முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பந்துவீச்சு

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பந்துவீச்சு

1 mins read
f879b859-d9e1-4b8f-a761-839139ddaff9
படம்: பிசிசிஐ/ டுவிட்டர் -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

பகலிரவு ஆட்டமாக இது மும்பையில் நடக்கிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இன்றைய ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா விளையாடவில்லை.

அவருக்கு பதில் ஹார்திக் பாண்டியா அணியை வழிநடத்துகிறார்.

‌ஷுப்மன் கில், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, கே எல் ராகுல் இன்றைய போட்டியில் விளையாடுகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துகிறார். காயத்தில் இருந்து டேவிட் வார்னர் முழுமையாக குணமடையாததால் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை.

கிளன் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் மார்‌ஷ் ஆகியோர் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகின்றனர்.

இந்தியா, ஆஸ்திரேலியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது

குறிப்புச் சொற்கள்