மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஒரு பருவத்தில் ஆக அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மான்செஸ்டர் சிட்டி நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட்.
வியாழக்கிழமை (4 மே) அதிகாலை நடைபெற்ற வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாலண்ட் இந்த லீக் பருவத்துக்கான தனது 35வது கோலைப் போட்டு அசத்தினார்.
வெஸ்ட் ஹேமை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது சிட்டி.
இரண்டாவது கோலைப் போட்டார் நார்வேயைச் சேர்ந்த ஹாலண்ட்.
நேத்தன் எக்கே, ஃபில் ஃபோடன் ஆகியோர் சிட்டியின் இதர இரண்டு கோல்களைப் போட்டனர்.
வெறித்தனமாக கோல் போடும் ஹாலண்டைத் தடுப்பது பல குழுக்களுக்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறது.