163 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து

ராஜ்கோட்: அஸ்வின்னின் 11அவது டெஸ்ட் அரை சதம் கைகொடுக்க இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியின் முன்னணி 49க்குக் குறைக்கப் பட்டது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்ங்கிஸில் இங்கிலாந்து ஏற்கெனவே 537 ஓட்டங்கள் குவித்திருந்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா ஐந்து விக்கெட்டுகள் இழந்து 349 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நேற்று நான்காம் நாள் ஆட்டத்தின்போது களம் இறங்கினார் அஸ்வின். இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் இந்தியாவின் ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியின் ஜோசஃப் ரூட் (124), மொயீன் அலி(117), பெஞ்சமின் ஸ்டோக்ஸ்(128) சதம் கடந்தனர். இந்திய அணிக்காக ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் கைப் பற்றினார். அதைத் தொடர்ந்து நேற்று முன் தினம், 3ஆம் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 319 ஓட்டங்கள் குவித்தது இந்தியா.

நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் போது அஸ்வின் அடித்த பந்தைப் பிடித்தும் தமது பிடியிலிருந்து நழுவ விட்ட இங்கிலாந்து விக்கெட்கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ்வை (வலது) அதிர்ச்சியுடன் பார்க்கும் சக இங்கிலாந்து ஆட்டக்காரர் ஜோ ரூட். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!