தொடர்ந்து தடுமாறும் இங்கிலாந்து

ஆண்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோற்ற இங்கிலாந்து அணி, 2வது போட்டியிலும்  குறைந்த ஓட்டங் களில் சுருண்டு தடுமாறி வருகிறது.
நேற்று முன்தினம் தொடங் கிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பந்தடித்த இங்கிலாந்து, எதிரணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 93 ஒட்டத்திற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
மொயின் அலி, பேரிஸ்டோவ், போக்ஸ் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.
முதல் இன்னிங்சில் இங்கி லாந்து 61 ஓவரில் 187 ஒட்டங் களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்பின் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்கள் எடுத்தது.
பிரத்வைட் 11, கேம்பல் 16 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்க நேற்று 2வது நாள் ஆட்டம் நடைபெறவிருந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது