பதவி விலகிய குக்

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப் பிலிருந்து அலெஸ்டர் குக் பதவி விலகியுள்ளார். இங்கிலாந்து அணித் தலை வராகப் பதவி வகித்து அதிக சாதனை படைத்தவர் குக். கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அணித் தலைவராகப் பொறுப்பேற்ற குக், 2013 மற்றும் 2015ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றார். இவரது தலைமையில் 2012ல் இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றது. அண்மையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா தொடரை 4=0 எனக் கைப்பற்றியது. இதனால் குக்கின் அணித் தலைவர் பதவிக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கொலின் குரோவ்சையும் வாரியத்தின் இயக்குநரான ஸ்டாரசையும் குக் சந்தித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!