சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க 21 பேருக்கு அனுமதி

ரியோ டி ஜெனிரோவில் இவ்வாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் போட்டியிட 21 விளையாட்டு வீரர்களுக்கு சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் கூடுதல் வீரர்கள், வீராங்கனையர் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று நம்பப்படுகிறது. குறைந்தது 24 பேர் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீராங்கனை நியோ ஜியே ‌ஷி, நீச்சல் வீரர்கள் ஜோசஃப் ஸ்கூலிங், குவா செங் வென் முதலியோருக்கு சிங்கப்பூருக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பாதி பேர் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் களமிறங்குவதாக மன்றத்தின் தலைமைச் செயலாளர் கிறிஸ் சான் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்