இந்தியா

வாஷிங்டன்: அமெரிக்காவிலும் கனடாவிலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சதித் திட்டங்களில் இந்திய உளவுத் துறையின் பங்கு இருப்பதாகக் கூறப்படுவதை மிகக் கடுமையாகக் கருதுகிறோம் என்று அமெரிக்கா திங்கட்கிழமை (ஏப்ரல் 29) அன்று தெரிவித்தது.
ஸ்ரீநகர்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வாக்காளர்களுக்காக மட்டும் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட இருக்கிறது.
அகமதாபாத்: இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.230 கோடி மதிப்பிலான போதைப்பொருளை வைத்திருந்ததாக நம்பப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு: இலங்கையில் $209 மில்லியன் செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனத்திடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அமைச்சரவை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்திய ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையைச் சேர்ந்த விமானி மேஜர் சி. தீனேஸ்வரனுக்குச் சிறந்த அனைத்துலக மாணவ அதிகாரிக்கு வழங்கப்படும் ‘சதர்ன் ஸ்டார்’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இப்பதக்கத்தை வென்ற மூன்றாவது சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி இவர் ஆவார். இந்திய ராணுவக் கல்லூரியில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்தப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.