கவிதை

சிங்கப்பூருக்கென்று கவிஞர் மா. அன்பழகன் எழுதித் தயாரித்துள்ள புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைப் பேராசிரியர் சுப திண்ணப்பன் திரையில் அறிமுகப்படுத்தினார்.  தமிழ்த் திரையுலக இளம் இசையமைப்பாளர் கோகுல் ஆதவ் இப்பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.
தேசியக் கலைகள் மன்றம் நடத்திய தங்கமுனைப் போட்டியில் 2023ஆம் ஆண்டு கவிதைக்கான முதல் பரிசை வென்ற திருவாட்டி கங்காவின் கவிதைகளை “நதியோடு கவிப்பொழுது” எனும் பெயரில் பின்னணி இசையோடு வாசிக்கும் நிகழ்வு மார்ச் 24ஆம் தேதி ஞாயிறு மாலை நடந்தேறியது. நிகழ்வு திட்டமிட்டபடி இரவு 7.00க்கும் 8.00 மணிக்கும் இரண்டு முறை வெவ்வேறு பார்வையாளர்களுக்காகப் படைக்கப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு தேசிய கலைகள் மன்றம் நடத்திய தங்க முனைப் போட்டிகளில் கவிதைப் பிரிவில் முதல் பரிசை வென்ற திருவாட்டி கங்காவின் கவிதைப் படைப்பு ‘நதியோடு கவிப்பொழுது’. நிகழ்ச்சியில் தமது கவிதைகளைப் பின்னணி இசையுடன் படைக்கவிருக்கிறார் கங்கா.
சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள், கவிதை ஆர்வலர்கள் ஆகியோருடன் கவிமாலை அமைப்பு ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று மாதாந்திரச் சந்திப்பை நடத்திவருகிறது.  
தொடக்கநிலை மாணவர்களிடையே தமிழ் மற்றும் கவிதை மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கவிமாலை சிங்கப்பூர் அமைப்பு ஆண்டுதோறும் கவிதை சொல்லும் போட்டியை நடத்தி வருகிறது.