சிங்கப்பூர் திரும்பும் ஜீத்தா சிங்

சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜீத்தா சிங், மலேசியாவில் தாம் வகித்து வந்த ஃபிரன்ஸ் யுனை டெட் காற்பந்துப் பயிலகத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியிலிருந்து விலகி சிங்கப்பூர் திரும்ப இருக்கிறார். பாகாங்கில் செயல்பட்டு வரும் பயிலகம் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்படும் என்று நம்பப்படுகிறது. சிங்கப்பூருக்குத் திரும்பும் ஜீத்தா சிங், இங்கு காற்பந்துக்கு மேலும் பங்காற்ற விருப்பம் தெரி வித்துள்ளார். 1968ஆம் ஆண் டில் சிங்கப்பூர் காற்பந்துக் குழுவுக்கு விளையாடிய ஜீத்தா சிங், 1979ஆம் ஆண்டிலிருந்து 1984ஆம் ஆண்டு வரை அதன் பயிற்றுவிப்பாளராக இருந்தார். 1980ல் அவரது தலைமையின்கீழ் மலேசிய கிண்ணத்தை சிங்கப்பூர் வென்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!