ஃபிஃபா: இந்தியாவுக்கு 101வது இடம்

ஜுரிக்: உலக காற்பந்து சம்மேளனம் (ஃபீஃபா) காற்பந்து அணி­களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பெல்ஜியம் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது.
போர்ச்சுக்கல் 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்தையும் குரோ‌ஷியா 6வது இடத்தையும், ஸ்பெயின் 7வது இடத்தையும் உருகுவே 8வது இடத்தையும் சுவிட்சர்லாந்து 9வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியா 101வது இடத்தில் உள்ளது. ஆசிய நாடுகளில் ஈரான் 20வது இடத்திலும் ஜப்பான் 28வது இடத்திலும், கொரியா 37வது இடத்திலும் கத்தார் 55வது இடத்திலும் உள்ளன.

தென்கிழக்காசிய நாடுகளில் வியட்னாம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தரவரிசைப் புள்ளியில் இரண்டு இடங்கள் முன்னேறி இப்போது 96வது இடத்தைப் பிடித்துள்ளது வியட்னாம். அடுத்தபடியாக தாய்லாந்து 116வது இடத்தில் உள்ளது. பிலிப்பீன்ஸ் 126, மியன்மார் 138, இந்தோனீசியா 140வது இடத்தையும் சிங்கப்பூர் 142வது இடத்தையும் பிடித்துள்ளன. 
மலேசியா 9 இடங்கள் முன்னேறி 159வது இடத்தைப் பிடித்­துள்ளது. ­கம்போடியா 169வது இடத்தைப் பிடித்துள்ளது

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலுக்கு வந்துசேர்ந்த காற்பந்து நட்சத்திரங்களான ஸ்பர்ஸ் குழுவின் சோங் ஹியூங் மின், லுக்கஸ் மோரா ஆகியோரை சிங்கப்பூர் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பதோடு
அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jul 2019

ஸ்பர்ஸுக்கு வரவேற்பு