பட்டியலில் முன்னேறிய செல்சி

சவுத்ஹேம்டன் குழுவை வீழ்த்திய செல்சி பிரிமியர் லீக் காற்பந்து பட்டியலில் நான்காம் நிலைக்கு முன்னேறியுள்ளது. செல்சியின் ஈடன் ஹசார்ட் உதைத்த பந்து சவுத்ஹேம்டன் கோல்காப்பாளர் ஃப்ரேசர் ஃபோஸ்டரின் கால்களுக்கு இடையே புகுந்து கோல் வலைக் குள் சென்றது. ஆட்டம் தொடங் கிய ஆறாவது நிமிடத்தில் அந்த கோல் விழுந்தது.

சவுத்ஹேம்டன் வீரர்களுக்கு பலமுறை பந்து கிடைத்தாலும் செல்சியின் அரணை உடைத்து அதை கோலாக மாற்றமுடியாமல் அவர்கள் தடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதேசமயம் செல்சியின் ஹசார்ட், கோஸ்டாவின் கோல் போடும் பல முயற்சிகளை அவர்கள் தடுத்தனர்.

ஆனால், கோஸ்டா ஃபோஸ் டரைத் தாண்டி 55வது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டார். இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றது. இது பிரிமியர் லீக் காற்பந்து தொடரில் செல்சியின் நான்காவது தொடர் வெற்றியாகும். கடந்த பருவத்தில் நான்கு கோல்களை மட்டுமே போட்ட ஹசார்ட், இந்த பருவத்தில் இதுவரை ஐந்து கோல்களைப் போட்டுள்ளார். மேலும் பிரிமியர் லீக்கில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களாக அவர் கோல் போட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

செல்சியின் ஹசார்ட் (நடுவில்) கோல் வலை நோக்கி உதைத்த பந்தை வலைக்குள் செல்லவிடாமல் திசை திருப்பினார் சவுத்ஹேம்டன் வீரர் ஜோஸ் ஃபோன்டி (இடது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!