34 சமூக மன்றங்களில் நேரடி ஒளிபரப்பு

ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் சிங்கப்பூரில் உள்ள 34 சமூக மன்றங்களில் வரும் திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு நேரடி ஒளிபரப்பாகத் திரையிடப்படும். பிரான்சுக்கும் போர்ச்சுகலுக்கும் இடையிலான இறுதி ஆட்டத்தை சமூக மன்றங்களில் நேரடி ஒளிபரப்பாகத் திரையிடுவது குறித்து மக்கள் கழகம் மகிழ்ச்சி தெரிவித்தது. இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டார் ஆகியோருடன் ஒன்றாக நேரத்தைச் செலவழிக்க வாய்ப்பு அமைகிறது என்று அது தெரிவித்தது.

தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்தில் இறுதி ஆட்டத்துக்கு முன்பு காற்பந்து தொடர்பாகப் பல்வேறு போட்டிகளும் ரசிகர்களுக்காக நடத்தப்படும். ஆயர் ராஜா, பீஷான், பிராடல் ஹைட்ஸ், புக்கிட் பாத்தோக், புக்கிட் பாத்தோக் ஈஸ்ட், போன விஸ்தா, கேன்பரா, சாங்கி சீமெய், சொங் பாங், சுவா சூ காங், சி யுவேன், கிளமெண்டி, யூனோஸ், ஃபெங்ஷான், கெக் போ வில், ஹவ்காங், ஜூரோங் கிரீன், ஜூரோங் ஸ்பிரிங், கம்போங் கிளாம், நீ சூன் சவுத், பாசிர் ரிஸ் எலாயஸ், பொத்தோங் பாசிர், பெங்கோல் 21, செங்காங், சிராங்கூன், தெம்பனிஸ் வெஸ்ட், தோ பாயோ சென்ட்ரல், உலு பாண்டான், வாம்போ, உட்லண்ட்ஸ், இயூ டீ, இயோ சூ காங், யூஹுவா, செங்ஹுவா ஆகிய சமூக மன்றங்களில் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பு திரையிடப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!