டி வில்லியர்சின் சாதனை

கோல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட்டில் கோல்கத்தாவும் பெங்களூரு அணியும் மோதிய ஆட்டத்தில் கோஹ்லி - டி வில்லியர்ஸ் ஓட்ட வேட்டையைக் கோல்கத்தா பந்து வீச்சாளர்களால் எந்த வகையிலும் கட்டுப்படுத்த இயலவில்லை. பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப் படுத்தியது. கேப்டன் கோஹ்லி 75 ஓட்டங்களுடனும் (51 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), டிவில்லியர்ஸ் 59 ஓட்டங்களுடனும் (31 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் கோல்கத்தா வீரர் மனிஷ் பாண்டே கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பைப் பெங்களூரு வீரர் டி வில்லியர்ஸ் பிடித்தார். நடப்பு தொடரில் டி வில்லியர்சின் 14வது கேட்ச் இதுவாகும். இதன் மூலம் ஒரு பருவத்தில் அதிக கேட்ச் செய்த ஃபீல்டர் களான டேவிட் மில்லர் (பஞ்சாப் அணிக்காக 2014 ஆம் ஆண்டில் 14 கேட்ச்), டுவைன் பிராவோ (சென்னை அணிக்காக 2013 ஆம் ஆண்டில் 14 கேட்ச்) ஆகியோரின் சாதனையை டி வில்லியர்ஸ் சமன் செய்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

20 Aug 2019

செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்