பயர்ன் அதிர்ச்சி தோல்வி

மியூனிக்: ஜெர்மானிய காற்பந்து லீக் பட்டியலின் முதல் இடத்தில் இருக்கும் பயர்ன் மியூனிக் குழு, ஜெர்மானியக் கிண்ண அரை இறுதி ஆட்டத்தில் பொருஸியா டோர்ட்மண்ட் குழுவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோற்று அதிர்ச்சி அளித்தது. ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் இருந்தபோது உஸ்மான் டெம்பெலே அடித்த அற்புதமான கோல் பயர்ன் குழுவின் இறுதிச் சுற்றுக் கனவைத் தகர்த்தது. இடைவேளையின்போது 2-1 என பொருஸியா குழு பின் தங்கியிருந்தது. முன்னதாக, மூன்று வாரங்களுக்குமுன் நடந்த ஜெர்மானிய லீக் போட்டி யில் பயர்ன் குழு 4-1 என்ற கோல் கணக்கில் பொருஸியா குழுவைத் தோற்கடித்தது குறிப் பிடத்தக்கது.