ரசிகர்கள்: ‘அண்ணாத்த’ தீபாவளிக்கு வரமாட்டாரா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் 'அண்ணாத்த' படம் நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பின்பு அந்த அறிவிப்பை உறுதி செய்யும் வகையில் டுவிட்டரிலும் பதிவிட்டிருந்தது.

ஆனால் படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் படத்திற்கான விளம்பரமோ முன்னோட்டக் காட்சியோ வெளியாகாமல் இருக்கிறது. அதனால் படம் தீபாவளி பந்தயத்தில் இருந்து விலகிவிட்டதோ என்று ரஜினி ரசிகர்கள் சந்தேகிக்கிறார்கள்.

"சூப்பர் ஸ்டாரின் படம் வெளியாக இருக்கிறது. இந்நேரம் அதற்கான வேலைகளைத் தொடங்கவேண்டாமா?" என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரசிகர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் படத்தின் விளம்பரத்திற்கு இரண்டு வாரங்கள் போதும் என்று டுவிட் செய்துள்ளார்.

இந்நிலையில் 'தலைவர் 169' படத்தை 'ஏஜிஎஸ்' நிறுவனம் தயாரிக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. 'தலைவர் 169' படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!