சிங்கப்பூர் வரும் ஸ்பர்ஸ் குழு

அணித் தலைவர் ஹேரி கேன் தலைமையிலான ஸ்பர்ஸ் குழு வரும் ஜூலை மாதம் சிங்கப்பூர் வருகிறது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி யில் ஸ்பர்ஸ் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
ஜூலை மாதத்தில் தேசிய விளையாட்டரங் கத்தில் நடைபெற இருக்கும் அனைத் துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் ஸ்பர்ஸ் குழு விளை யாடும் என்று நம்பப் படுகிறது.
இப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், யுவென்டஸ், இன்டர் மிலான் ஆகிய குழுக்களும் பங்கெடுக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.