சுடச் சுடச் செய்திகள்

விக்கெட்டுகளை அள்ளிய குல்தீப், ஜடேஜா

கொழும்பு: இலங்கை பிரசிடென்ட் லெவன் அணியும் இந்திய கிரிக் கெட் அணியும் மோதிய பயிற்சி ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பந்தடித்த இலங்கை பிரசிடென்ட் லெவன் அணி 55.5 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக குண திலகே 74, திரிமானே 59 ஓட்டங்களை எடுத்தனர். மற்ற முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 14 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 3, முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப் பற்றினர்.

இதைத் தொடர்ந்து பந்து அடித்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அபினவ் முகுந்த் 0, புஜாரா 12, ராகுல் 54 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். கோஹ்லி 34 ஓட்டங்களுடனும் ரகானே 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக் காமல் இருந்தனர். நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது 68 ஓவர்களில் 9 விக்கெட்டு கள் இழப்பிற்கு 312 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி, அத்துடன் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இதனால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. இந்தியா, இலங்கை அணி களுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 26ஆம் தேதி புதன்கிழமையன்று காலே விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon