சான் அண்டோனியா: டெக்சஸ் கோல்ஃப் பொது விருதுப் போட்டியில் அமெரிக்க கோல்ஃப் வீரரான 22 வயது அக்ஷே பாட்டியா வெற்றி பெற்றுள்ளார்.
ஏப்ரல் 7ஆம் தேதியன்று சான் அண்டோனியோ கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவர் சக நாட்டவரான 31 வயது டெனி மெக்கார்த்தியைத் தோற்கடித்தார்.
தோள்பட்டையில் காயம் ஏற்பட்டும் மனந்தளராமல் போராடிய அக்ஷே, வெற்றி பெற்று அடுத்த வாரம் நடைபெறும் மாஸ்டர்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.