சிங்கப்பூர் காற்பந்துக் குழு பயிற்றுவிப்பாளராக சுந்தரம்

சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ‘தி டேஸ்லர்’ என அழைக்கப்படும் முன்னாள் தேசிய ஆட்டக்காரர் வி.சுந்தரமூர்த்தி, 50, நியமிக்கப்பட்டுள்ளார். ஓராண்டு காலத்திற்கு இவர் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். ஜாலான் புசார் விளையாட்ட ரங்கில் நேற்று செய்தியாளர்களி டம் பேசிய சுந்தரம், “தேசிய குழுவிற்குப் பயிற்சியளிக்கக் கிடைக்கும் வாய்ப்பை பெரும்பாலான உள்ளூர் பயிற்றுவிப்பாளர்கள் மறுக்கமாட்டார்கள். நவம்பர், டிசம்பரில் நடக்கவுள்ள சுசுகி கிண்ணத்தில் நமது குழு சிறப் பாகச் செயல்படும் என்று நம்பு கிறேன். அரையிறுதிக்குள் நுழைவதே எனது முதல் இலக்கு. தேசிய குழுவிற்குப் புத்துயிரூட் டும் முயற்சியின் ஒரு பகுதியாக இளம் திறனாளர்களை அடை யாளம் கண்டு தேர்வு செய்வதைத் தொடர்வேன்,” என்று கூறினார்.

மியன்மாரில் அடுத்த வாரம் நடக்கும் நான்கு நாடுகளுக்கு இடையிலான தொடரே தலைமைப் பயிற்றுவிப்பாளராக இவரது முதல் பணி. “தேசிய குழு வீரர்களை நன்றாக அறிந்தவர் சுந்தரம். தலைமைப் பயிற்றுவிப்பாளர் பத விக்கு அவரே சிறந்த தெரிவு. அவருக்கு சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் (எஃப்ஏஎஸ்) முழுமையான ஆதரவை வழங்கும்,” என்று எஃப்ஏஎஸ் துணைத் தலைவர் லிம் கியா டோங் சொன்னார்.2016-05-28 06:00:00 +0800

 

சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வி.சுந்தரமூர்த்தி (இடது). படம்: தி நியூ பேப்பர்

Loading...
Load next