கிண்ணம் வெல்ல வியூகம் வகுக்கும் சுந்தரமூர்த்தி

யங்கூன்: 'ஏஒய்ஏ பேங்க்' கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டியில் வியட்னாம் குழுவை சிங்கப்பூர் இன்றிரவு சந்திக்கிறது. எதிரணி மண்ணைக் கவ்வும் வகையில் வலுவான வியூகத்தை வகுக்கும் முக்கிய பொறுப்பு சிங்கப்பூரின் புதிய பயிற்றுவிப் பாளர் வி. சுந்தரமூர்த்தியின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் என்கிற முறையில் போட்டியை ஏற்று நடத்தும் மியன்மாருக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற ஆட்டத்தில் சுந்தரம் தமது முதல் வெற்றியைச் சுவைத்தார்.

முதல் ஆட்டத்திலேயே வெற்றிக் கனியைப் பறிக்க முடிந் தது சுந்தரத்துக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் முன்னேற்றப் பாதையை நோக்கி சிங்கப்பூர் குழு தொடர்ந்து பயணம் செய்யவேண்டும் என்று அவர் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டுள்ளார். அதற்கு ஏற்றாற்போல இன்றைய இறுதிப் போட்டிக்கு சிங்கப்பூர் வீரர்களை அவர் தயார்படுத்தி வருகிறார். இறுதிப் போட்டி நெருங்கி வரும் வேளையில் வியட்னாம் குழுவினர் மியன்மாரில் உள்ள முக்கிய சுற்றலா தளமான ‌ஷுவேட கோன் பகோடாவுக்குப் பயணம் மேற்கொண்டனர். ஆனால் அதே நேரத்தில் சுந்தரத்தின் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். கிண்ணம் வெல்லும் கனவுக்கு எவ்வித தடங்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் சுந்தரம் கவனமாக இருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று.

பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தியின் (வலது) மேற்பார்வையின் கீழ் இறுதிப் போட்டிக்கு முன்பு தீவிரப் பயிற்சியில் ஈடுபடும் சிங்கப்பூர் வீரர்கள். படம்: தி நியூ பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!