தாங்­கள் எடுத்து வரு­வ­தால் தங்­க­ளால் இலக்கை அடைய முடி­யும் என்ற நம்­பிக்கை இருக்­கிறது என்று உறு­தி­யா­கச் சொன்­னார் திரு ஸ்டா­லின்.

 

நம்பிக்கை தரும் சிங்கப்பூர்

 

தமிழ் ஆட்­சி­மொ­ழி­யாக இருக்­கும் நாடு, தமி­ழர்­கள் அதி­கம் வாழும் நாடு என்­ப­தால் சிங்­கப்­பூர்­மீது அள­வில்­லாப் பற்று கொண்­டுள்­ள­தா­க­வும் அது தம் நெஞ்­சுக்கு நெருக்­க­மான நாடா­கத் திகழ்­வதா­க­வும் கூறினார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

தமிழ்­நாட்­டில் கிட்­டத்­தட்ட 30 சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன. அசெண்­டாஸ் நிறு­வ­னம், தர­ம­ணி­யில் ஒரு மிகப் பெரிய தொழில்­நுட்­பப் பூங்­காவை நிறு­வி­யுள்­ளது.

தெமா­செக், டிபி­எஸ் வங்கி, மேப்­பிள்ட்ரீ, சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் போன்ற பல நிறு­வ­னங்­கள் தமிழ்­நாட்­டில் தொழில் செய்து வரு­கின்­றன.

“கடந்த இரண்டு ஆண்­டு­களில் மட்­டும் ரூ.4,800 கோடி (S$785 மில்­லி­யன்) முத­லீட்­டில் நான்கு சிங்­கப்­பூர் நிறு­வனங்­கள் தமிழ்­நாட்டு அர­சு­டன் ஒப்­பந்­தம் செய்­துள்­ளன. இதன்­மூ­லம் 6,200 பேருக்கு வேலை­வாய்ப்பு உரு­வாக்­கப்­பட்டுள்­ளது. இன்­னும் பல திட்­டங்­க­ளுக்கு நிறு­வ­னங்­க­ளு­டன் பேச்­சு­வார்த்­தை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

“மின்­ன­ணு­வி­யல், வாகன உதிரி பாகங்கள், தடை­யற்ற வணிக, பொரு­ளி­யல் மண்­ட­லங்­கள், தக­வல் தொழில்­நுட்­பம், உண­வுப் பதப்­ப­டுத்­து­தல், மருந்து, ஆடை போன்ற பல்­வேறு துறை­களில் அந்­நி­று­வ­னங்­கள் முத­லீடு செய்ய முன்­வந்­துள்­ளன. மின்­வா­க­னங்­க­ளுக்­கான மின்­னூட்ட நிலை­யங்­கள் போன்ற புதிய துறை­க­ளி­லும் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

“தமிழ்­நாட்­டின் சீரான வளர்ச்­சியை உறு­தி­செய்­யும் வகையில், பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லும் இந்தத் திட்­டங்­கள் பர­வ­லாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

“எனவே, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்குச் சிங்­கப்­பூர் பெரும்­பங்­காற்றி வரு­கிறது. இன்­னும் கூடு­த­லா­கப் பங்­காற்ற வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­வ­தற்­கா­கவே நான் இங்கு வந்­துள்­ளேன்.

“புதிய ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தாகி உள்­ளன. 2024 ஜன­வரி­யில் உலக முத­லீட்­டா­ளர் மாநாடு சென்­னை­யில் நடை­பெறவுள்­ளது. அதில் பங்­கேற்கும்படி சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்கு அழைப்பு விடுக்­க­வும் வந்­துள்­ளேன்,” என்று திரு ஸ்டா­லின் கூறி­னார்.

 

உல­கத் தமி­ழ­ருக்கு ஆத­ரவு

 

காலஞ்­சென்ற முதல்­வர் கலை­ஞர் கரு­ணா­நிதி தமிழ்­நாட்டு மக்­களுக்கு மட்­டு­மல்­லாது உல­கெங்­கும் பர­வி­யுள்ள தமிழ்ச் சமூ­கத்­தின் தலை­வ­ரா­க­வும் விளங்­கி­ய­தா­கக் குறிப்­பிட்ட திரு ஸ்டா­லின், அதே வழி­யைத் தாமும் பின்­பற்று­வ­தா­கக் குறிப்பிட்டார்.

“உல­கில் எங்கு தமி­ழர்­களுக்கு எந்த பாதிப்பு ஏற்­பட்­டா­லும் உட­ன­டி­யாக அவர்­களுக்கு உத­விக்­க­ரம் நீட்­டு­வோம்.

“அண்­மை­யில் இலங்­கை­யில் பொரு­ளி­யல் நெருக்­கடி ஏற்­பட்­ட­போது தமிழ்­நாடு கைகொ­டுத்­ததை யாரும் மறந்­தி­ருக்க மாட்­டார்­கள். அந்த நாட்­டுக்கு அரிசி, பால் மாவு, மருந்­துப் பொருள்­கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்­தோம்.

“மேலும், தமிழ்நாட்டில் முகாம்­களில் வாழும் இலங்­கைத் தமிழ் மக்­க­ளுக்­குச் சிறப்­பான வாழ்­வியல் சூழலை ஏற்படுத்தித் தரும் நோக்குடன் ஏறத்­தாழ 500 கோடி ரூபாய் செல­வில் 7,400 வீடு­கள் கட்­டப்­பட்டு வரு­கின்­றன. மேலும், அவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களைப் பெருக்­கத் திறன்­ப­யிற்­சி­களும் வழங்­கப்­ப­டு­கின்றன.

“உக்­ரேன் நாட்­டில் போர் நடந்­த­தன் கார­ண­மாக, தமிழ்­நாட்­டில் இருந்து அங்கு மருத்­து­வம் படிக்­கச் சென்ற மாண­வர்­கள் பாதிக்­கப்­பட்­டார்­கள். உட­ன­டி­யாக பத்­தி­ர­மாக அவர்­க­ளைத் தமிழ்­நாட்­டிற்கு அழைத்து வந்து அவர்­கள் வீடு­வரை கொண்டு சேர்த்­தோம்,” என்று திரு ஸ்டா­லின் நினை­வு­கூர்ந்­தார்.

 

வெளிநாடுவாழ் தமி­ழர் நல வாரி­யம்-இணைப்புப் பாலம்

 

புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்­களின் பல்­வேறு தேவை­க­ளைப் பூர்த்­தி­செய்­யும் நோக்­கில் வெளி­நா­டு­வாழ் தமி­ழர் நலச்­சட்­டம் 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் நாள் அப்­போ­தைய திமுக அர­சால் இயற்­றப்­பட்­டது.

அவ்வகையில், தேர்­த­லில் வென்று திமுக மீண்­டும் அரி­யணை ஏறி­ய­தும் `வெளி­நா­டு­வாழ் தமி­ழர் நல வாரி­யம்’ அமைக்­கப்­பட்­டது.

அவ்­வா­ரி­யத்­தின்­மூ­லம் ஏரா­ள­மான பணி­கள் நடை­பெற்று வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட முதல்­வர் ஸ்டா­லின், “உல­கம் முழு­வ­தும் பரவி வாழ்ந்து வரும் தமி­ழர்­களுக்கு தாய்வீடு என்­பது தமிழ்­நா­டு­தான்,” என்­றார்.

“உல­கம் முழுக்க வாழும் தமிழர்­களை ஒரு குடை­யின்­கீழ் கொண்டு வரும் அமைப்­பாக அவ்வாரி­யம் அமைய வேண்­டும் என்று திட்­ட­மிட்­டுச் செயல்­ப­டுத்து­வோம். தாய்த்­த­மிழ்­நாட்­டை­யும் அய­ல­கத் தமி­ழர்­க­ளை­யும் இணைக்­கும் ஒரு பால­மாக, அவ்­வா­ரி­யம் செயல்­படும். தமிழ்­மொழி, தமி­ழிசை, நாட்­டி­யம், பண்­பாடு ஆகி­ய­வற்றை அடுத்த தலை­முறைத் தமி­ழர்­க­ளுக்­குக் கொண்டு செல்­லும் பணி­யை­யும் அந்த வாரி­யம் செய்­யும்,” என்று திரு ஸ்டா­லின் தெரி­வித்­தார்.

 

சவா­லான கால­கட்­டம்

 

பத­வி­யேற்ற இரண்டு ஆண்­டு­களில் திமுக அரசு என்­னென்ன சவால்­க­ளைக் கடந்து வந்­துள்­ளது, இனி எத்­த­கைய சவால்­களை எதிர்­நோக்­கு­கிறது என்­பது பற்­றி­யும் முதல்­வர் ஸ்டாலின் விரி­வா­கக் கூறி­னார்.

“உண்­மை­யில் இது சவா­லான காலம்­தான். பூக்­கள் நிறைந்த அழ­கிய சாலை­யில் நான் பய­ணம் செய்­ய­வில்லை. முற்­றி­லும் பாழ்­படுத்­தப்­பட்ட சாலை­யில் - குண்­டும் குழி­யும் - மேடும் பள்­ள­மும் - கல்­லும் முள்­ளும் ஆணி­யும் கொண்ட சாலை­யில் பய­ணம் செய்­வ­தைப் போலத்­தான் முதல் சில மாதங்­கள் இருந்­தன.

“தமி­ழக அர­சுக்கு 500,000 கோடி ரூபாய் கடன் என்­ற­தொரு கடி­ன­மான சூழ­லில்­தான் முதல்­வராக நான் பத­வி­யேற்­றேன். அந்த நேரத்­தில் கொரோனா இரண்­டா­வது அலை பெரும் அச்­சு­றுத்­தலை உரு­வாக்­கி­யி­ருக்­கி­ இருந்­தது. அப்பேரி­ட­ரி­லி­ருந்து மக்­க­ளைக் காப்­பதே முதல் கட­மை­யாக இருந்­தது.

“அத­னைச் சரி­யாக நிறை­வேற்றி, அதன் பிறகு தமிழ்­நாட்டை முன்­னேற்­றப் பாதைக்கு அழைத்­துச் செல்­லும் சவா­லான பணியை மேற்­கொள்­ளத் தொடங்­கி­னோம். நிதி நிலைமை ஓர­ளவு சரிசெய்­யப்­பட்­டுள்­ளது. வரு­வாய்ப் பற்­றாக்­கு­றை­யைக் குறைத்­தி­ருக்­கி­றோம். உற்­பத்தி பெருகி உள்­ளது. புதிய நிறு­வ­னங்­கள் வந்­துள்­ளன. வேலை வாய்ப்­பு­கள் கிடைத்­துள்­ளன. இருப்­பி­னும், நாங்­கள் போக வேண்­டிய தூரம் இன்­ன­மும் இருக்­கிறது.

“என்­னைப் பொறுத்­த­வரை, இவற்­றையெல்லாம் சவால்­க­ளாக நினைக்­க­வில்லை. பொது­வாழ்க்­கை­யில், அரசு நிர்­வா­கத்­தில் இவற்றை எதிர்­கொண்­டு­தான் ஆக வேண்­டும்.

“எதிர்­ம­றை­யா­கப் பேசி கார­ணங்­க­ளைத் தேடு­வதைவிட, நேர்­ம­றை­யா­கச் சிந்­தித்து சாத­னை­க­ளைச் செய்­வ­தையே நான் விரும்­பு­கி­றேன். அப்­ப­டித்­தான் செயல்­பட்டு வரு­கி­றேன்,” என்­றார் திரு ஸ்டாலின்.

 

தமிழர் நலனே முக்கியம்

 

‘தமிழ்­நாட்­டில் இப்­போது வடஇந்­தியர்கள் பெருகி­விட்டனர். சிறு­ந­க­ரங்­க­ளிலும்கூட அவர்­களை அதி­கம் காண முடி­கிறது. அவர்­கள் இல்­லை­யேல் தொழிற்­சா­லை­கள் முடங்­கிப் போகும்’ என்ற நிலை இருப்­ப­தாக தமி­ழக வட்­டா­ரங்­கள் கூறு­கின்­றன.

இத­னை­ய­டுத்து, வட­இந்­தி­யர்­க­ளின் வருகை அதி­க­ரிப்­பால் தமிழ்­நாட்­டிற்கு நன்­மையா தீமையா என்று தமிழ் முரசு கேட்­டது.

அதற்கு, “தமிழ்­நாடு வளர்ந்த, வள­மிக்க மாநி­ல­மாக இருப்­ப­தால் வட­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் வேலை­க்கா­கத் தமி­ழ­கத்­திற்கு வரு­கி­றார்­கள், அவ்­வ­ள­வு­தான்! இது தமிழ்­நாட்­டுக்கு நன்­மையே தவிர தீமை­யன்று. அதற்­காக மற்­ற­வர்­களது வேலைவாய்ப்பை அவர்­கள் பறித்­துக்­கொள்­கி­றார்­கள் என்று சொல்ல முடி­யாது.

“எங்­க­ளைப் பொறுத்­த­வரை, தமி­ழர் நல­னும் தமிழ்­நாட்­டின் மேன்­மை­யுமே முக்­கி­யம். அதில் நாங்­கள் எப்­போ­தும் உறு­தி­யாக இருப்­போம். தமிழ் கட்­டா­யம், வேலை­வாய்ப்­பில் தமிழர்­க­ளுக்கு முன்­னு­ரிமை போன்ற திட்­டங்­களைச் செயல்­ப­டுத்தி வரு­கிறோம்,” என்று திரு ஸ்டா­லின் பதி­ல­ளித்­தார்.

 

சொத்­து­ வரி உயர்வு

 

தமிழ்­நாட்­டில் சொத்து வரி உயர்த்­தப்­பட்­டுள்­ளது குறித்துச் சிங்­கப்­பூரில் வாழும் தமிழ்­நாட்­டுத் தமிழர்­களில் சிலர் கவலை தெரி­வித்­து இருப்பது குறித்­தும் முதல்­வ­ரி­டம் கேட்­கப்­பட்­டது.

அதற்கு, இந்­திய அர­சின் 15வது நிதி ஆணை­யம் அறி­வித்த வழி­காட்­டு­த­லின்­படி தமிழ்­நாட்­டில் சொத்து வரி விகிதம் மாற்றி அமைக்­கப்­பட்­டுள்­ள­தாகத் திரு ஸ்டா­லின் குறிப்­பிட்­டார்.

“மாநில அர­சின் உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்­சிக்கு ஏற்­ற­வாறு ஆண்­டு­தோ­றும் சொத்­து­வரி விகி­தத்தை மாற்றி அமைத்­திட வேண்­டும் என்று ஒன்­றிய அர­சால் அமைக்­கப்­பட்ட 15வது நிதி ஆணை­யம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது,” என்று அவர் சொன்­னார்.

தமிழ்­நாட்­டில் சொத்து வரி­யா­னது, இந்­தி­யா­வின் மற்ற பெரு­ந­க­ரங்­க­ளோடு ஒப்­பி­டும்­போது, மிக­வும் குறை­வா­கவே வசூ­லிக்­கப்­படு­கிறது என்­றும் திரு ஸ்டாலின் குறிப்­பிட்­டார். மும்பை, பெங்­க­ளூரு, கோல்­கத்தா, புனே ஆகிய நக­ரங்­களைக் காட்­டி­லும் சென்­னை­யில் சொத்­து வரி குறை­வு­என்­பதை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்ட சொத்­து­வரி உயர்வு என்­பது 83 விழுக்­காடு வீடு­க­ளுக்கு மிகக் குறை­வான அள­வில்­தான் உயர்த்­தப்­பட்­டுள்­ளது என்­று புள்­ளி­வி­வ­ரங்­கள் சொல்­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

கொள்கை உரமும் தொண்டர் படையும்

 

அதி­முக பிளவுபட்டுக் கிடப்பது திமு­க­விற்­குச் சாத­கமா எனக் கேட்­ட­தற்கு, “அதி­முக இப்­போது நான்கு அணி­க­ளா­கப் பிரிந்து கிடக்­கிறது. அது­பற்றி எங்­க­ளுக்­குக் கவ­லை­யில்லை. அவர்­க­ளது பல­வீ­னத்தை நாங்­கள் அர­சி­யல் செய்­வ­தில்லை. எங்­க­ளது கொள்­கை­களையும் தொண்­டர் பலத்­தை­யும் நம்­பியே எப்­போ­தும் இருப்­போம்,” என்று அவர் தெரி­வித்­தார்.

அத்துடன், கலை­ஞர் காலத்­தில் நிகழ்ந்­த­தைப்­போல, பாஜ­க­வு­டன் திமுக கூட்டு சேர வாய்ப்­பில்லை என்ற அவர், வாஜ்­பாய் தலை­மை­யி­லான அன்­றைய பாஜ­க­விற்­கும் இன்­றைய பாஜ­க­விற்­கும் நிறைய வேறு­பாடு உள்­ளது என்­றும் குறிப்பிட்டார்.

மேலும், அமைச்­ச­ராக தம் மகன் உத­ய­நி­தி­யின் செயல்­பா­டு­பெரு­மைப்­ப­டத்­தக்க வகை­யில் இருப்­ப­தாகத் திரு ஸ்டாலின் நெகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார்.

 

தமிழ் முரசு யோச­னைக்கு முதல்வர் வர­வேற்பு

 

உல­கெங்­கி­லும் உள்ள தமிழ்ப் படைப்­பா­ளி­களை அங்­கீ­க­ரித்து சிறப்­பிக்­கும் வகை­யில் தமிழ்­நாடு அரசு விரு­து­கள் வழங்க வாய்ப்­பு இருக்கிறதா என்று கேட்­ட­தற்கு, “நல்ல யோசனை. உறு­தி­யா­கச் செய்­ய­லாம்,” என்று முதல்­வர் ஸ்டா­லின் கூறியிருக்கிறார்.

அத்­து­டன், முன்­னைய திமுக ஆட்­சி­யில் உல­கத் தமிழ்ச் செம்­மொழி மாநாடு நடத்­தி­ய­து­போல, இம்­மு­றை­யும் அதற்­கான திட்­டம் உண்டு என்­றும் அதற்­கான சூழல் அமை­யும்­போது உரிய அறி­விப்பு வெளி­யா­கும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!