ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய கோல்காப்பாளர்

கோல்கத்தா: இந்தியக் காற்பந்து அணியின் கோல்காப்பாளர் சுப்ரத்தா பால் ‘டெர்பியூட்டாலின்’ எனும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை எடுத்துக்கொண்டது முதல் சோதனையில் உறுதியாகி உள்ளது. ஆனால், தாம் ஒருபோதும் ஊக்க மருந்து உட்கொண்டதில்லை என மறுத்துவரும் பால், இரண்டாவது மாதிரியை சோதனைக்கு உட்படுத்தச் சொல்லி முறையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.