இன்னொரு தொடருக்கு இலக்கு

ஹேமில்டன்: நியூசிலாந்து மண்ணில் முதன்முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி சாதிக்கும் முனைப்புடன் அவ்வணிக்கு எதிராக இன்று நடக்கவிருக்கும் மூன்­ றாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கவுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்­தமட்டில் கடந்த மூன்று மாத காலமும் மறக்க முடியாத தருணமாகிவிட்டது. ஆஸ்திரேலியாவில் முதன்­முறையாக டெஸ்ட் தொட­ ரையும் இருதரப்பு ஒருநாள் தொடரையும் வென்ற இந்திய அணி, அதன்பின் நியூ­சிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரையும் ஆகப் பெரிய வித்தியாசத்தில் கைப்பற்றி­ யது.
இந்த நிலையில், இன்­றைய ஆட்டத்தில் வென்று டி20 தொடரையும் இந்திய அணி தன்வசமாக்கும் பட்சத்தில் அது பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் ஆகி­ விடும்.
முதல் டி20 போட்டியில் மரண அடி வாங்கியபோதும் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய வீரர்கள் எழுச்சியுடன் ஆட, தொடர் 1-=1 எனச் சமனுக்கு வந்தது.
முதல் இரு போட்டிகளில் விளையாடிய அதே பதினொ­ருவரையே இந்திய அணி இன்றும் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை அணியில் ஏதேனும் மாற்றம் செய்ய நிர்வாகம் நினைத்தால், யுஸ்வேந்திர சகலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம்.
கடந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்ததோடு அனைத்­துலக டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்­தோர் பட்டியலில் முதலிடத்­ தையும் எட்டினார் இந்திய அணியின் தற்காலிகத் தலைவரான ரோகித் சர்மா. இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ‌ஷிகர் தவானுடன் இணைந்து இன்றைய ஆட்டத்திலும் அவர் நல்லதோர் அடித்த­ளத்தை அமைத்துத் தந்தாலே பாதிக் கிணறு தாண்டியது போலத்தான்.
அதே வேளையில், இந்திய அணிப் பந்துவீச்சாளர்களும் இரண்டாவது ஆட்டத்தில் இருந்ததைப் போன்ற செயல்­பாட்டை இன்றும் வெளிப்­ படுத்த வேண்டியது அவ­சி­ யம்.
ஏனெனில், நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கோலின் மன்ரோவும் டிம் சைஃபெர்ட்­டும் அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போனவர்கள்.
ஒருநாள் போட்டித் தொடரை இழந்துவிட்ட நிலையில், டி20 தொடரை ஏனும் வென்று ரசிகர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க வேண்டிய இக்கட்டில் நியூ­சிலாந்து இருக்கிறது.
அதற்கு நடுவரிசைப் பந்தடிப்பாளர்களும் கைகொடுக்க வேண்டும் என அந்த அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
முதல் இரு போட்டிகளில் அதிக ஓட்டங்களை விட்டுக்­ கொடுத்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் கஹலைனுக்குப் பதிலாக பிளேர் டிக்னர் அல்லது டக் பிரேஸ்வெல் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
சிங்கப்பூர் நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்குப் போட்டி தொடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!