காற்பந்து: சிங்கப்பூரை வென்ற தென்கொரியா

காற்பந்து: சிங்கப்பூரை வென்ற தென்கொரியா

1 mins read
024a3b11-3ab5-4a53-ad5e-cc7f873e0e5e
ஆட்டத்தின் முதல் கோலைப் போடும் தென்கொரியா. - படம்: இபிஏ

சோல்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை 5-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது தென்கொரியா.

முற்பாதியின் பெரும்பகுதிக்கு கோல் ஏதும் விட்டுக்கொடுக்காமல் இருந்தது சிங்கப்பூர். எனினும், 44வது நிமிடத்தில் முதல் கோல் விழுந்த பிறகு கோல் மழை பொழியத் தொடங்கியது.

முதல் கோலைப் போட்டார் சோ குவே-சுங். 49வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையை இரண்டாக்கினார் ஹுவாங் ஹீ-சான்.

63வது நிமிடத்தில் தென்கொரிய அணித் தலைவரும் டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர் நட்சத்திரமுமான சொன் ஹியோங்-மின் தென்கொரியாவின் மூன்றாவது கோலைப் போட்டார். அவரின் கோல்தான் ஆகச் சிறப்பானதாக அமைந்தது.

68வது ஹுவாங் உய்-ஜோ பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். 85வது நிமிடத்தில் தென்கொரியாவின் ஐந்தாவது கோலைப் போட்டார் லீ காங்-இன்.

இந்த ஆட்டம் 2026 உலகக் கிண்ணப் போட்டி மட்டுமின்றி 2027ஆம் ஆண்டு ஆசிய கிண்ணப் போட்டிக்கான தகுதியாட்டமும்கூட.

குறிப்புச் சொற்கள்