தொடர் தோல்வியில் இருந்து மீண்ட டோனியின் அணி

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் எட்டு போட்டிகளில் பங்கேற்று ஆறில் தோற்றிருந்த டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணி ஒருவழியாகத் தோல்விப் பாதையில் இருந்து மீண்டுள்ளது. கடந்த பருவங்களில் மோசமாகச் செயல்பட்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி இம்முறை ராகுல் டிராவிட் பயிற்சியின்கீழ் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த நிலையில், வெற்றியைத் தொடரும் நோக்குடன் அந்த அணி புனே அணியை நேற்று முன்தினம் இரவு சந்தித்தது. ஜாகீர் கான் இல்லாததால் டூமினி டெல்லி அணியை வழிநடத்தினார்.

கருண் நாயர் 32, டூமினி 34, சேம் பில்லிங்ஸ் 20 ஓட்டங்களை எடுக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களைச் சேர்த்தது. அடுத்து பந்தடித்த புனே அணிக்கு ரகானே (63*)=உஸ்மான் கவாஜா (30) இணை நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தர, அந்த அணி 19.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றியை ஈட்டியது. இப்போதைக்கு டெல்லி அணி பத்துப் புள்ளிகளுடன் பட்டியலின் மூன்றாமிடத்திலும் புனே அணி ஆறு புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்திலும் இருக்கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லிவர்பூலின் இரண்டாவது கோலை அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ரொபேர்ட்டோ ஃபர்மினோ (இடமிருந்து மூன்றாவது). படம்: ராய்ட்டர்ஸ்

19 Aug 2019

இங்கிலிஷ் பிரிமியர் லீக்: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த லிவர்பூல், ஆர்சனல்

சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் ஆக வெற்றிகரமான பயிற்றுவிப்பாளராக கருதப்படும் அவ்ரமோவிச்.

19 Aug 2019

ஹோம் யுனைடெட் குழுவிலிருந்து பதவி விலகிய அவ்ரமோவிச்