அரையிறுதியில் பி.வி. சிந்து

சிங்கப்பூர் பொது விருது பூப்பந்துப் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் ஓர் ஆட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி. சிந்துவும் உலக ஜூனியர் வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் வெண்கலம் வென்ற சீன வீராங்கனை காய் யான்யானும் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடுமையாக போராடிய சிந்து, 21=13, 17=21, 21=14 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தப் பருவத் தில் இரண்டு போட்டிகளில் சிந்து அரையிறுதி வரை முன்னே றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், ஜப்பான் வீராங் கனை நஜோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் துவக்கம் முதலே தடுமாறிய சாய்னா முதல் செட்டை விரைவில் இழந்தார். அடுத்த செட்டில் சற்று போராடினார். ஆனாலும் அவரால் வெற்றி இலக்கை எட்ட முடிய வில்லை. இந்த ஆட்டத்தில், 21=8, 21=13 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். அரையிறுதியில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒகுஹரா - பி.வி. சிந்து மோதுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!