அரையிறுதியில் அமெரிக்கா

சியாட்டில்: கோப்பா அமெ­ரிக்கா காற்­பந்துப் போட்­டி­களில் நேற்று அதிகாலை எக்­வ­டோரை எதிர்­கொண்ட அமெ­ரிக்கா, கிளின்ட் டெம்சி முயற்­சி­யில் 2=1 என்ற கோல் எண்­ணிக்கை­யில் வெற்றி பெற்றது. இதில் தொடர்ந்து மூன்றா­வது ஆட்­டத்­தில் கிளின்ட் டெம்சி கோல் போட்­ட­தோடு மட்­டு­மல் லாது பிற்பாதி ஆட்­டத்­தில் சக வீரர் கியாசி ஸார்டெஸ் கோல் போட உதவி­யாக பந்தை அவரு டைய பாதையில் தட்டிக் கொடுத் தார். இதன்மூலம் தென்னமெ­ரிக்கா வில் தனது வடக்­குப் பகு­தி­யில் அல்லாத தென்னமெ­ரிக்க நாடு ஒன்றை அமெ­ரிக்கா வென்­றுள்­ளது இதுவே இரண்டா­வது முறை என்று செய்தித் தக­வல்­கள் கூறு கின்றன. இனி எதி­ர்­வ­ரும் செவ்­வாய்க்கிழமை­யன்று ஹூஸ்டன் நகரில் அர்­ஜெண்­டினாவையோ வெனிசுவே­லாவையோ அமெ­ரிக்க அணி சந்திக்கும். நேற்றைய ஆட்­டத்­தில் இரண் டாம் பாதியின் தொடக்­கத்­திலேயே எக்­­வ­டோ­ரின் அன்­டோ­னியோ வெலன்­சி­யா­வும் அமெ­ரிக்க மத்திய திடல் வீரரான ஜெர்மைன் ஜோன்சும் மைதா­னத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

அமெ­ரிக்க வீரரான ஜெர்மைன் ஜோன்ஸ் மற்ற இரு அமெ­ரிக்க வீரர்­க­ளான அலி­யாண்­டிரோ பெடோயோ, போபி உட் ஆகி­யோ­ரு­டன் தப்­பாட்­டம் கார­ண­மாக இரண்டா­வது மஞ்சள் அட்டை பெற்று அரை­யி­றுதி ஆட்­டத்­தில் விளை­யா­டும் தகுதியை இழந்­துள்­ ளார். எக்­­வ­டோ­ருக்­கு எதிரான ஆட்­டத்­தின் 22ஆம் நிமி­டத்­தில் கோல் போட்ட கிளின்ட் டெம்சி, பின்னர் 65ஆம் நிமி­டத்­தில் இரண்டாம் கோல் போடு­வதற்கும் உதவினார். இதைத் தொடர்ந்து எக்­­வ­டோர் சார்பாக மைக்கல் அரோயோ கோல் போட, என்னர் வெலன்­சியா கோல் போடு­வதற்கு தமக்­குக் கிடைத்த இரண்டு பொன்னான வாய்ப்­பு­களை வீண­டித்­தார்.

கோப்பா அமெரிக்கா காற்பந்துத் தொடரில் எக்வடோருக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் முதல் கோலை முட்டும் கிளின்ட் டெம்சி (இடது). படம்: யுஎஸ்ஏ டுடே ஸ்போர்ட்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!