இத்தாலி சமநிலை

பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளுக் கான உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டி தகுதிச் சுற்றில் இத்தாலியும் ஸ்பெயினும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டுள்ளன. ஆட்டம் இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்றபோதிலும் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தி இத்தாலிக்கு நெருக்குதலைக் கொடுத்தது. இருப்பினும், இத்தாலியின் தற்காப்பு பிடிவாதம் பிடிக்க இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது.

பிற்பாதி ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் இத்தாலிய கோல்காப்பாளர் புஃபோன் செய்த பிழையால் ஸ்பெயின் கோல் போட்டு முன்னிலை வகித்தது. தங்கள் நம்பிக்கைக்குரிய கோல்காப்பாளர் வழக்கத்துக்கு மாறாக செய்த பிழையால் ஏற்பட்ட பின்னடைவைக் கண்டு இத்தாலிய ரசிகர்கள் அதிர்ந்தனர். இருப்பினும், ஆட்டம் முடிய எட்டு நிமிடங்கள் இருந்தபோது இத்தாலிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதைக் கோலாக மாற்றினார் டேனியேல் டி ரோஸி. மற்றோர் ஆட்டத்தில் அண்மை யில் நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த வேல்ஸ் 2-2 எனும் கோல் கணக்கில் ஆஸ்திரியாவுடன் சமநிலை கண்டது. இன்னோர் ஆட்டத்தில் அடுத்தடுத்து பல கோல்களைப் போட்டு கொசோவோவை 6-0 எனும் கோல் கணக்கில் குரோவே‌ஷியா பந்தாடியது. துருக்கிக்கும் உக்ரேனுக்கும் இடையிலான ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!